நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பின் இந்தியாவில் வசிக்கும்
குடிமகன்களைப் போன்று டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை பராமரித்து
வருவீர்களானால் அது சட்ட விரோதமானது என அறிவீர்களா?. ஒவ்வொரு வெளிநாடு வாழ்
இந்தியரும் இந்தியாவில் ஒரு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கை மட்டுமே
வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொழுது, நீங்கள் அதை உங்கள் வங்கிக்கு தெரிவித்து, உங்களுடைய டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை என்ஆர்ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் ஒரு தகுதி பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் எனில் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், சேமிப்பு கணக்கின் நிலையை மாற்றும் பொறுப்பு உங்களை சார்ந்தது, வங்கியுடையது அல்ல. மேலும், என்ஆர்ஓ கணக்குகளுக்கு டிடிஎஸ் வரியின் அளவு டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கிலிருந்து கழிக்கப்படும் வரியின் அளவை விட மிக அதிகம். எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கை பராமரிப்பது குறைவான வரி செலுத்துவதற்கு செய்யும் ஏற்பாடாக கருதப்படும். இது வரி ஏய்ப்பு போன்றது. இந்தியாவில், இரட்டை குடியுரிமை வசதி இல்லை. எனவே அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் டொமஸ்டிக் ரெசிடன்ட் சேமிப்பு கணக்கும் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்காக மாற்றப்பட வேண்டும்.
நீங்கள் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?
இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எஃப்இஎம்ஏ) படி, ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார்.
ஒரு தனி நபர் முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருத முடியும். எனவே, நீங்கள் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கி இருந்தால், மேலே கூறிய வரையறை படி நீங்களும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவீர்கள். மேலே கூறிய அளவுகோல்கள் உங்களுக்கு பொருந்துமெனில் நீங்கள் இன்னும் உங்கள் வங்கிக் கணக்கை மாற்றாமல் வைத்திருந்தால் அதை முதலில் என்ஆர்ஓ அல்லது என்ஆர்இ கணக்காக மாற்ற இதுவே சரியான நேரம் ஆகும்.
Thanks to Thatstamil.com