
இன்னைக்கு ஒரு சின்ன பாறையை
உடைக்கணும்னா கூட நாம JCB, பெரிய பெரிய டிரில் மெஷின்,
டைனமைட் வெடின்னு பல நவீன இயந்திரங்களை நம்பி தான் இருக்கோம். இதெல்லாம்
இருந்தும் ஒரு பாறையை சரியான வடிவத்துல உடைக்கிறதுங்கிறது இன்னைக்கு
வரைக்கும் பெரிய சவாலான விஷயம் தான்.
ஆனா
கொஞ்சம் யோசிச்சு பாருங்க... தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் சிற்பங்கள்,
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் - இதெல்லாம் எப்படி கட்டிருப்பாங்க?
பல நூறு டன் எடை கொண்ட பிரம்மாண்டமான கருங்கல் பாறைகளை எந்த ஒரு கரண்ட்,
மிஷின், டைமண்ட் கட்டர் no வசதியும் இல்லாத அந்த காலத்துல எப்படி அச்சு
பிசகாம வெட்டி எடுத்தாங்க?
நம்ம
முன்னோர்கள் செஞ்சது மேஜிக் கிடையாது, அது பக்கா சயின்ஸ்! இயற்கையை ரொம்ப
ஆழமா கவனிச்சு அவங்க உருவாக்குன ஒரு எளிமையான, ஆனா மிக பிரம்மாண்டமான
தொழில்நுட்பம் தான் இது.
அந்த
காலத்துல பாறைகளை உடைக்க அவங்க பயன்படுத்துன ஆயுதம் வெறும் "காய்ந்த
மரக்கட்டையும், தண்ணீரும்" மட்டும் தான்! நம்ப முடியலையா? ஆனா இதுதான்
உண்மை.
முதல்ல எந்த இடத்துல பாறையை உடைக்கணுமோ, அந்த இடத்துல உளியை வெச்சு நேர்கோட்டில் சின்ன சின்ன துளைகளை வரிசையா போடுவாங்க.
அதுக்கப்புறம்
நல்லா காய்ந்த, உறுதியான மரக்கட்டைகளை ஆப்பு மாதிரி செதுக்கி, அந்த
துளைகளுக்குள்ள விட்டு சுத்தியலால் இறுக்கமா அடிச்சு மாட்டுவாங்க.
இப்போ
தான் அந்த மேஜிக் நடக்கும்! அந்த காய்ந்த மரக்கட்டைகள் மேல தொடர்ந்து
தண்ணீரை ஊற்றிக்கிட்டே இருப்பாங்க. மரக்கட்டை தண்ணீரை உறிஞ்ச உறிஞ்ச, அது
வீங்க ஆரம்பிக்கும்.
ஒரு கட்டத்துல
துளைக்குள்ள இருக்கிற மரம் விரிவடைந்து, பாறைக்கு உள்ளே கொடுக்கிற
இயற்கையான அழுத்தம் பல ஆயிரம் டன் எடை கொண்ட மெஷின் கொடுக்கிற அழுத்தத்தை
விட பல மடங்கு அதிகமா இருக்கும். அந்த அபாரமான அழுத்தத்துல, எவ்வளவு பெரிய
கடினமான கருங்கல்லாக இருந்தாலும் சரி, அந்த நேர்கோட்டில் அப்படியே "க்ராக்"
ஆகி ரெண்டா பொளந்துக்கும்!
நவீன
இயந்திரங்கள் பல நூறு குதிரைத்திறன் கொண்டு செய்யுற வேலையை, நம்ம
முன்னோர்கள் தங்களது அறிவாற்றலாலும், பொறுமையாலும், இயற்கையின் உதவியோடும்
ரொம்ப சாதாரணமாக செஞ்சு முடிச்சாங்க. இதுதான் உண்மையான பொறியியல் அற்புதம்!
நம்ம
முன்னோர்களின் இந்த வியக்க வைக்கும் அறிவாற்றலை பற்றி நீங்க என்ன
நினைக்கிறீங்க?
நம்ம ஊர்ல இன்னைக்கு வரைக்கும் இந்த முறையை யாராவது பயன்படுத்துறத நீங்க பார்த்திருக்கீங்களா?
Thanks & Copy from -#DeepTalksTamil #DeepFacts #TamilHistory #AncientEngineering #CholaArchitecture
