சில ரோட்டு கடைகளில் கிடைக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips

 No photo description available.

 

ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை நமக்கு விடை தெரியாத கேள்வி என்றால் இட்லியை விட தோசை ஏன் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதுதான். 
 
ஒரு கரண்டி மாவில் ஒரு இட்லி சாதாரண கடையில் 5 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 10 ரூபாய். அதே மாவில் ஒரு தோசை சாதாரண கடையில் 40 to 50 ரூபாய் பெரிய ஹோட்டல்களில் 100 to 150 ரூபாய் அதாவது ஒரு கரண்டி மாவு இட்லியாகும் போது 10 ரூபாய் ஆகுது அதே ஒரு கரண்டி மாவில் சுடுற தோசை 100 ஆக மாறும் தந்திரம் தான் தெரியல. இதைதான் கோபிநாத் அவர்கள் ஹோட்டல் முதலாளிகளிடம் கேட்கிறார்கள் நானும் என்ன தான் சொல்றாங்கன்னு பார்க்கிறேன் ஒருத்தர் கூட சரியான காரணத்தை சொல்லவே இல்லை.
 
 கோபிநாத்தும் அவர்கள் சொல்ற பதிலில் திருப்தி இல்லாமல் இது நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லையேங்கிற மாதிரி வளைச்சு வளைச்சு கேட்டாலும் அவங்க சரியான பதிலை சொல்லவே இல்லை. 
 
ஹோட்டல் செலவு, ஆள் சம்பளம் கரண்ட் பில் இதையே தான் சொல்றாங்க. கடைசி வரை சொல்லவே இல்லங்க. 
 
சாதாரணமா நம்ம வீட்டில் ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து போடுவோம். அரிசி ஒரு 60 உளுந்து 38 ரூபாய் ஆக மொத்தம் 98 அதில் போடுற வெந்தயம் ஒரு 2 ரூபாய் வைச்சுக்குவோம் மொத்தம் 100 ரூபாய் ஆகுது. 
 
தேங்காய் சட்னி, கொஞ்சம் தக்காளி சட்னி கொஞ்சம் சாம்பார் வைச்சா அதற்கு ஆகுற செலவு 50 ரூபாய் வைச்சுக்குவோம். எண்ணெய் ஒரு கால் லிட்டர் ஆகும். ஆக எல்லாம் சேர்த்து ஒரு 200 ரூபாய் ஆகுது இதோட செலவு. 
 
இப்ப இந்த ஒரு கிலோ அரிசியில நாம எத்தனை தோசை ஊத்துவோம் எத்தனை பேர் சாப்பிடுவோம் எத்தனை நாள் வைச்சி சாப்பிடுவோம். ஒரு ஆள் எத்தனை தோசை சாப்பிடுவோம் உங்க மனக்கணக்குக்கே விடுறேன். இப்ப உங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும் இவர்கள் திரும்ப திரும்ப.. ஹோட்டலுக்கு ஆகுற செலவையே சொல்லிட்டு இருக்காங்க. 
 
ரோட்டு கடை நடத்துறவங்களுக்கு லாபம் கிடைக்குமாம் பெரிய ஹோட்டல்ல லாபமே பார்க்க முடியாதாம். அப்ப லாபம் தான் கிடைக்கலையே அப்ப நீங்க ரோட்டு கடையே நடந்தலாமே அதுல தான் லாபம் வருதில்ல.
 
 எதுக்கு பெரிய ஹோட்டல் கட்டி லாபமே வராம வியாபாரம் பண்றீங்க. ஒன்னு நல்லா புரியுதுங்க கண்டிப்பா புத்திசாலிகள் பெரிய ஹோட்டலுக்கு போகப்போவதில்லை ஆடம்பரத்துக்காக வாழ்கின்றவர்கள் மட்டும்தான் பெரிய ஹோட்டல் போகிறார்கள் நீங்க நடத்துங்க நடத்துங்க.. 
 
ருசிக்கு இங்க ஆயிரம் கடைகள் இருக்கு.
 
சில ரோட்டு கடைகளில் கிடைக்கும் நல்ல சுவையான உணவு பெரிய ஹோட்டல்களில் கிடைப்பதில்லை....??????💯

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

நீண்ட காலம் ஆட்சி செய்த தமிழ் பேரரசுகளின் பட்டியல்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips

 No photo description available.

 

நீண்ட காலம் ஆட்சி செய்த தமிழ் பேரரசுகளின் பட்டியல்,
சேர ஆட்சிகாலம் - 430 கி.பி. - 1102 = 1532 ஆண்டுகள்
சோழ ஆட்சிகாலம் - 301 கி.பி. - 1279 = 1580 ஆண்டுகள்
பாண்டியர் ஆட்சிகாலம் - 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்
பாண்டியர்கள்;
முற்காலப்பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி
பெரும்பெயர் வழுதி
கடைச்சங்கப்பாண்டியர்கள்;
முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப்பெருவழுதி
மாறன் வழுதி
நல்வழுதி
குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப்பாண்டியர்கள்;
கடுங்கோன் → கி.பி. 575-600
அவனி சூளாமணி → கி.பி. 600-625
செழியன் சேந்தன் → கி.பி. 625-640
அரிகேசரி → கி.பி. 640-670
ரணதீரன் → கி.பி. 670-710
பராங்குசன் → கி.பி. 710-765
பராந்தகன் → கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
வரகுணன் → கி.பி. 792-835
சீவல்லபன் → கி.பி. 835-862
வரகுண வர்மன் → கி.பி. 862-880
பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900
பிற்காலப்பாண்டியர்கள்;
மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
அமரப்புயங்கன் → கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955
வீரபாண்டியன் → கி.பி. 946-966
வீரகேசரி → கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293
தென்காசிப்பாண்டியர்கள்;
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)
சோழர்கள்
முற்காலச்சோழர்கள்;
செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
மாற்றார் இடையாட்சி
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி
இடைக்காலச்சோழர்கள்;
விசயாலய சோழன் → கி.பி. 848–881
ஆதித்த சோழன் → கி.பி. 871–907
பராந்தக சோழன் I → கி.பி. 907–955
கண்டராதித்தர் → கி.பி. 955–962
அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
சுந்தர சோழன் → கி.பி. 963–980
ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971
உத்தம சோழன் → கி.பி. 971–987
இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070
சாளுக்கியசோழர்கள்;
குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178
குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218
இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279
சேரர்கள்
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129
பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
பெருஞ்சேரலாதன் → கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
குட்டுவன் கோதை → கி.பி. 184-194
மாரிவெண்கோ → காலம் தெரியல
வஞ்சன் → காலம் தெரியல
மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல
கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு
பல்லவப்பேரரசுகள்;
முற்காலப்பல்லவர்கள்
பப்பதேவன்
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப்பல்லவர்கள்
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II கி.பி. 400 - 436
சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
பிற்காலப்பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
தந்திவர்மன் கி.பி. 775 - 825
நந்திவர்மன் III கி.பி. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 - 882
அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901
 

 

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:59 PM | Best Blogger Tips

 May be an image of 6 people, train and railway

ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது தெரியுமா? காரணம் இதுதான்!
 
ஜெனரல் கோச் ஏன் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் ரயில்வே இந்த பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதன் உண்மை என்ன என்பதை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்
 
இந்தியன் ரயில்வே நெட்வொர்க் (Indian railway), உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இதை, தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஏனென்றால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், பேருந்து, 
 ரயிலில் ஜெனரல் கோச் ஏன் முதல் மற்றும் கடைசியில் இருக்கிறது? காரணம் இதுதான்!  – News18 தமிழ்
விமானத்தை விட ரயில் பயணத்தை மட்டுமே சொகுசாக உணர்கிறார்கள். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, ​​பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை ரயில்வே நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
 
ரயிலில் ஜெனரல் கோச் (General Coaches), ஸ்லீப்பர்,3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது. பெரும்பாலும் பணக்காரர்கள் ஏசி பெட்டிகளிலும், நடுத்தர மக்கள் ஜெனரல் ஸ்லீப்பர் கோச்சிலும், ஏழைகள் ஜெனரல் பெட்டியிலும் பயணிப்பார்கள். 
 
நமது நிதிநிலைமையை பொறுத்து நம்முடைய கோச் தேர்வு இருக்கும். நம்மில் பலர் ரயில் பயணத்தின் போது கவனித்திருப்போம்,
 
 ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். சில சமயங்களில் குறுகிய பயணத்தில் நாம் ரயிலின் கடையில் ஓடிப்போய் எரிய அனுபவம் இருந்திருக்கும்.
 
 
எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?… “ஏன் ஜெனரல் கோச் ரயிலின் கடைசி அல்லது முன் பக்கத்தில் உள்ளது… ஏன் ரயிலின் மையத்தில் இல்லை?” என. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் ரயில்வே இந்த பெட்டிகளை ரயிலின் பின்புறத்தில் வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதன் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு ரயிலின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதாவது, எஞ்சினைத் தொடர்ந்து AC-3, AC-2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி அதாவது இறுதியாக பொதுப் பெட்டி (ஜெனரல்) என பொருத்தப்பட்டிருக்கும். 
 
ஜெனரல் பெட்டிகள் எப்போதும் ரயிலுக்கு முன்னால் அல்லது பின்னால் இணைக்கப்பட்டிருப்பது பயணிகளின் உயிருடன் விளையாடுவது போன்றது என ரயில்வே மீது மக்கள் குற்றம் சாட்டினர். அதாவது, விபத்து ஏற்பட்டால் ஏழை பயணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற வடிவமைப்பு இருப்பதாக ட்விட்டரில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
ஆனால், இந்த குற்றசாட்டை ரயில்வே முற்றிலும் மறுத்துள்ளது. அத்துடன், ரயில் இயக்க விதிகளின்படி, ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும் ரயில்வே விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது என்றும், காசு இருப்பவர்கள் அல்லது பணக்காரர்கள் என பாகுபாடு பார்த்து கம்பார்ட்மென்ட் அமைக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. 
 
அத்துடன், பொதுப் பெட்டிகள் ஏன் ரயில்களின் முடிவில் அல்லது தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உண்மையான காரணத்தையும் கூறியுள்ளது.
இந்தியன் ரயில்வே தகவலின் படி, ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட ரயிலின் ஜெனரல் கோச்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
 
 பொதுப் பெட்டிகளில் ஒவ்வொரு நிலையத்திலும் அதிகமான பயணிகள் ஏறி, இறங்குவார்கள். எனவே, கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ரயிலின் நடுப்பகுதியில் ஜெனரல் கோச்சுகளை சேர்த்தால், ரயிலின் நடுப்பகுதியில் அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையில் இருக்காது. 
 
போர்டிங்-டிபோர்டிங்கிலும் சிக்கல் ஏற்படும். ஜெனரல் கம்பார்ட்மென்ட் நடுவில் இருந்தால், அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும். ரயிலின் முன் மற்றும் பின்புறம் பொது பெட்டிகளை வைப்பதன் மூலம், பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இருபுறமும் என்ஜினைச் சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
 
ரயில்வே நிபுணர்களின் கூற்றுப்படி, ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மை பயக்கும். அதுமட்டும் அல்ல, விபத்து, தடம் புரண்டது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட இந்த பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்ற முடியும்.

 

நாம் அநியாயமாக சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:52 PM | Best Blogger Tips

 May be an illustration of 2 people

ஒரு ஊரில் ஒரு பால்காரன் பால் விற்றுப் பிழைத்து வாழ்ந்து வந்தான். கலப்படமற்ற, சுத்தமான, தரமான பால் விற்பதில் பிரசித்திபெற்ற அந்த பால்காரனுக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்துக் கொண்டே சென்றனர். 
 
இப்படியிருக்க ஒரு நாள் இவனுக்கு ஒரு நப்பாசை தோன்றியது. தனது லாபத்தை இன்னும் அதிகரிக்க வழி பார்த்தான்.
முடிவாக பாலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்தான். 
 
வழக்கம் போல் சந்தைக்கு சென்று பாலை விற்பனைசெய்தான். வாடிக்கையாளர்கள் யாரும் அவதானிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை. 
 
சில நாள் கழித்து பாதியளவு தண்ணீரை கலக்க ஆரம்பித்தான். வாடிக்கையாளர்கள் யாரும் அவதானிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை.
 
அவன் எதிபார்த்தது போலவே இரு மடங்கு ஆதாயம் கிடைத்தது. மற்றற்ற மகிழ்ச்சியடைந்தான். பணத்தோடு வீட்டிற்குச் செல்லும் வழியில், களைப்பாரவென ஆற்றின் எதிரே உள்ள ஒரு மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்தான்.
 
இதற்கிடையில் ஒரு குரங்கு வந்து அவனது பணப்பையை எடுத்துச் சென்றது. கத்திக் கதறி குரங்கிடம் மன்றாடினார். பணப் பையைத் திருப்பித் தருமாறு கெஞ்சினான்.
 
குரங்கின் கையில் ஒரு பொருள் கிடைத்தால் எப்படி விளையாட்டுக் காட்டும் என்று தெரியும்தானே!!! ஒரு பணக்காசை அவனுக்கும் மறு காசை நதியிலும் மாறி மாறி வீசிமுடித்தது.
 
குரங்கு தன்னிடம் எறிந்த பணத்தை எண்ணிப்பார்த்தன். அங்குதான் ஆச்சரியம் அவனுக்காக காத்திருந்தது! கலப்படமற்ற பாலின் வருமானம் அவன் கையில் வந்து சேர்ந்திருந்தது. 
 
அப்போதுதான் அவன் அண்ணாந்து பார்த்தவாறு பின்வரும் வாசகத்தை சொன்னான்:
 
“பாலுக்கான காசு பால்காரனிடம் வந்தது சேர்ந்தது, தண்ணிருக்கான காசு தண்ணீரிடம் போய்ச் செர்ந்தது!"
 
🔺️ நாம் அநியாயமாக சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயும் சந்தேகமின்றி ஒருநாள் ஒருசொட்டுப் பயனின்றி கரைந்துபோகும்!
 
✍

 

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips

 May be an image of 1 person, motorcycle and bicycle

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயே
 
பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்...  
 
இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்... 
 
இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்.... ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்..... அடுக்கு மாடி வீடிருக்கலாம்... 
 
அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம்... ஆனாலும் அவர்கள் பணக்கார #உரிமையற்றவர்கள்தான்...
 தினம் ஒரு தகவல் DAILY INFORMATION | வரட்டுகௌரவமும் வாழாவெட்டி  வாழ்க்கையும்.. | Facebook
அடித்தட்டு ஆணுக்கு வாழ்க்கைப்படுபவர்கள் சரிக்கு சரியாய் உழைக்க வேண்டும்.. 
 
வெளியில் கணவனுக்கு சமமாகவும், வீட்டில் கணவனுக்காகவும் உழைக்கவும் அல்லது அதற்கு மேலும் கூட உழைக்க வேண்டும்... 
 
குடிகார கணவெனென்றால் அவனுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்... இங்கே அதிகாரமிக்க #அடிமையாகத்தான் பெண் வாழ முடியும்...
 
நடுத்தர குடும்ப ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சம்பாதிக்க உழைக்க வேண்டிய கட்டாயமில்லை... 
 
அவர்கள் உழைக்க தயாரானாலும் தடை இல்லை.... 
 
கணவனின் வருமானத்தை கணக்கிட்டு செலவு செய்யவோ, சேமிக்கவோ முழு அதிகாரம் உண்டு... வேண்டியவர்களை சேர்க்கலாம்...
 
 வெறுப்பவர்களை விலக்கலாம்.. எல்லா முடிவுகளையும் தாமே எடுக்கலாம்.... 
 தினம் ஒரு தகவல் DAILY INFORMATION | பெண் என்பவள் | Facebook
வியர்வையோடு தூங்கினாலும் பாதுகாப்பாய், ஆதரவாய் தூங்கலாம்.... 
 
பேருந்தில் பயணித்தாலும் உற்றவர்களுடன் பயணிக்கலாம்... கடன் வாங்கினாலும் கவலை பட்டாலும் உனக்கு நான் எனக்கு நீ என சாய்ந்துகொள்ள தோளிருக்கும் ... 
 
இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாலும் சந்தோஷத்தை ஒவ்வொரு நொடியும் உணரலாம்..வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதமானால் தேடி வர ஆளிருக்கும்...
 
இப்படி ஆயிரமாயிரம் இருக்கும்...
 
தன் பொறுப்புணர்ந்து வாழும் நடுத்தர வர்க்க பெண்ணா நீங்கள்??? உரக்கச்சொல்லுங்கள் இந்த உலகிற்கு....