ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள். . .

மணக்கால் அய்யம்பேட்டை | 6:48 PM | Best Blogger Tips
இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை.

பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.

சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.

இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அரசு கூட ஆட்டிசம் என்பதை தனித்துறையாக கொள்ளாமல், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறு பட்ட அளவுகளில் இருக்கும் – மிக மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.

ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள் . . .

*எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது

*கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது

*பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல்

*காரணமற்ற சிரிப்பு

*மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்

*தனது விருப்பத்தை குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்

*சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது

*பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பார்கள்

*பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வார்கள்

*தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்

*காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை அடைவார்கள்

*வலி பற்றிய பிரக்ஞை இல்லாதிருத்தல் அல்லது வலியை உணராது இருப்பது

*வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளை தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்

*வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்

*சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்புவதில்லை

*தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது

*பொருளற்ற சொற்களை திருப்ப திருப்பச் சொல்லுவது

*பொருட்களை சுற்றி விட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது
குட்டி(kutty)
ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள். . .

இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை.

பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.

ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.

சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.

இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அரசு கூட ஆட்டிசம் என்பதை தனித்துறையாக கொள்ளாமல், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறு பட்ட அளவுகளில் இருக்கும் – மிக மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.

ஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள் . . .

*எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது

*கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது

*பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல்

*காரணமற்ற சிரிப்பு

*மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்

*தனது விருப்பத்தை குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்

*சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது

*பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பார்கள்

*பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வார்கள்

*தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்

*காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை அடைவார்கள்

*வலி பற்றிய பிரக்ஞை இல்லாதிருத்தல் அல்லது வலியை உணராது இருப்பது

*வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளை தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்

*வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்

*சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்புவதில்லை

*தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது

*பொருளற்ற சொற்களை திருப்ப திருப்பச் சொல்லுவது

*பொருட்களை சுற்றி விட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது 
 
 
 
 
 
 
 
 
Thanks to குட்டி(kutty)
 

பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:47 PM | Best Blogger Tips


பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்

 

 Thanks to FB Karthikeyan Mathan

சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:45 PM | Best Blogger Tips
மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக்கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

சுக்கு மொழிகள் பத்து:

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பி செங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,
புரதம் 8.6
கொழுப்பு 6.4
கால்சியம் 0.1
பாஸ்பரஸ் 0.15
இரும்பு 0.011
சோடியம் 0.03
பொட்டாசியம் 1.4
கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவு
உயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.

சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப் பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.
சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.

ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.

உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.

இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.
சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு 25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவு கலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.

இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.
சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.

இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளை விரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும்.

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

காலை மாலை இனிய பானம்:

பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.

பவுடர் தயாரிப்பு:

சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.

அவையாவன:

கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் தயாரிக்க

ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.

செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.
http://mmimages.maalaimalar.com/Articles/2011/Feb/2bc8f40b-df04-40ca-abfc-f78bbf2e6417_S_secvpf.gif

சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:43 PM | Best Blogger Tips
சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில் கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு குணமாகும்.
நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின் வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம் மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு, அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து, குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும் காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதனால் நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்.

எலும்புத் தேய்மானம் தடுப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:39 PM | Best Blogger Tips
பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறாஞூகள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவது தான்.

எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்: இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயனிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர். சூரிய ஒளியினால் கிடைக்ககூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பதுஎலும்பு. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி. தேவைப்படுகிறது. இளம்வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும். அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை: அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.
பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்சியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருதுவதும் கால்சியம் குறைய காரணமாகின்றது.

கால்சியம் நிறைந்த உணவுகள்: பால் மற்றும் பால் பொருட்களில் காட்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்சியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.
அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறி வேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.
எள், கால்சியம் சத்து நிறைந்தø ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ரு கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி கூழாக செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்.
எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும்,வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த öலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்குஉண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்: எலும்புகள் உறுதியாக உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும். வலுவான தடைகள் எலும்புகளை பாதுகாக்கும்.
ஒல்லியாக இருப்பது தான் அழகு. ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பலமாக உறுதியாக இருப்பது தான் அழகு. ஆரோக்கியம்.
பிற்காலத்திற்கான பயத்தை சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும். இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிட்டும்.

 
 -டாக்டர் இரா. பத்மப்ரியா, சித்தமருத்துவர்.

டயபடிஸ் வரக் காரணம் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:37 PM | Best Blogger Tips
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Main_symptoms_of_diabetes.png/300px-Main_symptoms_of_diabetes.pngடயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

டயபடிஸ் வரக் காரணம் என்ன?

நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

க்ளுகோஸ்

லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

“இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

வெள்ளை சர்க்கரை 64

முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

வெள்ளை ரொட்டி 87

ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

காலை ஐந்து இட்டிலி

மதியம் சாதம், சாம்பார், ரசம்,

மாலை வடை, டீ காப்பி

இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

இட்டிலி மற்றும் சப்பாத்தி.

சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?
Thanks to Selvan Kovai

ஷாம்பு தலைக்கு போடுவது அவசியமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:32 PM | Best Blogger Tips
இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது. இதனால் தலைமுடி பிரஷ்ஷா இருப்பதா இருந்தாலும் இது முடிக்கு மிகுந்த கெடுதல்.

மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. அதனால் இந்த ஷாம்புவை விட்டொழித்து விட்டு மகிழ்ச்சியாக இருப்போம். முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்

1) தண்ணிர்: நிஜமா தலை முடிக்கு தோதான ஷாம்பு இதான். தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்தணும். தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது

கண்டிஷனர் வேண்டுமா?

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது எலுமீசை ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனரா பயன்படுத்துங்கள். போதும்.

நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருக்கும் பாண்டீன் ஷாம்பு+ கண்டிஷனரை என்ன செய்வதுன்னு கேட்கிறீர்களா?

உங்க பரம எதிரி யாரோ அவருக்கு பரிசா கொடுங்க
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Mar/8bb603fd-521d-4dfb-8969-a156c11d6207_S_secvpf.gif  
Thanks to FB Selvan Kovai
 

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:29 PM | Best Blogger Tips
* அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.

* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.

* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.

* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.

* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.

* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.

* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.

* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:

* இரத்த அழுத்த நோய்

* இருதய படபடப்பு

* கல்லீரல் பாதிப்பு

* பித்தக் குறையாடு

* நீரிழிவு நோய்

* மூட்டு வலி

* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.

* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:

* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.

* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.

* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.

* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.

* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.

* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.

* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் பருமன் குறைய மருத்துவம்:

சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.

அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ

கொத்தமல்லி விதை - 1\4 கிலோ

சீரகம் - 25 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீ­ரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
மருத்துவக் குறிப்பு Health Care in Tamil

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

* அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.

* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.

* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.

* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.

* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.

* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.

* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.

* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:

* இரத்த அழுத்த நோய்

* இருதய படபடப்பு

* கல்லீரல் பாதிப்பு

* பித்தக் குறையாடு

* நீரிழிவு நோய்

* மூட்டு வலி

* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.

* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:

* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.

* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.

* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.

* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.

* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.

* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.

* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உடல் பருமன் குறைய மருத்துவம்:

சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.

அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ

கொத்தமல்லி விதை - 1\4 கிலோ

சீரகம் - 25 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீ­ரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். 
 
 
 
 
 
 
 
Thanks to மருத்துவக் குறிப்பு Health Care in Tamil
 

குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:28 PM | Best Blogger Tips
சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.

பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

1. நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

2. மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.

3. காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்றவைகலை குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.

4. மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

5. முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும். மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு.

6. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.

குடைமிளகாய்:

குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....

1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.

6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.

8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.

9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

ந‌ன்றி திரு. – கே.எஸ்.சுப்ரமணி
குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!

Like & Share ===>இன்று ஒரு தகவல்(பக்கம்)<=== 

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.

பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

1. நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

2. மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.

3. காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்றவைகலை குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.

4. மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

5. முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும். மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு.

6. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.

குடைமிளகாய்:

குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....

1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.

6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.

8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.

9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

ந‌ன்றி திரு. – கே.எஸ்.சுப்ரமணி

கேன்சரைத் தடுக்கும் 8 மூலிகைகள்... உங்க அடுப்பாங்கரையில தாங்க இருக்கு!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:23 PM | Best Blogger Tips
நம் நாட்டு சமையலின் பாரம்பரிய தாரக மந்திரமே, ‘உணவே மருந்து என்பது தான்'. அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது.

சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்துக்கு காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ள நிலையில், கேன்சர் வராமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். வருமுன் தற்பாதுக்காத்துக் கொள்வது தானே புத்திசாலித்தனம்.

காயங்களுக்கு மஞ்சளைக் கட்டும் நமது பாட்டிமார் வைத்தியத்தை விட்டு நாம் ரொம்பவே விலகி வந்து விட்டோம். மஞ்சளிலும், குக்குமப்பூவிலும் இல்லாத மருத்துவக்குணங்களா?

மஞ்சளின் மகிமை:
கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சீரகம்:
பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் கேன்சர் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் கேன்சர் நோயாளிகளுக்கான விரிவான நிச்சயமாக உணவு ஆகும்.

குங்குமப்பூ:
இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. கேன்சருக்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டாம்

சீரகம்:
அடுத்ததா சீரகம். ஜீரண சக்திக்கு உதவுற சீரகம்ல, ‘ தைமோகுயினோன்' இருக்கற மூலப்பொருள் கேன்சருக்கு மருந்தா மாறுதாம்.

இலவங்கப்பட்டை:
தினமும் அரைகரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், கேன்சர் அபாயங்கலில் இருந்து நம்மை நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாமாம். இயர்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது.

மிளகாய் விதைகள்:
இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகல் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன் படுகிறது.

மிளகு:
லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சும்மாவா சொல்றாங்க.

இஞ்சி:
கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், கேன்சர் கிருமிகளை அழிப்பதிலும் வல்லவன் இஞ்சி.

வல்லாரைக் கீரையின் மகத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips
என்ன சத்துக்கள்?

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலுள்ளது.

என்ன பலன்?

ஞாபக சக்தியை அதிகரிக்கும்
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும்.
உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும்.
படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
கண் மங்கலை சரி செய்யும்.
உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.
வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

டிப்ஸ்

இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.
வல்லாரைக் கீரையின் மகத்துவம் 

என்ன சத்துக்கள்?

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலுள்ளது.

என்ன பலன்?

ஞாபக சக்தியை அதிகரிக்கும்
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும்.
உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும்.
படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
கண் மங்கலை சரி செய்யும்.
உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.
வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

டிப்ஸ்

இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:12 PM | Best Blogger Tips
கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !!
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 4, 5 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அஜீரணக் கோளாறு நீங்க...
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய....
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !!

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்

முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.
அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.
பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.
அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.
அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.
குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம்.
மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

கம்பு கூழ்/கம்மங்கஞ்சி

இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..

எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:

கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும்.

கம்பு இட்லி.

தேவையான பொருட்கள்:
கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை - 6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம் அரைக்கவும். வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.

கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். துணியில் ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத் தவிர்க்கலாம்


கம்பு அடை

தேவையானப் பொருள்கள்:

கம்பு மாவு_ஒரு கப்
சின்ன வெங்காயம்_7
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகப் பொடி_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
கறிவேப்பிலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
நல்லெண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு நொறுக்கிப் பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும்.

சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.

கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.

கம்பு பருப்பு சாதம்

என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப் பயிறு - கால் கப்,
தண்ணீர் - 3 கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நறுக்கிய தக்காளி - அரை கப்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது.

தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்.
பொடித்துக் கொள்ள...
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2,
பூண்டு - 4.

எப்படிச் செய்வது?

கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி, பருப்பையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வேகவிடவும். தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும். 4 கம்பரிசியை சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும். பருப்பு வகைகளுடன் தட்டப்பயிறும் சேர்த்துக் கொள்ளலாம்.4 மிளகாய் தூள், மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்பபிரித்துக் கொள்ளவும்


கம்பு லட்டு

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
பச்சைப் பயிறு மாவு - கால் கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 6,
பொடித்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த கருப்பட்டி - அரை கப்,
வறுத்து, பொடித்த எள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
பால் - தேவையான அளவு,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கம்பு மாவையும், பச்சைப் பயிறு மாவையும் வாசம் வரும் வரை தனித்தனியாக வறுத்து வைக்கவும், இந்த மாவை மிக்ஸியில் போட்டு அத்துடன் பொடித்த கருப்பட்டியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பேரீச்சம்பழத்தை வறுத்து மாவில் கொட்டவும். அத்துடன் பொடித்த எள், உப்பு, சேர்த்து பிசறி வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் பாலை சூடாக்கி மாவில் கொஞ்சமாக தெளித்து உருண்டை பிடிக்கவும். ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். 4 பால் சேர்க்காமல் இன்னும் கொஞ்சம் நெய்விட்டு உருண்டை பிடித்தால் 15 நாள்கள் வரையிலும் கெடாது.


கம்பு சோறு

கம்பு - 1/2 கிலோ.கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை அளந்து கொண்டு, 1 டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணீர் அளந்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, அரைத்த கம்பை போட்டு, நன்கு கிளறி, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
அப்படியே சூடாகவும் வைத்து கொள்ளலாம்.
கரைத்து குடிக்க வேண்டுமெனில், ஒரு கரண்டியை தண்ணீரில் நனைத்து சாதத்தை எடுத்து கைகளில் போட்டால், ஒரு உருண்டை வரும். அதை நன்றாக கைகளில் அழுத்திப் பிடித்து, உருண்டையாக்கி, தண்ணீரில் போடவும்.
உருண்டை சூடு குறைந்தவுடன், வேறு தண்ணீரில் எடுத்து போடவும்.

Note:
உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும். ஃப்ரிஜில் வைப்பதானால், தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. வெங்காயத்தை பொடி துண்டுகளாக நறுக்கி தூவலாம்.


கம்பு சட்னி

கம்பு - கால் கப்
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
·
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்

பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பரிமாறவும்.


இனிப்பு கம்பு அடை

கம்பு மாவு - ஒரு கப்
வெல்லம் (துருவியது) - 1/2 ல் ‍இருந்து 3/4 கப் வ‌ரை
தேங்காய் துண்டுகள் -‍ 1/3 கப்
ஏலக்காய் - 2
உப்பு ‍ - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் -‍ 2 மேசைக்கரண்டி


முதலில் ஏலக்காயை தட்டி, உள்ளே இருக்கும் விதைகளை பொடித்து வைக்கவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொண்டு அதனுடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, தேங்காய்த்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

பிசைந்த இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி, அரை மணி நேரம் விடவும். அதன்பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

பின்னர், ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையிலேயோ (அல்லது) எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரிலோ மெல்லிதாக தட்டி நான்கு, ஐந்தாக தவாவில் போட்டு, சுற்றிலும் சிறிது நெய்/நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும், அடைகளை மெதுவாக‌ திருப்பிவிட்டு மேலும் ஒரு சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

மாலை நேர‌த்தில் சாப்பிட‌, சுவையான‌, அதே ச‌ம‌ய‌ம் ஆரோக்கிய‌மான‌ ஒரு ஐட்ட‌மாக‌ இருக்கும் இந்த இனிப்பு‌ கம்பு அடை.

சிலசமயம் வெல்ல‌த்தில் ஏதேனும் தூசி, ம‌ண் இருக்க‌‌ வாய்ப்பிருக்கு. அப்ப‌டி தெரிந்தால், க‌ரைத்த‌ வெல்ல‌த் தண்ணீரை வ‌டிக்க‌ட்டி, அடை மாவு பிசைய‌ பய‌ன்ப‌டுத்த‌வும்.
அடையை த‌ட்டும்போது, ரொம்ப‌வும் மெல்லிதாக‌ த‌ட்டாம‌ல் கொஞ்ச‌ம் த‌டிப்பாக‌வே தட்டவும். மிகமெல்லிதாக இருக்கும் பட்சத்தில், திருப்பிபோடும்போது, உடைந்து விட வாய்ப்பிருக்கு.


கம்பு உப்புமா

கம்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏறப
கொத்தமல்லி - சிறிது

வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.


கம்பங்கூழ்

கம்பு
நொய்யரிசி - 1 பிடி
உப்பு
தயிர்


கம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]
இதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.
அடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.

Note:
கூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டுகம்மங்கொழுக்கட்டை

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.


கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.
ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Note:நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.

கம்மங்கொழுக்கட்டை

கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.

கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.
பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.
கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும். ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Note:
நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்கம்பு புட்டு

கம்பு - 1/4 லிட்டர்,
சர்க்கரை - 1/2 டம்ளர்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் - 5,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.


கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டினால் தோல் வந்துவிடும்.
நன்றாக புடைத்துவிட்டு, வாசம் வரும்வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை புட்டுக்கு போல் மாவாக்கி கொள்ளவும். உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, கம்புமாவில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும். தேங்காயை துருவி வைக்கவும்.
கம்புமாவை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும். சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காயை பொடி செய்து, தூவி கலந்து வைக்கவும்.

கம்பு இலை அடை (இனிப்பு)

என்னென்ன தேவை?

கம்பரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - அரை கப்,
முந்திரி - 6,
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வாழை இலை - 5.
எப்படிச் செய்வது?

மேல் மாவுக்கு...
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து வைக்கவும்.

பூரணம் செய்ய...

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் இந்த பூரணத்தை போட்டு சுருள கிளறவும். கிளறியதும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆறவிடவும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவும். அதில் கம்பு மாவை வைத்து தட்டி பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 4 பாரம்பரிய இந்த இனிப்பு அடையை கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்

கம்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

· கம்பு - 100 கிராம்
· வெல்லம் - 50 கிராம்
· பாதாம் - 2 டீஸ்பூன்
· முந்திரி - 2 டீஸ்பூன்
· நெய் - 1 டீஸ்பூன்
· கன்டன்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
· ஏலக்காய் - சிறிது
·
செய்முறை

கம்பை ஊற வைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்துக் கொண்டு அதை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி அதை வெந்த கம்புடன் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் சேர்க்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்து பரிமாறவும்.

கம்பில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம்.

கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.