உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது.நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம். குடலில்
உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.

நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.

காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.

உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:07 PM | Best Blogger Tips

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.

ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும்
மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...

* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.

* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.

* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.

* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.

* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.

ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...

* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.

* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.

* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.

* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.

* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

உங்கள் Youtube வீடியோக்களை DVD ஆக மாற்ற…

மணக்கால் அய்யம்பேட்டை | 4:27 PM | Best Blogger Tips

இணையத்தில் நாம் அதிகம் வீடியோ பார்க்கும் தளம் என்று சொன்னால் அது கூகிளின் Youtube தளமாகத்தான் இருக்கும்.

இத்தளத்தில் துறைவாரியாக படங்களை பிரித்து நம் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து வருகிறார்கள். இத்தளத்தில் உள்ள நம்மை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது.
அதைத் தரவிறக்கி அப்படியே கணினியில் உள்ள Video Player மூலம் பார்த்துக்கொண்டிருப்போம்.

ஆனால் அதையே கணினி அல்லாத DVD Player -ல் பார்ப்பதற்கு அதற்குத் தகுந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும்.

உங்களிடம் உள்ள யூடியூப் வீடியோக்களை DVD ஆக மாற்றுவதற்கென்றே ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர்: Wondershare DVD creator

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:

http://download.wondershare.com/dvd-creator_full619.exe

உங்கள் விரும்பிய யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இந்த மென்பொருளில் உள்ள Import என்ற விருப்பத்தினைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான youtube வீடியோக்களை ஏற்றிகொள்ளுங்கள்.
வீடியோவை தேர்வு செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பெட்டித் தோன்றும்.

உங்கள் வீடியோபடம் தேர்வானதும் கீழிருக்கும் பட்டையில் வீடியோபடத்திற்கான அளவினைக் காணலாம். மேலும் DVD-யின் கொள்ளளவையும் எத்தனை ஜி.பி. என நிர்ணயித்துக்கொள்ளலாம்.

Menu -வில் எட்டுவித slide-களில் எதையாவது உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

தேர்வு செய்த்தை Preview பார்க்கும் வசதி இருப்பதால் ஒரு முறை முன்னோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் டிவிடிக்கு பெயர் ஒன்றையும் கொடுத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக Burn என்பதைச் சொடுக்கவும்.

சற்று நேரத்தில் நீங்கள் தேர்வு செய்த சாதாரண, SD, HD வடிவ வீடியோக்கள் DVD ஆக மாற்றம் பெற்று இருக்கும். இப்போது உங்கள் DVD தயார்!

உங்கள் டிவிடி யை ஒரு முறை இயக்கிப் பார்த்து சோதனை செய்துகொள்ளுங்கள்

வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:24 PM | Best Blogger Tips
நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது. பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:23 PM | Best Blogger Tips

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.

மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system)அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு(Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம்(Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.

அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.

தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல்களில் அடங்கும்.

பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.

நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.

இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

உணவே மருந்து - கம்பு ---------------------------------

மணக்கால் அய்யம்பேட்டை | 1:46 PM | Best Blogger Tips

சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !!

கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !!

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:33 PM | Best Blogger Tips

காதல்.... இந்த வார்த்தையை வாசிக்கும் போதே சிலருக்கு உற்சாகம் பீறிடும். சிலருக்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும். எண்ணற்ற நபர்களுக்கு அற்புதங்களையும் மாயஜாலாங்கள் நிகழ்த்தக்கூடியதுதான் காதல்.
காதல் ஒருமுறைதான் வரும் என்பதெல்லம் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை. வயிற்றில் உணவு இல்லாத போது பசி எடுப்பது போல மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்து சேரும் போதெல்லாம் காதல் வரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
பதின் பருவம் தொடங்கி பாடையில் போகும் வரை எல்லா கால கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் பலவிதங்களில் காதல் வருமாம். ஆனால் பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவதில்லையாம்.

காதல் வரும் போது அதை வெளிப்படுத்திவிட்டால் மனதில் பாரங்கள் இருக்காது. அதை மறைக்க மறைக்கதான் அழுத்தம் அதிகமாகி ஒருநாள் வெடித்து சிதறிவிடும்.

எதற்காக காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் அவள் அல்லது அவன் கிடைத்தால் என்னுடைய வாழ்க்கை சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இது முற்றிலும் சுயநலமான வார்த்தை என்பதை யாரும் உணர்வதில்லை.

காதல் என்பது விட்டுக்கொடுத்தல், தான் விரும்பும் நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல், தன்னை விட தான் விரும்பும் நபர் நலமாக இருக்கவேண்டும் என்றுதான் காதலிப்பவர்கள் நினைக்கவேண்டுமே தவிர தன்னுடைய நலனுக்காக காதலிப்பவர்கள் தோற்றுத்தான் போகின்றனர். எனவேதான் சுயநலவாதிகள் எல்லோருக்கும் தோல்வியை பரிசாக அளிக்கிறது காதல்.

காதலியோ மனைவியோ கவனிக்காவிட்டால் கைவிட்டு போய்விடுவார்கள். எனவே காதலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களை கவனிப்பது. இன்றைக்கு செல்போன், இமெயில் என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கமுடியும். எனவே நேரமில்லை என்ற காரணத்தைக் கூறி கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள்.
திருமணம் முடிந்த உடன் காதல் முடிந்து போவதற்கான காரணம் நிறைய பேருக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது கமிட்மென்ட் கிடையாது. காதலர்கள் திருமணம் முடிந்த உடன் தம்பதியர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடுகிறது. பணம் சம்பாதிப்பது தொடங்கி குடும்பம், குழந்தை என சமூக பொறுப்புக்களோடு வாழ வேண்டியுள்ளது.

இதனால்தான் காதலிக்கும் போது கிடைத்த இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்து திருமணத்திற்குப் பின்னர் காதலர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எனவே காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை புரிந்து அதற்கேற்ப காதலிப்பவர்கள் மட்டுமே வெற்றியினை பரிசாக பெருகின்றனர் என்கின்றனர் அனுபவசாலிகள்.
அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் காதலை காதலோடு ரசித்து அனுபவிப்பவர்களுக்கு வாழ்க்கை அழகானது என்கின்றனர் அனுபவசாலிகள். ஆதலால் காதல் செய்வீர்.