*ஏசியை 26+ டிகிரியில் வைத்து ஃபேன் போடுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

 Put AC at 26+ degrees and the Fan on - Great Telangaana | English Put AC at  26+ degrees and the Fan on.

 

*ஏசியை 26+ டிகிரியில் வைத்து ஃபேன் போடுங்கள்
 
மின் வாரிய த்திலிருந்து அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்*
 
ஏசியின் சரியான பயன்பாடு.
 
கோடை வெயில் தொடங்கிவிட்டதால் AC ஐ அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையைப் பின்பற்றுவோம்.
 
பெரும்பாலான மக்கள் தங்கள் ஏசிகளை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல் குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது.
 
அதாவது,
நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும்.
What Are The Cons Of An LG AC? Quora, 41% OFF
 
23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை உடல் எளிதில் பொறுத்துக்கொள்ளும். இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
 
அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, உடல் தும்மல், நடுக்கம் போன்ற வற்றினை எதிர்த்து போராட வேண்டும்.
 
நீங்கள் 19-20-21 டிகிரியில் ஏசியை இயக்கும்போது, அறையின் வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும். மேலும் இது உடலில் ஹைப்போதெர்மியா எனப்படும் நோய் உருவாகிறது, இது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதனால் உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் போதுமானது இல்லை. . மூட்டுவலி போன்ற நீண்ட கால தீராத வலிகள் உருவாகின்றன.
 
பெரும்பாலும் ஏசி ஆன் செய்யும்போது வியர்வை வராது, அதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வர முடியாமல், நாளடைவில் தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
 
நீங்கள் குறைந்த வெப்பநிலையில் ஏசியை இயக்கும்போது, 5 ஸ்டார் AC ஆக இருந்தாலும், அதன் கம்ப்ரசர் முழு ஆற்றலில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகப்படியான மின்சாரம் செலவழிக்கப்படுகிறது மற்றும் அது உங்கள் பணத்தை விரயமாக்கிறது.
 
முதலில் ஏசியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்பதை மனதளவில் நீங்கள் ஒத்துக்கொள்ள வெண்டும்.
 
அப்படியானால்
 
ஏசியை இயக்க சிறந்த வழி எது ??
 
*26 டிகிரி* அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை அமைக்கவும்.
 
*26+* டிகிரியில் ஏசியை இயக்குவதும், மெதுவான வேகத்தில் மின்விசிறியைப் போடுவதும் எப்போதும் நல்லது. *28 பிளஸ்* டிகிரி சிறந்தது.
 
இதற்கு மின்சாரம் குறைவாக செலவாகும், 
மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும், மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தத் தீங்கும் ஏற்படாது.
 
இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஏசி குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும், மின்சாரம் சேமிக்கப் படுகிறது. மூளையின் இரத்த அழுத்தமும் குறையும் மற்றும் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.
 
எப்படி ??
 
*26+* டிகிரியில் ஏசியை இயக்குவதன் மூலம் ஒரு இரவுக்கு சுமார் 5 யூனிட்கள் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், சுமார் 10 லட்சம் வீடுகளும் உங்களைப் போலவே செய்கின்றனர் என்றால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கிறோம்.
 
பிராந்திய அளவில் இந்த சேமிப்பு ஒரு நாளைக்கு கோடி யூனிட்களாக இருக்கும்.
 
இதனால் புவி சூடாதல். குறையும். இதனால் இயற்க்கை பாதுகாக்கப்படும்.
 
தயவு செய்து மேற்கூறியவற்றைக் கவனியுங்கள், உங்கள் ஏசியை 26 டிகிரிக்குக் கீழே இயக்க வேண்டாம். உங்கள் உடலையும், சுற்று சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
பொது நலனுக்காக அனுப்பப்பட்டது.
🎈🧸🎈

 நன்றி இணையம்

இடைக்காடர்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips

 Idaikkadar | இடைக்காடர் - SIDDHARGAL THIRUVADI SEVA TRUST

வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்
 
இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர். 
Idaikkadar Siddhar-Life History, Songs, JeevaSamadhi-Temple. | TKN Siddha  Ayurveda Vaidhyashala (Hospital)
 
""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.
 
""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர். 
 ஒளி வடிவில் அருள்பாலிக்கும் இடைக்காடர் சித்தர் - சர்வமங்களம் | Sarvamangalam
அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். 
 
இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார். 
 Idaikadar siddar | இடைக்காடர் சித்தர் | 18 siththargal - Neerodai
இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. 
 
நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின.
 
 அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .
இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். 
 
அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார். அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.
 
கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர்.
 
 அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. 
 இடைக்காட்டு சித்தர் வரலாறு | idaikadar siddhar in tamil
பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது. சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,
பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். 
 
அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். 
 
சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.
 
(இடைக்காடர் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது)
 

 

இழந்த பதவியை மீட்டுத் தரும் பஞ்சநத நடராஜர்....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips

 இழந்த பதவியை மீட்டுத் தரும் பஞ்சநத நடராஜர் | Lost post give nataraja worship


ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி.
இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. 
 பஞ்சநதன நடராஜர் கோவில் – chinnuadhithya
இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது.சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். 
 
சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.Mantras and Miracles - பஞ்சநத நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத  கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து ...
 
பாறைகளின் சிறப்பு.......
 
ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன.இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.
 
நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.இழந்த பதவியை மீட்டுத் தரும் பஞ்சநத நடராஜர் | Lost post give nataraja worship
 பதவியை இழந்தவர்கள் ஊட்டத்தூரில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
 
 
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது) என்ற தலத்தில் உள்ள அபூர்வ நடராஜ பெருமான் திருமேனி.
 
 

 

இந்தியா தயாரித்த, சூப்பர்சானிக் டர்பீடோக்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 PM | Best Blogger Tips

 சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

இந்தியா தயாரித்த, சூப்பர்சானிக் டர்பீடோக்கள்! கதறும் சீனா, அலறும் வல்லரசுகள்!
 
இந்தியா விதவிதமான ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அது சீனாவை மட்டுமல்ல, அமெரிக்காவையும் அச்சுறுத்தியுள்ளது.
 
🌝🔥👀 சீனா தனது நான்காவது விமானந்தாக்கி கப்பலை கட்டி முடித்தது. அது அமெரிக்காவின் ஃபோர்டுக்கு இணையானது, நிமிட்ஸ் கிளாஸ், உலகின் சிறப்பானது,80,000 டன் எடை கொண்ட மிகப்பெரியது என்று அதுவே சொல்லிக்கொள்கிறது. வெற்றிகரமாக நடத்தப்பட்ட சூப்பர்சானிக் டார்பிடோ ஏவுகணை சோதனை ! – News18 தமிழ்
 
அதற்கு சீனா US$ 3.8 பில்லியன் செலவு செய்து அதை கட்டியுள்ளது. சீனா 
 
அமெரிக்காவைப்போல உலகை ஆளப்போகிறது என்று நம் அல்லக்கைகள் கொண்டாடுகிறார்கள்.
அதை வரவேற்க, இந்தியா பிரம்மோஸ் என்ற வகை, ஏவுகணையை, அதன் வாயிலில் இருக்கும் பிலிப்பைன்ஸுக்கு கொடுத்துள்ளது. அதன் விலை US $3.8 மில்லியன். அதில் மூன்றே முன்று ஏவுகணை போதும் சீனாவின் அந்த மிகபலமான புத்தம்புது விமானந்தாங்கி கப்பலை தாக்கி அழிக்க. 
 
சீனா, பிலிப்பைன்ஸை அளவுக்கு அதிகமாக அசிங்கப்படுத்தி வந்த நிலையில் பிலிப்பைன்ஸுக்கு அதை நாம் விற்றுள்ளோம். அதாவது இந்தியா பிலிப்பைன்ஸ் செலவில் சீனாவிற்கு சூனியம். May be an image of 1 person, beard, scarf, glasses and overcoat
 
சீனாவின் ஆதரவாளர்கள் அடுத்த வல்லரசு அதுதான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு உள்ளார்கள். ஆனால் அவர்கள் நம் மக்களை நம்பவைக்கும் அளவிற்கு நமக்கு அதுபற்றி தெரியாததால். அதனால் கொஞ்சம் விரிவாக, கொஞ்சம் வரலாற்றோடு இந்தியன் என்ற பெருமையோடு பகிர்கிறேன். 
 
பிரிடிஷ் காலத்தில் டாங்குகளே போர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. பின்னால அது போர்விமானம் என்று அதன் பரிமாணம் மாறியது. ஆனால் அது கனமான ஆயுதங்களை நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய திறமை அதனிடம் இல்லை. 
 
அதனால் C-2B வகை நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய பெரிய விமானங்களை தயாரித்தார்கள். அது பெரியளவிலான ஆயுதங்களை நீண்டதூரம் பறந்து சென்று, தாக்கிவிட்டு, திரும்பிவரும் திறன் கொண்டது. அது சில டிகேடுகள் கோலோச்சியது. 
 நவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதனை | BrahMos  supersonic cruise missile, with enhanced capability, successfully test -  hindutamil.in
ஆனால் சிறிய வகை விமானங்கள் அதைவிட வேகமாக பறக்கக்கூடியதால், அதை தற்காத்துக்கொள்ள, அதனிடம் மிஸைல் அமைப்புகளை கூட்டினார்கள். இருந்தாலும், இன்று நம்மிடம் இருக்கும் பிரம்மோஸ் வகை ஏவ்கணைகளை அதனால் தடுக்க முடியாது என்பது அதன் ஆதிக்கத்தை கேள்விக் குறியாக்கி, வரலாறு ஆக்கிவிட்டது.
 
ஆனால் நீண்டகாலமாக உலகத்தை ஆளுமை செய்யும் திறன் கப்பற்படைகளுக்குத்தான் இருந்தது. அதை முதன் முதலில் உலகளவில் செய்யாவிட்டாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் தனது கப்பல் படைகளால் ஆதிக்கம் செலுத்தியது சோழர்களே!
 
அதன் பின்னர் பலமான போர்க்கப்பல்கள் தாம் உலகை ஆளும் திறமையை வல்லரசை தீர்மானித்தது. அதை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தியது பிரிடிஷ், அதன் மூலம் உலகத்தையே அதன் காலனியின் ஆதிக்கத்துக்கு கொண்டுவந்தது. 
 
குட்டி தீவுகளான கிரேட் பிரிட்டன் மட்டுமல்ல, அதை டச்சு, போர்ச்சுகீசியர்களும் பெருமளவில் செய்தார்கள். ஆனால் அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 
 
அது தன் ஆதிக்கத்தில் கொண்டுவந்த நாடுகளை தன் வசம் மீட்டு வைத்திருக்க, நீண்டதூரம் பயணிக்க முடியாததால் ஆங்காங்கே தீவுகளை பிடித்து அதன் படைகளை குவித்தன வல்லரசுகள். ஆனால் அது மிக அதிகமான செலவையும், அதை பராமரிப்பதும் கடினமாகியது. மேலும் அந்த தீவுகள் பெரும் புயலில் பேரழிவை சந்திக்கவேண்டி இருந்தது. 
 
 
அதனால் 18 ஆம் நூற்றாண்டிலேயே மிதக்கும் தீவுகள் என்று சொல்லப்பட்ட, விமானந்தாங்கி கப்பலை சோதனை ரீதியில் வெற்றிகரமாக கட்டியது அமெரிக்கா. அதன் பின்னர் நீண்ட தூரம் பயணிக்க பெரிய விமானந்தாங்கி கப்பல்களையும், அதை பாதுகாக்க பல அடுக்கு பாதுகாப்பு போர்க்கப்பல்களையும் கட்டியது. அதில் மிகப்பெரியது நிமிட்ஸ் கிளாஸ் விமானந்தாங்கி கப்பல்கள். 
 
அமெரிக்காவிடம் 11 விமானாந்தாங்கி கப்பல்கள் உள்ளது. அதன் மூலம் அந்த ஒரு படையை வைத்தே சாதாரணமான ஒரு நாட்டை தாக்கி அழிக்கவோ, அல்லது பிடிக்கவோ முடியும். அதனால்தான் அமெரிக்கா உலக வல்லரசாகி, உலகம் முழுவதும் கோலோச்சியது. 
 
ஆனால் ரஷ்யாவிடம் ஒரே ஒரு விமானந்தாங்கி கப்பல்தான் உள்ளது. மாறாக அதனிடம் மிக வலுவான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளது. அது மேற்சொன்ன மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலையே அழிக்கக்கூடியது.
 
இந்தியா பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிடிஷும் இந்தியாவை இரண்டே இரண்டு விமானந்தாங்கி கப்பலால் சுற்றி வளைத்துவிட்டது. இந்தியாவை மீண்டும் தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்ற கனவுடன் அது அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் நுழைந்துவிட்டது.
 
எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலையில், ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிற்கு ஆதரவாக அங்கே வந்துவிட்டதை அந்த நாடுகள் உணரவில்லை. அங்கிருந்து திரும்பி போகாவிட்டால், மொத்த விமானந்தாங்கி கப்பற்படையையும் தாக்கி அழிப்போம் என்று ரஷ்யா கர்ஜித்தது. 
 
அதனால் இரண்டு பெரிய விமானந்தாங்கி கப்பற்படைகளும் சுவடு தெரியாமல் ஓடிய வரலாறை இன்றுவரை பல அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்குமே தெரியாது!
அடுத்த வல்லரசாக துடிக்கும் சீனா, பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டிக்கொண்டுள்ளது. அதற்கென சொந்த மூளை கிடையாது, அதனால் அது அமெரிக்காவின் நூறாண்டு பழைய வழியையே பின்பற்றுகிறது. 
 
அது சமீபத்தில் தனது நான்காவது மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டி முடித்துள்ளது. அந்த விமானந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பலிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு கொண்டவை.
 
ஆனால் இந்தியாவின் பிரம்மோஸுக்கு அதனால்.பதில் சொல்ல முடியாது. அந்த நான்கு மிகப்பெரிய கப்பலை அழிக்க, 12 பிரம்மோஸ் போதும் அதை முற்றிலும் தாக்கி அழிக்க முடியும். அதுவும் அதை தரை, கடல், வான் என்று மூன்று நிலைகளில் இருந்தும் அதை ஏவ முடியும். 
 
பிலிப்பைன்ஸ் என்பது பல தீவுகளை கொண்ட சீனாவிற்கு அருகில் தென் சீனக் கடலில் உள்ள ஒரு குட்டி நாடு. அதை சீனா தன்னிடம் இருந்த வலுவான கப்பற்படையை வைத்து, கொடுமைபடுத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கிறது என்றாலும், அதனால் அதை சீனாவை நேரடியாக சமாளிக்க முடியவில்லை. 
 
இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் அதன் வலிமைக்கு மீறி செலவு செய்து பிரம்மோஸ் வகை ஏவுகனையை வாங்கியுள்ளது. அதை வைத்து சீனாவின் மிகப்பலமான விமாந்தாங்கி கப்பலை தாக்கி மூழ்கடிக்க முடியும். அதை நிலம், நீர், ஆகாயம் என்று எல்லா நிலைகளில் இருந்தும் ஏவ முடியும் என்பதால் பல தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸ் அதை எங்கே இருந்து தாக்கப்போகிறது என்று சீனாவிற்கு தெரியாது!
 
இன்னும் சொல்லப்போனால் அதை சீனாவிடம் நான், இத்தனை மணிக்கு பிரம்மோஸை ஏவுகிறேன் என்று நேரம் காலம் குறித்து அதை ஏவினாலும் கூட, சீனாவால் அதை தடுக்க முடியாது. சீனாவால் மட்டுமல்ல, அமெரிக்காவல் கூட முடியாது என்பதுதான் ஹைலைட்டே!
அதனால் சீனா இப்போதைக்கு தனது நான்கு விமானந்தாங்கி கப்பலை ஒரே இடத்தில் வைக்க முடியாது... 
 
அதுமட்டுமா, இந்தியா இப்போது சூப்பர்சானிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. டர்பீடோக்கள் என்பது நீருக்குள் செல்லும் சிறியவகை ஏவுகனைகள். அது கப்பல்கள் முதல் நீர்மூழ்கி வரை தாக்கி அழிக்கக்கூடியவை. ஆனால் அதன் தாக்கும் தூரம் என்பது 350 கிமீ தூரம் வரை மட்டுமே.. அப்படியெனில் கப்பல்கள் அருகில் சென்றுதான் அதை தாக்க முடியும், அது ஆபத்தானது! 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா சூப்பர்சோனிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளில் இருந்து இந்த டர்பீடோக்களை வைத்து தாக்கக்கூடிய காம்போ வகை என்பதால், இந்தியா வங்காள விரிகுடாவில் இருந்தே தென் சீனக்கடலில் இருக்கும் சீனாவின் விமானந்தாங்கி கப்பலையோ அல்லது மேற்பரப்பில் உள்ள அதன் நீர்மூழ்கி கப்பலையோ அழிக்க முடியும். 
 
பில்லியன்களில், ட்ரில்லியன்களில் சீனா அதன் மிகப்பெரிய கப்பற்படையை கட்டி, உலக வல்லரசாகிவிடலாம் என்ற கனவில் இருந்தது. ஆனால் இந்தியா அதற்கு மில்லியன்களில் முடிவுரை எழுதும் வல்லமையை பெற்றபின்னர், சீனவிற்கு உலகத்தரம் வாய்ந்த கப்பற்படை, இன்று வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு இருக்கிறது!
 
என்னடா சீனாவிற்கு வந்த சோதனை? 
 
ஆனால் சீனாதான் அடுத்த வல்லாசு, இந்தியாவால் அதற்கு நகக்கீரலைக்கூட கொடுக்க முடியாது என்று பேசிய இந்தியாவில் இருக்கும் அதன் கைக்கூலிகளும், கொத்தடிமைகளும்தான் அலறப்போகிறார்கள். அதனால் மறக்காமல் வாழ்த்துச்சொல்லி அவர்களுக்கு பகிரவும்! 👀
💗
🐶
நன்றி Indhea
நன்றி இணையம்