சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற
வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை
மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
கீழாநெல்லியின் முழுச்
செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என
அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும்
சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும்
காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில்
கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும்
நீர்க்கடுப்பு குணமாகும்.
நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின்
வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம்
மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு,
அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து,
குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும்
காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதனால்
நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது
எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்.
கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில் கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு குணமாகும்.
நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின் வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம் மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு, அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து, குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும் காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதனால் நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்.