மணக்கால் அய்யம்பேட்டை | 11:32 AM | Best Blogger Tips


இன்று சிவபெருமான் நம் அப்பன் ஒப்பில்லா தலைவனை வணங்க 108 சிவன் போற்றி 12/7/2024 வெள்ளிக்கிழமை பதிவு செய்து சிவபெருமான் திருவடிகள் வணங்குகின்றோம்
 2016- Happy Shravan Mas Om Namah Shivaya For Your HD wallpaper | Pxfuel
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏 
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏 
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏சிவாயநம 
 
திருச்சிற்றம்பலம்ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏🙏🕉️ 
 
நல்லதே நடக்கும் !
 
சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருச்சிற்றம்பலம்
 Om Namah Shivaya
108 சிவன் போற்றி
 
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏகாந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவனே போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கடையே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தமே போற்றி
ஓம் சீரா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொணா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயே போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவ தேவா போற்றி
ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நன்மறையா போற்றி
ஓம் நிறைவா போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி

ஓம் நமசிவாய.....நற்பவி....நன்றிகள் பல.....🙏🙏🙏💐💐💐

நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:16 AM | Best Blogger Tips

 May be an image of temple and text

நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?...
தெய்வத்தின் சாபத்திற்கு நம் குடும்பம் ஆளாகி விடுவோமா?...
 
கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும்.
 
இதனை நேர்த்திகடன் பாக்கி இருக்கு என்றும் சிலர் சொல்வார்கள். கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டு, அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றா விட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடுமா? இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் இருப்பதம் மூலம் அடுத்தடுத்து நம்முடைய குடும்பத்திற்கு வரக்கூடிய பாதிப்புகளுக்கு, அந்த தெய்வத்தின் சாபமும், கோபம் தான் காரணமா?...
 
இந்த சந்தேகம் உங்களுடைய மனதில் இருந்தால் இதை தெளிவு படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவுதான் இது...
 
ஒரு விஷயத்தை மட்டும் நாம் நன்றாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ‘எந்த தெய்வமும், நம்மிடம் வந்து கஷ்டம் வரும்போது என்னை வழிபாடு செய்ய என்று சொல்லுவது கிடையாது.
 
எந்த தெய்வமும், எனக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கேட்பதும் கிடையாது. எந்த தெய்வமும் நம்மிடத்தில் இருந்து எதையும் எதிர் பார்ப்பதும் கிடையாது’. நம்மிடம் இருக்கும் எல்லாமும் அந்த இறைவன் உடையதுதான். அந்த இறைவன் நமக்கு கொடுத்தது தான். அப்படி இருக்கும்போது எந்த தெய்வமும் நீங்கள் செய்துகொண்ட வேண்டுதலை நிறைவேற்றாத பட்சத்தில் கோபப்படவும் போவது கிடையாது.
 
‘நீ எனக்கு பூஜை புனஸ்காரங்களை செய்தால் தான், பதிலுக்கு பிரதிபலனாக நான் உனக்கு வரங்களை தருவேன் என்று!’ என்றுமே கடவுளாக பட்டவன் சொல்லவில்லை. நாமே நம்முடைய மன திருப்திக்காக இறைவனுக்கு இதை செய்கின்றேன், அதை செய்கின்றேன் என்று வேண்டிக் கொள்கின்றோம் அவ்வளவுதான். 
 
வேண்டுதலை நிறைவேற்றாததன் மூலம் எந்த தெய்வமும் மனிதப் பிறவிக்கு சாதம் கொடுப்பது இல்லை. அந்த அளவிற்கு இறைவன் ஒன்றும் பழிவாங்கும் குணம் கொண்டவன் அல்ல.
 
ஆனால், இதற்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் எந்த பாதிப்பும் நமக்கு வரவே வராது என்று ஆணித்தனமாக அடித்துச் சொல்லிவிட முடியாது.
 
என்னங்க? குழப்பமாக உள்ளதா?... 
 
‘நேர்த்திக்கடனை நிறைவேற்றா விட்டால், தெய்வ குத்தம் வருமா? வராதா?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது நன்றாக புரிகின்றது.
நேர்த்தி கடனை நாம் இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் அந்த இறைவனின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் மனித தர்ம சாஸ்திரத்தில் நேர்மை, நாணயம், வாக்கு தவறாமை, என்ற ஒன்றும் கட்டாயம் இருக்கின்றது. மனிதராகப் பிறந்தவர்கள் சொன்ன வாக்கில் சரியாக இருக்க வேண்டும்.
 
அது கடவுளுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, நாணயத்தில் நாம் தவறும் போது நமக்கான தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும். ஆகவே, 
 
நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை தான் நம்முடைய வாயால் சொல்ல வேண்டும். சொல்லி விட்டால் அதை செயல்படுத்தி விட வேண்டும். வாக்குத் தவறக்கூடாது. சொன்ன சொல்லை மாற்றக்கூடாது. இதுதான் நேர்மைக்கான அடையாளம். நல்ல மனிதருக்கான அடையாளம்.
 
ஆகவே நான் நேத்திக்கடன் செய்யாவிட்டால் இறைவன் நமக்கு தண்டனை கொடுக்கப் போவதில்லை. நாம் வாக்கு தவறியதற்கு, நாம் நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதற்கு, தர்ம சாஸ்திரத்தின் படி நமக்கு தண்டனை கொடுக்கப்படும். இதுதான் உண்மை.
 
இதை தான் நாம் இறைவன் நம்மை தண்டித்து விட்டதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றோம்.
இப்போதாவது எல்லோருக்கும் புரிந்ததா?
 
இறைவன் என்பவன் நேர்மையில், உண்மையில், நம்பிக்கையில், வாக்குத் தவறாமையில் தர்மத்தின் அடிப்படையில் தான் இந்த பூமியில் இருக்கிறார்..✍🏼