
அநேகமாக பாகிஸ்தானிய வரலாற்றில் அடித்த மிகப்பெரிய அந்தர் பல்டி இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய 80 ஆண்டுக்கால வரலாற்று பகைமை பாராட்டிய பகுதி பின்னர் ஓர் அவர்களுக்கு என ஒரு தேசமாக பிரிந்து சென்றவர்கள், பிரிந்து சென்றதோடு இல்லாமல் வஞ்சனையில்லாமல் துவேஷம் பாராட்டி நின்றவர்கள் இன்று இறங்கி வந்து கதறும் நிலையில் இருக்கின்றார்கள்.




உலகம் கொரானா காலத்தில் தடுமாறி தத்தளித்து கொண்டு இருக்கும் வேளையிலும் இந்தியா மாத்திரமே ஜாக்கிரதையாக முனைப்புடன் செயல்பட்டு,. பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.








#FATF அலறிக் கொண்டு இருக்கிறது, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க அனைத்து தகுதிகளையும் அது ஏற்கனவே பெற்றுவிட்டது என்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் பெரிதும் நம்பிய சீனா கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானை கைக்கழுவி வருகிறது. போதாக்குறைக்கு அவர்கள் கொடுத்த தடுப்பூசி மருந்துகளை போட்டு கொண்டு இம்ரான்கானுக்கே நோய் தொற்று உறுதி செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்க பட்டு வருகிறார் என்கிற செய்தியே பாகிஸ்தானிய மக்களின் மன மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

அவர்கள் ஏற்கனவே தற்போதைய இந்திய ஆளுமை மீது அச்சம் கொண்டு இருந்ததற்கான இரண்டு காரணங்களில் ஒன்று அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தானிய ராணுவம் பணிந்தது, மற்றோன்று புல்வாமா தாக்குதல் போது சொல்லாமல் கொள்ளாமல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி ஜெய்ஷிமுகமது கும்பலை அடியோடு அழிந்தது. இவை இரண்டிற்குமே பாகிஸ்தானால் எதிர் வினையாற்ற முடியவில்லை என்பது அவர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் தான் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களை ஓட ஓட அடித்து விரட்டியது இந்திய ராணுவம்.
இந்த நிமிஷம் வரை அவர்களாளுமே இதற்கு எதிர் வினையாற்ற முடியாமல் பத்து மாத முற்றுகையை எவ்வித நிபந்தனையும் இன்றி விலக்கிக் கொண்டார் என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தவர்களுக்கு இன்றைய தேதியில் தங்களுக்கு இந்திய அரசை விட்டால் வேறு கதியில்லை என்பதை வாய் விட்டு பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.


ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள் பலவற்றில் கடன் வாங்கி விட்ட நிலையில் அவர்கள் தங்களின் பணத்தேவைக்கு பெரிதும் நம்பிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தற்போது கை விரித்து விட்டதை நன்கு உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சீனா தனது CPEC திட்டத்தையே நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவி ஏற்றவர் கடந்த காலத்தில் நம் பாகிஸ்தானிய உச்ச விருதான இளம் பிறை பெற்றவர் என்பதால் உதவுவார் என்று நம்பினார்கள். ஆனால் கடந்த கால பைடன் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கடன் சுமை அழுத்தும் நிலையில் இந்தியாவால் மட்டுமே இந்த பிரச்சினையில் இருந்து தங்கள் காப்பற்ற முடியும் என்று கதறவே ஆரம்பித்து இருக்கிறார்கள் பாகிஸ்தானிய பிரஜைகள்.
பார்க்கலாம் இந்திய அரசு தலைமை எவ்வாறு இதனை அணுக போகிறது என்று. இவை குறித்தெல்லாம் ஏதும் தெரியாத இங்கு உள்ள கூபைகள் சிலர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிக்க கூடாது, பாரதமாதாகீ ஜெய் என கோஷம் போடக் கூடாது என்று அலப்பறை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கொடி காத்த குமரன் குறித்து பாட புத்தகத்தில் படித்தது மறந்து போய் இருக்கக்கூடும், அன்று தேசிய கொடிக்காக உயிர் கொடுக்க துணிந்தவர்கள் இன்று தேசியத்திற்காக ஒன்று கூடவும் தயங்க மாட்டார்கள் என்பது புரியவில்லை. இனம், மதம், சமயம் என்பதை தாண்டி #தேசியம் என்று ஒன்றுபட்டால், பிரிவினை பேசும் சிலர் இருக்கவும் இடம் இல்லாத நிலை வரும் என்பது மறந்து விடாதீர்கள்.