சோரபாரி தால், கேதார்நாத்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:47 PM | Best Blogger Tips
Image result for கேதார்நாத்
காந்தி சரோவர்அருள் ஏரி
சிவனும் பார்வதியும் காந்திசரோவர் ஏரிக்கரையில் வாழ்ந்ததாகவும், அப்போது கேதாரில் வாழ்ந்துவந்த பல யோகியரை அவர்கள் அவ்வப்போது சந்திக்க வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு, இந்த ஏரிக்கரை உடைந்துதான், கேதாரில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று அதை காந்தி சரோவர் என்று அழைக்கிறார்கள், ஆனால் இது காந்த்தி சரோவர். ‘காந்த்திஎன்றால் அருள், ‘சரோவர்என்றால் ஏரி. இது அருள் ஏரி. யோகக் கலாச்சாரத்தில் சிவனை ஒரு கடவுளாகப் பார்ப்பதில்லை. அவர் இந்த மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த மனிதர்; யோகக் கலாச்சாரத்தின் அஸ்திவாரம், யோகக் கலையை உருவாக்கிய மாபெரும் யோகி, ஆதி யோகி, அதாவது முதல் யோகி. அவரே ஆதிகுருவும் கூட. ஆதிகுரு சிவன் முதன்முதலில் யோக விஞ்ஞானத்தை தனது முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டது இந்த ஏரிக்கரையில் தான். இன்று சப்தரிஷிகள் என்று நாம் கொண்டாடும் அந்த ஏழு ஞானியருடன், உள்நிலை குறித்த தொழில்நுட்பத்தை, தெள்ளத் தெளிவாக, முறையாக சிவன் இங்கு தான் பகிர்ந்துகொண்டார்.
- --
சத்குரு

சோரபாரி தால் எனும் இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3900 மீ உயரத்தில் சோரபாரி பாமக் பனிமலையின் முகப்பில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் மற்றும் கீர்த்தி ஸ்தம்ப சிகரங்களின் அடிவாரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பிரமிக்க வைக்கும் இமலைமலைகளின் எழிற்காட்சிகளை தரிசிக்கலாம்.

இந்த ஏரியில் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டதால் காந்தி சரோவர் என்றும் இது அழைக்கப்படுகிறது. புராணிகங்களின்படி இந்த ஏரியில் மூழ்கி பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த ஏரிப்பகுதியை 3 கி.மீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து அடையலாம். கேதார்நாத் பகுதியிலுள்ள இரும்புப்பாலம் இந்த ஏரிப்பகுதிக்கான பாதையாக பயன்படுகிறது. காந்தி சரோவருக்கு செல்லும் பாதை பாதி தூரத்திற்கு நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏரிக்கு செல்லும் வழியில் ஒரு நீர்வீழ்ச்சியையும் பயணிகள் காணலாம். இந்த இடத்தின் பருவநிலை அடிக்கடி மாறும் இயல்புடையது என்பதால் காலை நேரத்திலேயே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

 நன்றி இணையம்

🌺இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:🌺

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips


🌷சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.
🌷ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.
🌷மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.
🌷சக்கரத்தானை திருவாழியாழ்வான்" என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு"ஹேதிராஜன்" என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.
🌷பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை," வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்துகிறார். மேலும் "என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு " என்று குறிப்பிடுகிறார் ..
🌷ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் ,"சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் "என்றே பெருமாளை பாடுகிறார் ..
திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..
🌷சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு" சுடராழி வெண்சங்கேந்தி வாராய்" என்று பாமாலை சூட்டுகிறார்.
🌷சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம்.
அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார்.
அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால்.
🌷புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட, கிருஷ்ண பரமாத்மா ,சூரியனை மறைக்க சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.
🌷துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே ....
🌷இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
🌷விஷ்ணுவின் வலது கையில் உள்ள சக்கரத்தை "சுதர்சனம் என்பர். இதற்கு "நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.
🌷ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.
🌷ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும்நித்யசூரிகள்’.
🌷ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
🌷பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
🌷ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.
🌷 ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். ஊலக இயக்கத்திற்கே ஆதாரம்மகா சுதர்ஸனமேஎன்கின்றனர்.
🌷 புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.
🌷இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்எனப்பட்டார்.
🌷 பல வைணவ ஆலயங்களில் நிகழும், பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.
🌷இந்த ஐந்து ஆயுதங்களிலும்சக்கரம்என்ற ஸ்ரீ சுதர்சனாழ்வார்தான் முதன்மை ஆனவர். ஆகவே இவரைஐவருள் முதல்வர்என்கின்றனர் ஆன்றோர்.
🌷 பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள்! ஸ்ரீ சுதர்சனர், சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும், இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ளார்.
🌷 ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர் ஸ்ரீ சுதர்சனாழ்வாரின் பெருமைகளைஸ்ரீ சுதர்சனாஷ்டகம்எனவும், அவரது பதினாறு ஆயுதங்களைப் பற்றிஷோடசாயுதஸ்தோத்ரத்தையும் இயற்றி உள்ளார்.
🌷 ஸ்ரீ மகாவிஷ்ணு, இவருக்குதிருவாழியே உலக வாழ்வுக்கு முக்யமான, ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம.; இவற்றை இனி உம்மிடம் கேட்டாலும் மக்களுக்கு கொடும். இது தவிர வேறெந்த நல்ல விஷயம் கேட்டாலும் கொடும்என இவருக்கு ஆணையிட்டார். இதனைசுதர்ஸன சதகம்விளக்குகிறது.
🌷 ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
🌷புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் - மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.
🌷பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி, சார்ங்க
தன்வ கதாதர:’ என சகஸ்ரநாமத்தில் விஷ்ணுவைப் போற்றுகிறார்.
🌷அழகு வாய்ந்த எல்லா அங்கங்களுடன் பிரகாசிப்பவரும், எட்டுக் கைகள் கொண்டவரும், மூன்று கண்கள் உடையவரும்,தித்திப் பற்களால் பயங்கரமான முகத்தை உடையவரும்,பயத்திற்கும் பயத்தை அளிப்பவரும், பயங்கரமான மஞ்சள் நிறத்தலை முடி உடையவரும், அக்னி ஜ்வாலையின் மாலைகளால் சூழப்பட்டவரும், கண்களுக்கு எட்டாதவரும், குறிப்பிட முடியாதவரும், பிரமாண்டம் முழுவதும் வியாபித்த சரீரம் உடையவரும்,
🌷 எட்டு ஆயுதங்களால் சூழப்பட்டவரும், எட்டு சக்திகளுடன் கூடியவரும்,எட்டு ஆரங்களுடன் கூடிய மிக பயங்கரமான சக்ரத்தை உடையவரும், 
இந்த சக்ரம், உலக்கை, ஈட்டி, தாமரை என்ற 
நான்கையும், வலது கைகள் நான்கில் தரித்தவரும், இடதுபுறம் உள்ள நான்கு கைகளில், சங்கம் அம்புடன் கூடிய, வில் பாசக்கயிறு கதை ஆகியவைகளை தரித்தவரும்,
🌷சிவப்பு புஷ்ப மாலையால் சோபிப்பவரும், சிவப்பு சந்தனத்தால் பூசப்பட்ட, அங்கங்களை உடையவரும், திவ்ய ரத்னங்களால் இழைக்கப்பட்டதும் விசித்திரமானதும் ஆகிய, கிரீடத்தால் பிரகாசிப்பவரும், துஷ்டர்களை அடக்கி, பக்தர்கட்கு அனுக்ரஹம் செய்பவருமான,"ஸ்ரீ சுதர்ஸனர்" என்ற பெயருள்ள "சக்ரத்தாழ்வாரை" தனக்கு எதிரில் இருப்பதாக, ஸ்மரித்துக் கொண்டு,"சூர்ய பகவான்" த்யானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.
🌷உலகத்தைக் காக்கும் சகல வல்லமை கொண்டுள்ள விஷ்ணு பகவானே - சுதர்ஸனரை நிரந்தரமாக தனது திருக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
🌷கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சகக்ரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.
🌷ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.
அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் சேவைசாதிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
🌷திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும், அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒருமுறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம், காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த "கூரநாராயண ஜீயர்" என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி சுதர்சனரை வேண்ட.... காவிரி வெள்ளம் குறைந்து அரங்கன் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்!
🌷 ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு ...!
🌺ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா.......!!!
ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா.......!!!
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருவடிகளே சரணம்........!!!🌺

 நன்றி இணையம்