சோரபாரி தால், கேதார்நாத்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips
Image result for கேதார்நாத்
காந்தி சரோவர்அருள் ஏரி
சிவனும் பார்வதியும் காந்திசரோவர் ஏரிக்கரையில் வாழ்ந்ததாகவும், அப்போது கேதாரில் வாழ்ந்துவந்த பல யோகியரை அவர்கள் அவ்வப்போது சந்திக்க வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு, இந்த ஏரிக்கரை உடைந்துதான், கேதாரில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று அதை காந்தி சரோவர் என்று அழைக்கிறார்கள், ஆனால் இது காந்த்தி சரோவர். ‘காந்த்திஎன்றால் அருள், ‘சரோவர்என்றால் ஏரி. இது அருள் ஏரி. யோகக் கலாச்சாரத்தில் சிவனை ஒரு கடவுளாகப் பார்ப்பதில்லை. அவர் இந்த மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த மனிதர்; யோகக் கலாச்சாரத்தின் அஸ்திவாரம், யோகக் கலையை உருவாக்கிய மாபெரும் யோகி, ஆதி யோகி, அதாவது முதல் யோகி. அவரே ஆதிகுருவும் கூட. ஆதிகுரு சிவன் முதன்முதலில் யோக விஞ்ஞானத்தை தனது முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டது இந்த ஏரிக்கரையில் தான். இன்று சப்தரிஷிகள் என்று நாம் கொண்டாடும் அந்த ஏழு ஞானியருடன், உள்நிலை குறித்த தொழில்நுட்பத்தை, தெள்ளத் தெளிவாக, முறையாக சிவன் இங்கு தான் பகிர்ந்துகொண்டார்.
- --
சத்குரு

சோரபாரி தால் எனும் இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3900 மீ உயரத்தில் சோரபாரி பாமக் பனிமலையின் முகப்பில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் மற்றும் கீர்த்தி ஸ்தம்ப சிகரங்களின் அடிவாரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பிரமிக்க வைக்கும் இமலைமலைகளின் எழிற்காட்சிகளை தரிசிக்கலாம்.

இந்த ஏரியில் மஹாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டதால் காந்தி சரோவர் என்றும் இது அழைக்கப்படுகிறது. புராணிகங்களின்படி இந்த ஏரியில் மூழ்கி பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த ஏரிப்பகுதியை 3 கி.மீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து அடையலாம். கேதார்நாத் பகுதியிலுள்ள இரும்புப்பாலம் இந்த ஏரிப்பகுதிக்கான பாதையாக பயன்படுகிறது. காந்தி சரோவருக்கு செல்லும் பாதை பாதி தூரத்திற்கு நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏரிக்கு செல்லும் வழியில் ஒரு நீர்வீழ்ச்சியையும் பயணிகள் காணலாம். இந்த இடத்தின் பருவநிலை அடிக்கடி மாறும் இயல்புடையது என்பதால் காலை நேரத்திலேயே இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

 நன்றி இணையம்