சம்மணம் போட்டு உட்காருவது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:45 | Best Blogger Tips

 

 சங்கடங்களை போக்க சம்மணமிட்டு உட்காருங்கள்!

🌹 அன்பு நெஞ்சங்களே!
👨‍👩‍👦‍👦 சொந்த பந்தங்களே!!
🤝 நட்பு வட்டங்களே!!!


🙏அனைவருக்கும் எமது மகிழ்வான இனிய  வணக்கம்🙏





🌺கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது ! கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !! 



🌻தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ (?) இருவரோ(?) வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!



🌻ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!



🌻கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!



🌻ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு ! இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு !! 



🌻இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு ! அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் ? தெரிந்த விஷயம் !! 



🌻பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க ! அதிகரிக்க ! மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான் !!

உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? சவால்!

🌻கீழே சம்மணம் போட்டு உட்காருவது ? யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது !!



🌻இந்தியா ! சீனா ! ஜப்பான் ! என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் ? சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள் !! 



🌻செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் ? வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான் !!

தமிழ் EPIC - #சம்மணம்_என்றால்_என்னவென்றுதெரியுமா? *சங்கடங்களை போக்க  சம்மணமிடுங்கள்*... நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக ...

🌻கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ? ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா ! சேர்களை ! வாங்கி முதுகுவலி ! மூட்டுவலியை ! விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம் !!



🌻சோபா ! சேரில் ! நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் ? முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு !!

eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

🌻அடுத்து பின்புறவலி ! காரணம் ? சோபாவில் உட்காருவதால் ? பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது ! பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் ? முதுகுவலி ! மூட்டுவலி ! என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் !!






🌻கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் ? வயதானவர்கள் கீழே விழுந்து கையை ! காலை ! முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள் !! 



🌻காரணம் ? அவர்கள் வாழ்வதே தரையில் தான் !! 



🌺கீழே படுத்து ! உட்கார்ந்து ! எழும் ! அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் ! எலும்புகளும் ! அத்தனை வலுவாகி விடுகின்றன !!

Thread by @VasaviNarayanan on Thread Reader App – Thread Reader App

 🌻ஆனால் ? சோபா ! மெத்தையில் படுத்து ! பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு ? வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் ! கீழே விழுவதுதான் !!



🌻ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன ! என சொல்லுகின்றன ஆய்வுகள் !! 



🌻சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும் ? புழங்குவதும் ? நம் ஆயுளை கூட்டி ! முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி ! பின்புறத்தையும் ! முதுகுத் தண்டையும் ! மூட்டையும் ! வலுவாக்குகின்றன !!



🌻அதனால் ! இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை ! எனில் ? இனி உட்கார்ந்து பழகுங்கள் !! 

சம்மணம் போட்டு தரையில் உட்காருங்க, இந்த நோய்களை எல்லாம் விரட்டிடலாம்!

🌻அப்படி உட்கார்கையில் ? முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் ? அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள் !!



🌻இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி ! போஸ்டர் (Posture) சரி செய்யும் !! சம்மணமிட்டு அமர்வதையும், உணவு உண்பதையும், நம் நல்ல பழக்கமாக்கி, நம் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்வோம். இதற்கு வேறு எந்த உபகரணமோ, பணமோ, பயிற்சியோ கூடுதல் நேரமோ தேவை இல்லை, நாம் மனதில் நிறுத்தி கிழே சம்மணமிட்டு அமரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டும் போதும்...... 

 


நன்றி இணையம்


சுயம்புவாய் தோன்றிய *கோனேரிராஜபுரம்* *நடராஜர்* !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:39 | Best Blogger Tips

 May be an image of temple

சுயம்புவாய் தோன்றிய *கோனேரிராஜபுரம்* *நடராஜர்* !

எட்டு  (😎 அடி உயரம்... கைரேகைகள், தேமல், மச்சம்... என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி... நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!

சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

நாட்கள் நகர்ந்தன... எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்என்று எச்சரித்தான்.

ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ‘’உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா’’ என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ‘’காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றான் விரக்தியாக! அத்துடன் தனது நிலையையும் விவரித்தான்.

இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்... அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது சிவ பார்வதி என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி.

விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க... அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறை உணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன.

கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான். தானே தோன்றியவர் என்பதால், தம்முடைய மேனியில், மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சங்களுடன் திகழ்கிறாராம்! ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.

ஆனித் திருமஞ்சனத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநடராஜரையும் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபூமிநாதரையும் வழிபடுவது வளம் தரும்.

இத்தகைய சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் மாசி மகம் அன்று மலர் அலங்காரத்துடன், நடன சபாபதி

 

😎 🙏

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸 

 

 

 

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️