பக்குவ நிலை பக்குவமற்ற நிலை...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips

 பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது !! -  KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET  2021:

எகிப்து மன்னன்
பாரூக் பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான்
மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தர்
கௌதம புத்தர்
ஆன வரலாறும் உண்டு.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

இளமைக்காலத்து ஆரவாரம்
முதுமை அடைய அடைய குறைந்து வருகிறது.

ஒவ்வொரு
துறையிலும் நிதானம் வருகிறது.

இளம்பருவத்தில்
இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தமற்றதாகத் தோன்றும்.
இலக்கியம் | Facebook
வாழ்வில் அடிபட்டு வெந்து நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது
புத்தியில் படும்.

பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

பக்குவம் வர வர
ரத்தம் வற்ற வற்ற
இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.
Bird drawing, இலகுவாக பறவை வரைவது எப்படி. - YouTube
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதைகளையும் மர்மக்கதையும் படிப்பதில் அவன் கவனம் செலுத்துவான்.

காதலித்து தோற்ற பின் தான்
அவனுக்கு பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்கு பெயர் போனது.
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு அதைவிட உலகமே கிடையாது என்று வாதாடும்.

எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டும் அல்ல அங்கு சிலையில் இருக்கும் அழகு கூடத் தெரியாது.

50 வயதில் கோயிலுக்கு போனால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டும் இல்லை பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

ஏன் உடம்பு கூட 20 வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.
40க்கு மேலே தான் இது வாய்வு இது பித்தம் என்ற புத்தி வருகிறது.

டென்ஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை
முறுக்கான நிலை என்று _அதைக் கூறலாம்.

அந்த நிலையில் எதையும் செய்யலாம்.
இப்படியும் செய்யலாம் என்கிற திமிர் வருகிறது.

அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு இதைத்தான் செய்யலாம்
இப்படித்தான் செய்யலாம்
என்ற புத்தி வருகிறது.
இல்லறத்தில் உள்ள பெண் ஞானியாக முடியுமா? அப்படிப்பட்டவர்கள் யாரையாவது  எடுத்துக்காட்டாக கூற முடியுமா? - Quora
ஞான மார்க்க பக்குவம் அப்படிப்பட்டதுதான்.

உள்ளம் உடலுக்குத் தாவி உடல் ஆன்மாவுக்கு தாவிய நிலையை பக்குவப்பட்ட நிலை.

தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை அதையே அழிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிறகு அந்த தேளிற்கு கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அது மாறிவிடுகிறது.

பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

ஆரம்பத்தில் இதுதான் சரி என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு
பின்னால் இது தவறு என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

சரியாக கணக்கிட்டால் மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

முதற்கட்டம் -
ஒன்றுமே புரியாத உணர்ச்சி கூத்து.

இரண்டாவது கட்டம் -
ஏதோ இருப்பதாக ஆனால் தெளிவாகத் தெரியாத மயங்கிய நிலை.

மூன்றாவது கட்டம் -
பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும் நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

இந்த மூன்றாவது நிலையை முதற்கட்டத்திலே எழுதியவர்கள் பலர் உண்டு.

சுவாமி விவேகானந்தரைப் போல வளைந்து கொண்டே
வளர்ந்த மரங்கள் உண்டு.

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

மற்றவர்கள் அனுபவத்தின் மூலமாகதானே பக்குவ நிலையை அடைய வேண்டி இருக்கிறது.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்
நடுவே தடுமாறும் மனிதர்கள்
நாட்டிலே மிக அதிகம்.

ஒன்று தூங்குவது என்றால்
நிம்மதியாக தூங்கி விட வேண்டும்.

விழிப்பதென்றால்
சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலன் கிட்டாது.
விழிப்பின் பலனும் கிட்டாது.
இனியது இயற்கை - முல்லை நிலம் - வத்திக்கான் செய்திகள்
மனப்பக்குவம் என்பது
அனுபவங்கள் முற்றி பழுத்த நிலை. அந்த நிலையில்
எதையுமே இல்லை என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

இல்லை என்று சொல்பவனுக்கு
எந்த புத்தியும் தேவையில்லை
எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

ஆனால் உண்டு என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்ட போதுமான அறிவு தேவைப்படும்.

பூமிக்கு கீழே என்ன இருக்கிறது
என்று கேட்டால் எதுவுமே இல்லை
என்று குழந்தை கூட
பதில் சொல்லி விட முடியும்.

"ஆனால் அடியிலே நீர் அதன் கீழே நெருப்பு என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்கு
பல நாள் வேலை.
போட்டு உடைப்பவனுக்கு
ஒரு நாள் வேலை.

நாத்திகன் எப்போதும் தெளிவாக இருக்க முடியும். காரணம் எதை கேட்டாலும் எந்திரம் போல் இல்லை என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

ஆனால் ஆத்திகனோ விபூதிக்கு ஒரு காரணம்.
குங்குமத்திற்கு ஒரு காரணம்.  சொல்லியாக வேண்டும்.

சொல்வது மட்டுமல்ல
எதிரியையும் ஒப்புக்கொள்ள
வைக்க வேண்டும்.

ஆத்திகன் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

ஜனனம் மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.
அப்படி ஆராய்ந்து இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே
விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் விஞ்ஞானமும் அறியாமல் மெய்ஞானமும் மறையாமல் அஞ்ஞானத்தை கொண்டு உழலும் நாத்திகனுக்கு எல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிர அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும்
பக்குவமற்ற நிலைக்கும்
வேறுபாடு இதுதான்.

கோயிலுக்கு போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்.
அப்படி கோயிலிலே என்ன இருக்கிறது என்று நாத்திகன் கேட்கிறான்.

அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில் அந்த தேங்காய்க்குள்
என்ன இருக்கிறது என்பது
அவனுக்குத் தெரியுமா.

அதில் வழுக்கையும் இருக்கலாம்.
காயும் இருக்கலாம்.

ஆகவே உடைத்த பின்பே காயை கண்டுகொள்ளும் மனிதன் உணர்ந்த பின்பு தெய்வத்தை காண முடியும் என்பது உறுதி.

கடவுளே இல்லை என்று வாதாடியவன் எவனும் எனக்கு மரணமே இல்லை என்று வாதாட முடியவில்லை.

மரணம் என்று உணரப்படும் போதே சிலருக்கு பக்குவம் வருகிறது.

மிகப் பெரிய நாத்திகர் கூட தமது அந்திமக்காலத்தில் யார் கொடுத்த விபூதியையும் பூசிக் கொள்கிறார்கள்.

மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று
நிச்சயமாக தெரியும் வரை
ஈஸ்வரன் ஒருவன் இருப்பது உறுதி.

✒️ ~ கவியரசு கண்ணதாசன்
📚அர்த்தமுள்ள இந்துமதம்_

 

May be an image of 3 people and the Charminar

நன்றி இணையம்

உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ??

மணக்கால் அய்யம்பேட்டை | 10:50 AM | Best Blogger Tips

 Tamil language for all - தமிழ் கற்போம் - பகிர்வு- படித்ததில் பிடித்தவை உலகுக்கே  படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ??? 🍄 காலை 11 மணிக்கு ஒரு ...

காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது.

உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு உங்கள் பயோடேட்டாவில்  வயது 40 என்று இருக்கே நிஜமா ?

ஆமாம் சார் உண்மை தான்.

அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறிர். கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல் என்றார்கள்.

பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்.

மேலும் இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்..

அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம் என்றார்.

மிக்க நன்றி சார் என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.இங்கும் வேலை இல்லை.

மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

 இறைவா என்ன சோதனை...

அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன்.

வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் .
Fake Rs 2,000 notes dumped near NICE Road create buzz
குப்பென்று வியர்த்து கொட்டியது.

பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது.

இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது.

அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் ,
உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது.
சிறுகதைகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

வெளியே சென்று திரும்பிய மனைவி என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறிங்க என கேட்டாள்.

வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா என்றேன்.

நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை.நம் செலவுக்கு இது போதும் என்றேன்.

மனைவி அமைதியாக இருந்தாள். ஏதாவது பேசு என்றேன்.

இந்த பணம் நமக்கு வேண்டாங்க என்றாள் மனைவி.

வள்ளி என்ன பேசுற நீ இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு..

உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க என்றாள்.

வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி.

இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க.
Tamil actress accuses second husband and his first wife of sex torture and  cheating - News - IndiaGlitz.com
அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் என்றாள் மனைவி.

அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த..

இறைவன் சோதிபாருங்க ஆன கைவிடமாட்டார். என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும் என்றாள்.

வள்ளி என அதிர்ந்து விட்டேன்.

அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க.

இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும் என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் தாலி கையில் கனத்தது.

பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன்.

முகவரி இருந்தது.

அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு.

மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன்.

மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது.

திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் .

அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

அப்படியே யோசித்து தம்பி கொஞ்சம் இருங்கள்.

இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா?

அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார்.

அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரெய்னிங் எடுங்கள்.

வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு என்றார்.

நமச்சிவாயா !!!  

என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது.

"மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஓய்ப் பெறுவ தெவன்.
          (குறள்)

அறநெறியில் இல்வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ ???

🙏🙏நமசிவாய போற்றி.🙏🙏

படித்ததில் பிடித்தது.
அடடா அடடா செம 💐
Pl share and that will be your contribution for.....
https://www.youtube.com/live/qDXvRIgsoDk?si=ryqysevuZvkQ_ph_
https://www.instagram.com/reel/C7g1mAFM3Ft/?igsh=dGN6MnM1MG1yZmI0
Sudakku Thakkali LEAVES .
நாடாளுமன்றத்தில் RSS கொள்கை படி அசைவ உணவு மறுக்கப்படுகிறது என உருட்டும் திகார் வாசி ராசா இவருக்கு திமுக கட்சிக்கு சொந்தமான அய்யர் மாடல் அறிவாலயத்தில் (சென்னை மற்றும் திருச்சி) செயல்படும் கல்யாண மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அசைவ உணவிற்கு அனுமதியே இன்றுவரை கிடையாது என்பதும் இவருக்கு நன்றாக தெரியும்.
ஆனா அதைப்பற்றி வாயே திறக்கமாட்டார். ஏனெனில் இவர் கொத்தடிமை ஆயிற்றே.!!
🤓🤣 

 May be an image of 1 person

நன்றி இணையம்