மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:33 PM | Best Blogger Tips
மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் நரம்பியல் தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வைட்டமின் சி யினால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம் தான் பெற முடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரைக்கூடிய, ஒளி ஓடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு.

குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்மின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.

வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.

அதிகளவு வைட்டமின்சி கொடுக்கப்பட்டால் புற்றுநோய் கட்டி உடைய தொடங்குகிறது என்றும், அதன் பின் ரோடியோ தெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:15 PM | Best Blogger Tips


Photo: கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

தொந்தி கரைய -:இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து 
சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், 
மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை 
குறையும். தொந்தி கரையும்.முடிவளர -:எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு 
கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் 
குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.தலைப்பொடுகு நீங்க:கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் 
எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி 
வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.நாள்பட்ட புண் ஆற :கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் 
உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், 
புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள 
வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், 
உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு 
பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு
 வர வேண்டும்.இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் 
கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் 
பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை 
விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க 
வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, 
குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் 
தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக 
இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு 
வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் 
பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 
8.9, வைட்டமின் இல்லை.கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான 
மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து 
அதிகம்.இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் 
பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
தொந்தி கரைய -:

இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

முடிவளர -:

...
எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.

தலைப்பொடுகு நீங்க:

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

நாள்பட்ட புண் ஆற :

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.

கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.

இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.

கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.

தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.

இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.

1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,

2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.

மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.

அத்தி பற்றிய தகவல்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:14 PM | Best Blogger Tips
அத்தி பற்றிய தகவல்கள்...

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
அத்திப்பழம் ...
இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்தி பழத்தின் சத்துக்கள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.
See More

வெள்ளைப்பூண்டு பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:13 PM | Best Blogger Tips
வெள்ளைப்பூண்டு பற்றிய தகவல்.

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவ...
த்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர்.

பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது. காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது.

மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.
See More

பிளாக் டீ பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:12 PM | Best Blogger Tips
பிளாக் டீ பற்றிய தகவல்.


நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? தினமும் 4 கப் பிளாக் டீ குடித்தால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மனியில் உள்ளது ஹெயின்ரிச் ஹெயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ் சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் நிறுவனம். இரண்டும் இணைந்து க்ரிஸ்டியன் ஹெர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில் தினமும் 4 கப் பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்...
. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர். தினமும் அவர்களுக்கு பிளாக் டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில் டைப் 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு 20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டைப் 2 நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகி உள்ளது. இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
See More

சப்போட்டா பழம் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:12 PM | Best Blogger Tips
சப்போட்டா பழம் பற்றிய தகவல்.

சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலு...
ம்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.


ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
See More

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips
காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி
புகை பிடிப்பவரா....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவ...
ில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்பூரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.
See More

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் பற்றிய தகவல்.


* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்...
கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.

பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.
See More

3 வேளை உணவு பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips
3 வேளை உணவு பற்றிய தகவல்.


இன்றைய அவசர யுகத்தின் தவிர்க்க முடியாத பிரச்சனையாகி விட்ட உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்படக் காரணமான கொழுப்பை விரட்ட, உணவு பழக்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என...
்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.
See More

குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips
குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள் பற்றிய தகவல்.


பொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டன°, ஆகியவை முக்கியமானவை.

அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், நீண...
்ட நாள் வயிற்றுப் போக்கால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இந்த நோய் உண்டாகௌம்போது ஆபத்து ஏற்படுகிறது, இதனால் நிமோனியா, கண்பார்வையில் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகள் எற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அம்மை நோயின் அறிகுறிகள்- மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகௌம், முகம் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.

தொண்டை அடைத்தல்- இதுவும் மிக அபாயகரமானதாகும், இதனால் மூச்சு முட்டி உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இன்னோய்க் கிருமிகள் ஏற்படும் நச்சு காரணமாக இதயமும் நரம்பு மண்டலமும் பாதிப்படையலாம்.

இதன் அறிகுறிகளாக சிலவற்றை குறிப்பிடலாம். முதலில் குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும் வாட்டமுடனும் இருக்கும், சாப்பாடு விளையாட்டு ஆகியவை இருக்காது, கழுத்து வீக்கம் இருக்கும், மேலும் குழந்தைகள் பலவீனமடையும், கிருமிகள் சுவாசப் பகுதிக்குத் தாவும்போது சுவாசம் தடை படும் அபாயம் உண்டு, இதனால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

வறட்டு அல்லது குத்து இருமல்- தொடர் இருமலால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது, தொடர்ந்து இருமல் இருப்பதால் சில சமயங்களில் வாந்தி எடுக்கலாம், ஊட்டச் சத்து குறையும், முதலில் சளி பிடிக்கும், பிறகு இருமல் வலுக்கும் இதற்கு தற்போது மருந்துகள் ஏராளம் வந்து விட்டதால் இதன் ஆபத்தை மருத்துவ உலகம் ஏறத்தாழ களைந்து விட்டது என்றே கூறலாம்.


இளம்பிள்ளை வாதம்-- மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.

டெட்டனஸ்- பிறந்த குழந்தைகளை இந்த நோய் தாக்கினால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, தொப்புள் கொடியை சுத்தம் செய்யப்படாத கத்தியால் அறுப்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. திறந்த புண்கள் மூலமாக இப்புண்கள் பெரியவர்களையும் பாதிப்பதால், கருவுற்ற பெண்கள் இதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகிறது.

பிறந்து 5 முதல் 7 நாட்கள் கழித்து குழந்தை வாயைத் திறக்காது, பால் குடிப்பதை நிறுத்தி விடும், வலிப்பு ஏற்படும் இதனால் இறப்பு ஏற்படலாம். வளர்ந்தவர்களுக்கு வாய், மற்றும் கை கால்கள் விறைத்து ஒரு கட்டத்தில் உடம்பே விறைத்து விடும் அபாயம் உள்ளது, இதற்கும் தகுந்த மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.

காச நோய்- இந்த நோய் தற்போது முன்பிருந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இல்லாவிட்டாலும், தற்போதும் சுகாதாரக் குறைவால் இன்னமும் சில பகுதி மக்களிடையே இது அச்சுறுத்தும் ஒரு நோயாக இருந்து வருவது உண்மைதான். இந்த நோய் குழந்தைகளை தாக்கும் போது குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும், விளையாட்டில் நாட்டம் இருக்காது, உடல் எடை குறையும், காய்ச்சல் தலைவலி, நாற்றமுடன் கூடிய சளி வரும் இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். இருப்பினும் முறையான சோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கையாண்டால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.
See More

உடல் ஃபிட்னெஸ் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:09 PM | Best Blogger Tips
உடல் ஃபிட்னெஸ் பற்றிய தகவல்.

உங்கள் உடல் தகுதி, அதாவது ஃபிட்னெஸ் லெவல் (Fitness Level) எப்படி உள்ளது? என்பதை அறிய கீழ் வரும் கேள்விகளுக்கு நீங்களாகவே உண்மையான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

அ, ஆ, இ, இந்த மூன்று பதில்களில் நீங்கள் கிளிக் செய்வதைப் பொறுத்து 'அ' என்ற பதிலுக்கு 2 மதிப்பெண்கள் கொடுங்கள், 'ஆ' -விற்கு 5 மதிப்பெண்கள் கொடுங்கள், 'சி'-யிற்கு 10 மதிப்பெண்கள் கொடுங்கள். பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

முதலி...
ல் கேள்வி-பதில்கள் இதோ:

1. 6 மாடிக் கட்டிடத்தை படிகளில் ஏறுவீர்களா?

அ) ஒரு சொட்டு வேர்வை கூட வராமல் ஏறுவேன்.
ஆ) ஏறுவேன் ஆனால் தஸ் புஸ் என்று மூச்சுத் திணறியபடியே ஏறுவேன்.
இ)ஏறுவேன் ஆனால் இடையிடையே சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன்.

2. உடற்பயிற்சி செய்யும் போது அதாவது ஜிம்மில் சென்று செய்யும்போது அல்லது வெயிட் லிப்டிங் செய்து முடிக்கும்போது உடலில் கடும் வலி ஏற்படுகிறதா?

அ) ஒரிரண்டு நாட்களுக்கு வலி இருக்கும்.
ஆ)சில நாட்களுக்கு வலி, உடல் ஊறு இருந்துகொண்டேயிருக்கும்.
இ)வெளியே சென்று பயிற்சி செய்வது கடும் பயிற்சி செய்வது என்னுடைய தசைகளை ஒருவாரத்திற்கு செயலிழக்கச்செய்யும்.

3. இரண்டு அல்லது 3 கிமீ தூரம் இடைவெளியின்றி நிறுத்தாமல் ஜாகிங் செய்வீர்களா?

அ) எந்த வித கடினமும் இல்லாமல்.
ஆ) வேண்டுமானால் முயன்று பார்க்கலாம், ஆனால் உறுதியாக கூறமுடியாது.
இ) சத்க்டியமாக முடியவே முடியாது.\

4. உங்கள் முழங்காலை மடக்காமல் உங்கள் கால் கட்டை விரலைத் தொட முடியுமா?

அ) சுலபமாக.
ஆ)முயற்சி செய்து பார்க்கிறேன்.
இ) முன்பு தொடமுடிந்தது, இப்போது முடியவில்லை.

5. மருத்துவரை எவ்வளவு முறை பார்க்கிறீர்கள்?

அ) ரெகுலர் செக்-அப்பிற்காக ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பேன்.
ஆ) உடம்பு சரியில்லாத போது மட்டும் பார்ப்பேன்.
இ) சிலவாரங்களுக்கு ஒரு முறையாவது பார்க்க நேரிடும்.

6. 100மீ தூரத்தை 15 வினாடிகளுக்குள் ஓடி முடிப்பீர்களா?

அ) ஆமாம்
ஆ) ஓட முடியலாம்.
இ) அதெல்லாம் முடியாது, நான் என்ன பைத்தியமா?

7. மராத்தான் போட்டி நடைபெறுகிறது என்றால் நீங்கள் எப்படி அதற்கு தயாராவீர்கள்?

அ) டிரெய்னிங் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு தயாராகச் செல்வேன்.
ஆ) சில வாரங்கள் கொடுத்தால் உடல்தகுதி பெற்று வேகத்திற்கு ஈடு கொடுப்பேன்.
இ) என்ன பாஸ்! விளையாடுறீங்களா?

8. ஓடும்போதோ, பயிற்சி செய்யும்போதோ அப்பாடா போதும்டா சாமி என்று உட்காராத அளவுக்கு உங்கள் இருதயம் எவ்வளவு நிமிடம் தாங்கும்?

அ) 20 நிமிடங்களுக்கு மேல் தாங்கும்.
ஆ) 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை தாங்கும்.
இ) 5 நிமிடத்திற்கும் குறைவே.

9. தற்போது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி செய்கிறீர்கள்?

அ) வாரத்தில் 3 தடவைகளுக்கு மேல்.
ஆ) வாரத்திற்க் ஒரு முறை அல்லது இருமுறை.
இ) நேரமே இருக்கறதில்லை பாஸ்!

இந்த 9 கேள்விகளுக்கும் பதில் கொடுத்து அதன்ற்கான மதிப்பெண்களை நீங்களே கொடுத்துக் கூட்டிப்பார்த்து எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்.

38 மதிப்பெண்கள் முதல் 55 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் முழு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது, உங்கள் உணவுப்பழக்கம் எல்லாம் சரியே நீங்கள் இதுவரை செய்து வந்ததை அப்படியே தொடரலாம்.

56 மதிப்பெண்கள் முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் சவரம் செய்வது போல் பயிற்சி செய்யவேண்டிய தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 3 முறை பயிற்சி செய்வது தேவை ஆனாலும் இது கட்டாயம் இல்லை. இருந்தாலும் இதில் நீங்கள் அலடியம் காட்டினால் உடல் எடை, சதை போடுதல் வெகு விரைவில் நிகழும் வாய்ப்புள்ளது.

101 முதல் 140 மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா, உங்களுக்காகத்தான் உடல் எடைக்குறைப்பு ஜிம்களும், 'குண்டாக இருக்கிறீர்களா எங்களிடம் வாருங்கள் அப்படியே 20 கிலோ குறைக்கிறோம் ரக விளம்பரங்கள் உங்களைப்போன்றவர்களுக்காகவே உருவாகியுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அலட்சியம் காட்டி வருகிறீர்கள் என்று பொருள். ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை. பயிற்சியை ஒரு தினசரி நடைமுறையாக்கினால் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் பாதைக்குத் திரும்ப முடியும்.
See More

கணினிகளுக்கு ஏய் வைரஸ் முன்னெச்சரிக்கை பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:07 PM | Best Blogger Tips
கணினிகளுக்கு ஏய் வைரஸ் முன்னெச்சரிக்கை பற்றிய தகவல்.

டி.என்.எஸ்., சேஞ்சர் (D.N.S. Changer) மூலம் அபாயம் வருமா ?

இன்று (09/07/2012) ஏய் வைரஸிலிருந்து கணணியை பாதுகாக்க முன்னெச்சரிக்கைகள்...

ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போ...
வதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் இன்று (09/07/2012) அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( D.N.S., - டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி. (I.P.) எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்., சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., (F.P.I) மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி (09/07/2012) செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம் தேதி (09/07/2012) என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

- வைரசை முற்றிலுமாக அழிக்க :

ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் Exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

- மேக் (Mac) கணினிகளுக்கு:

மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.
See More

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 5:07 PM | Best Blogger Tips
கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல்.

நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்க...
ுதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
See More

தூதுவளை பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips
தூதுவளை பற்றிய தகவல்.

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம். இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்...
ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

தூதுவளைக் கீரை முட்கள் நிறைந்த ஒருவகை கீரையாகும். முட்கள் நிறைந்த மூலிகைகளின் பூக்களில், நரம்புகளை வலுவாக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்கிறான். தூதுவளைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உணர்வு நரம்புகள் பலப்பட்டு, சரும நோய்கள், பார்வைக் குறைவு, காது கேளாமை, ருசியின்மை போன்ற கோளாறுகள் மாயமாய் மறையும்.

தூதுவளை தோசை

முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதனை எட்டு கரண்டி தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது; சுவையானது. இதனை வாரம் இருமுறையேனும் உட்கொண்டு வந்தால் சளி, இருமல், கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தூதுவளை ரசம்
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதாய் அரிந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மைய தட்டி எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சிறிதாய் அரிந்து, அவற்றை தூதுவளை இலையுடன் சேர்த்து வதக்கி, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சூடு செய்யவும். கொதி வருவதற்கு முன் இறக்கி சுவையாய் சாப்பிட, சளி, இருமல் மூக்கடைப்பு, ஈஸ்னோபீலியா, தும்மல், சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்துக் குறைகளும் தீ ரும்

நல்ல பசி உண்டாக...

தூதுவளை இலைகள் மூன்று, மிளகு மூன்று, சிறிது மஞ்சள் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட, நல்ல பசி உண்டாகும்.

தொண்டைச் சதை கரைய...

தூதுவளை இலை ஒரு கைப்பிடி, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்கு நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரி லிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய்ச் சுண்டச் செய்து, வேளைக்கு அறுபது மி.லி. வீதம் தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, ஏழு தினங்களில் தொண்டையில் வளர்ந்துள்ள சதை (பர்ய்ள்ண்ப்ண்ற்ண்ள்) கரையும்.

விடாத இருமல் விலக...

தூதுவளை இலை ஒரு கைப்பிடி, உலர்ந்த திராட்சை முப்பது எண்ணிக்கை, அதிமதுரம் ஒரு துண்டு, சீரகம் பத்து கிராம் ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் காலை, ம தியம், இரவு மூன்று வேளையும் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர, எப்பேர்ப்பட்ட இருமலும் மூன்று தினங்களில் குணப்படும்.

ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாக...

தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து, வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து, தேனில் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீ ரும்
சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...
தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.

தூதுவளை மிக நுண்ணறிவு தரும் மூலிகையாகும். இதனை அலட்சியம் செய்யாமல் பிறவிப்பயன் பெற வேண்டி, குருவின் திருவடி சரணடைந்து வணங்கி, ஏதேனும் ஒரு வகையில் உட்கொண்டு வரவேண்டும். இதனால் தேக அசுத்தம் நீங்கி, தேகம் வலுவாகி, உடம்பில் ஒளி, தேஜஸ், காந்தம் உண்டாகும். அதுவே முக்திக்கும் ஏதுவாகும்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாதம் பணிவோம். அவர் வழிகாட்டிய ஞான மூலிகையாம் தூதுவளையைச் சரணடைந்து, பிறவிப் பயன் பெறுவோம்
See More