புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips
Photo: புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

கோடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருத்தியை உடல் பரிசோதனைக்காக சோதித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய வசந்த காலத்தில் அவளைப் பரிசோதித்த மருத்துவமனையிலிருந்து வந்த குறிப்பு "படிப்பில் கெட்டிக்காரி; ஆனால் வகுப்பில் அதிகம் பேசுவதில்லை" என்று தெரிவித்தது.

"இதுதான் இப்போதும் உனக்குப் பிரச்சினையா?" என்று அவளிடமே கேட்டேன்.

"எனக்கு கூச்சம் அதிகம் - அவ்வளவுதான்" என்றாள்.

இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?

உளவியல் ஆலோசகரைப் பாருங்கள் என்று அந்தப் பெண்ணுடைய தாயாரிடம் கூறலாம்.

அவளுடைய கல்வியறிவைச் சோதிக்கலாம்.

வகுப்பில் உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா; உன்னை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்கலாம்.

நிறைய பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள்தான், இது சகஜம்தான் என்று சொல்லலாம்.

இவற்றில் எதை நான் செய்திருந்தாலும் சரிதான்.

மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களைக் கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மௌனம்காக்கின்றன பல குழந்தைகள். ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக் கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளைப் பேச விட்டுக் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும்; அதுவும் பரிவோடு.

மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மௌனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.

அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவக் கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றைப் பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர்.

பேசாமலும் தங்கள் வேலைகளை மௌனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாச்சாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேட்டால் உடனே கையை உயர்த்தாத குழந்தைகள், வகுப்பில் ஏதும் பேசாத குழந்தைகள் ஆகியோர் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறார் டாக்டர் மெரிகங்காஸ்.

ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையைப் போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது.

"குழந்தைகளின் மனப்பாங்குதான் அவர்களுடைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. ஒருவருடைய சுபாவத்தை வைத்து அவர்கள் எப்படி இருப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று கணிப்பது தவறு. அவர்களுடைய லட்சியம் எப்படிப்பட்டது, செயல்வேகம் எப்படிப்பட்டது, திறமை எப்படிப்பட்டது என்பதை சுபாவத்தை வைத்து ஊகித்துவிட முடியாது" என்கிறார் டாக்டர் வில்லியம் கரே. இவர் பிலடெல்பியாவில் குழந்தைகள் மருத்துவப் பிரிவு பேராசிரியராகப் பணிபுரிகிறார். "உங்கள் குழந்தையின் மனப்பாங்கைப் புரி்ந்துகொள்ளுங்கள்" என்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார்.

"மௌனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்குப் புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மௌனாக இருக்கிறது. புதிய சூழலுக்குப் பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய வகுப்புக்குப் போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கும். அம்மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.

பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்" என்கிறார் ஆன் மேரி ஆல்பனோ. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனப் பதற்றம் தொடர்பான நோயியல் பிரிவுத் துறைத் தலைவர்.

காது கேளாமை, கரும்பலகையில் எழுதியிருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் குழந்தையிடம்தான் குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் மௌனமே, உதவிக்காக ஓங்கி ஓலிக்கும் குரல்தான் என்பதைப் புரி்ந்துகொள்ள வேண்டும்.

சாதாரணமாகக் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டாலும் அந்தக் கூச்சம் இயல்பானதுதானா அல்லது சமூகத்தைப் பார்த்து அவர்களோடு சேர முடியாமல் போனதால் ஏற்பட்டதா என்பதைப் பிரித்து அறிய வேண்டும். சரியாக அடையாளம் காணாமல் மருந்து மாத்திரைகளை வழங்குவது தவறானது என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

"புதிய வகுப்பறை, புதிய வகுப்புத் தோழர்கள், புதிய பாடத்திட்டம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பதற்றம் பெரிதாக இருக்கும். இந்தச் சூழலை ஊகித்துப் பெற்றோர்கள்தான் அவர்களை முன்கூட்டியே அதற்குத் தயார்படுத்த வேண்டும்" என்கிறார் மன்ஹாட்டனில் உள்ள குழந்தைகள் மன நலக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீவன் கர்ட்ஸ். அதேசமயம், "அவசரப்பட்டோ அதிக அளவிலோ அடிக்கடியோ அவர்களை இந்த மாதிரியான சூழல்களுக்குத் தயார்படுத்திக்கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் அவர்களால் சுயமாக இத்தகைய புதிய சூழலுக்குத் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம்" என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை இன்னொரு குழந்தையோடு சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பழக்கலாம். அமைதியான, சாதுவான அந்தக் குழந்தைகளைப் பக்கத்தில் அமர்த்தி சாதுவான குழந்தைக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை ஊட்டலாம்" என்கிறார் கர்ட்ஸ்.

"இதில் செய்யக் கூடாதது எதுவென்றால், கூச்சப்படாதே, அமைதியாக இருக்காதே என்று சதா அறிவுரை கூறுவதுதான்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மெரிகங்காஸ். "கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் போக்கை மாற்ற முயற்சிப்பதைவிட அதைப் புரிந்துகொண்டு உலகில் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைச் சொல்லித்தருவதுதான் நல்லது" என்று நம்பிக்கை தருகிறார் பிரகாசிக்கும் கண்களோடு!

(c) தி நியுயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
யோக முத்திரைகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
யோக முத்திரைகள்..!

பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம், நெருப்பு,   நிலம்,  உலோகம், நீர்,  மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, யோகாசனம், தியானம் செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றின் சமநிலையைப் பேணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீர்படும். இவை சிலவகை முத்திரைகள் மூலம் பெறப்படுகிறது. ஒழுங்கான முத்திரை உபயோகமும் தியானமும் எம் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களைக் குறிப்பிடுகின்றன. 

கட்டை விரல் – நெருப்பையும் சுட்டுவிரல் – காற்றையும் நடுவிரல் – ஆகாயத்தையும் மோதிர விரல் – நிலத்தையும் சுண்டு விரல் – நீரையும் குறிக்கின்றன.
பழைய காலங்களில் முனிவர் நாட்கணக்கில் கடும் தவம் புரிந்தனர் என்றெல்லாம் கேள்விப்படுகின்றோம் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் அணுகாமல் இருப்பதற்குரிய காரணிகளுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம். முத்திரை இந்து சமயத்திலும் பௌத்தமதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. முத்திரைகளைப் பற்றிய படிப்பு தத்வ யோகம் ( Tatva Yoga ) என அழைக்கப்படும்.

இனி, முத்திரை வகைகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தியானத்தில் 20 – 45 நிமிடங்கள் உங்களுக்குத் தேவையானதென நீங்கள் கருதும் முத்திரையைத் தெரிவு செய்து கொண்டு ஆழ்ந்த சுவாசத்தில் ஈடுபடுதலே போதுமானதெனக் கருதப்படுகிறது, எனினும் சிலமுத்திரைகளுக்கு மந்திரங்களைப் பயன்படுத்துவர்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

நம்பினோர் கெடுவதில்லை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | | Best Blogger Tips
நம்பினோர் கெடுவதில்லை!
****************************** 
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.

“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கிக்கொள்கிறான்.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொள்கிறான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்கவென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னடாவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.

அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

So, அடுத்த முறை மிகப் பெரிய பிரச்னை ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக்கொண்டால், சோதனை மேல் சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு!

Via FB ஆந்தை ரிப்போர்ட்டர்

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.

அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம்

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

எடை குறைதல்

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

சோர்வு

சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.கைகள் மரத்துப் போதல்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்

இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.சரும வறட்சி

புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்

நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்

கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு