மூன்று வகை தவங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips

தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவைதவம்என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில்விரதம்அல்லதுநோன்புஎனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர்தபஸி” (ஆண்) அல்லதுதபஸ்வினி (பெண்) என்றழைக்கப்படுவர்.
பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான்தவம்என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள்தவிர்க்கப்படவேண்டியவைஎன அறிவுரை செய்யப்படுகின்றது.
பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.
1) தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
2)
ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
3)
அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)
இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:
|| உடல்
1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2)
பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3)
உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4)
எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5)
தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6)
மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
|| வாக்கு
1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2)
கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப் பேச வேண்டும்.
3)
மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4)
நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5)
வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
|| மனம்
1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2)
மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3)
தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4)
எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

 நன்றி இணையம்

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips

* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.
* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
* அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
* ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
* பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
* வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
* கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
* சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்

 நன்றி இணையம்

விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன்?....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:28 PM | Best Blogger Tips




விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்....
ஏதேனும் ஒரு படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும்....
எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர்.....
இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7, ------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர்.....
இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும்.....
கடைசி எண்ணான பூஜ்யத்தைக் 
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் 
பொருள்படும்.......
இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும்.....
ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.....
பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை.....
மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற 
இயலும்....
எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்...
எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது....

 நன்றி இணையம்

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:27 PM | Best Blogger Tips



https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...