எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips

 

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்தவரிசையில்நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

 

நன்றி இணையம்

எவரையும் குறைவாகவும்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips

 


*ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,*

*" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,*

*அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!*

*"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....?* என்றார்.

*படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,*

*"என்ன மாதிரி கேள்விகள்".....?*

*என்று சிறுமி கேட்டாள்.....!!*

*"கடவுள் பற்றியது".....!!*

ஆனால்...,

கடவுள்,

நரகம்,

சொர்க்கம்,

புண்ணியம்,

பாவம் என

*எதுவும் கிடையாது....!!*

*"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!!*

*"இறந்த பிறகு என்ன"......?*

*தெரியுமா என்றார்....!!*

*அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,*

*"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......?* என்றாள்.

எஸ்..!

*"தாராளமாக கேட்கலாம்"..* என்றார்....!!

*ஒரே மாதிரி புல்லை தான்.....,*



பசு,

மான்,

குதிரை

*உணவாக *எடுத்துக் *கொள்கிறது.....!!*

ஆனால்,

*வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!*

*"பசுவிற்கு சாணியாகவும்",,,,,*

*"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,*

*"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!*

*'ஏன் அப்படி'....?*

என்று கேட்டாள்.

*'தத்துவவாதி'.*

*" இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!*

*திகைத்துவிட்டார்'......!!!*

*"தெரியவில்லையே".....,*

என்று கூறினார்....!!

*கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,*

*"உணவு கழிவு பற்றிய ஞானமே"..... நம்மிடம் இல்லாத போது*

பின் ஏன் நீங்கள்

கடவுள்,

சொர்க்கம்,

நரகம் பற்றியும்,

*"இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".....?*

*"சிறுமியின் புத்திசாலித்தனமான இந்த கேள்வியால்."......,*

*"தத்துவமேதைக்கு தலை தொங்கிப்போய்".....,*

*"வாயடைத்து போய்விட்டார்"......!!*

நம்மில் பலரும் இது போலத் தான்.....

தனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரத்தோடு.....

மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்.....!!

நிறைகுடம் ததும்பாது....!!

குறைவிடம் கூத்தாடும் என.....

முன்னோர்கள் சொல்லியது இதையே......!!

எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.....!!

தலைக்கனமும் கூடாது.....!!

கற்றது கைமண் அளவு",.....!!

கல்லாத்து உலகளவு......!!

 

நன்றி இணையம்