எலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:06 PM | Best Blogger Tips
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்தகைய அழகுப் பொருளான எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தி, எவற்றையெல்லாம் சரிசெய்யலாம் என்று பார்ப்போமா!!!
quick beauty fixes with lemon
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால், சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
* சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க ஒரு கப் பாலுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பிராந்தி சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதனை ஓரளவு குளிர வைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்து, துடைத்துவிட வேண்டும்.
* முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
* எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
* தலையில் பொடுகு இருந்தால், தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும்.
* நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் பல விதங்களில் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கும் போது, வெயிலில் அதிக நேரம் இருக்கக் கூடாது. ஏனெனில் வெயில் சருமத்தில் பட்டால், எலுமிச்சை சருமத்தை மிகவும் சென்சிட்டிவ்வாக்கி, பின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஜிகர்தண்டா செய்முறை.....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips
ஜிகர்தண்டா செய்முறை.....

ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்
வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,

வாங்க.... எபப்டி செய்வதுன்னு பார்ப்போம்...

தேவையானவை....

பால் - 1 டம்ளர்

ஜவ்வரி - 2 மேசை கரண்டி

பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி

ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி

ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி

சர்க்கரை - தேவைக்கு

பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்க

செய்முறை....

பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.
ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து குடிக்கவும்.

சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்....
<<<<தினம் ஒரு சுவை>>>>

Like · ·

தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:51 PM | Best Blogger Tips

தலையில் உள்ள பொடுகை நீக்க சில ஈஸியான டிப்ஸ்...

தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு, இந்த பொடுகை போக்குவதற்கான செயல்களில் விரைவில் ஈ
டுபட வேண்டும். அதிலும் அந்த பொடுகை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, நீக்கிவிட முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தலையில் இருக்கும் பொடுகை இயற்கை முறையில் நீக்குங்கள்.

* தயிர் மற்றும் மிளகு: 2 டீஸ்பூன் மிளகுத்தூளை 1 கப் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலவ வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு நீங்கிவிடும்.

* ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.

* வினிகர்: வினிகரில் பொட்டாசியம் மற்றும் நொதிகள் அதிகம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை சரிசெய்யும். அத்தகைய சிறப்புடைய வினிகரை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

- ஆப்பிள் சீடர் வினிகரை தலையில் தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்து, குளித்து வந்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொடுகு போவதோடு, பொடுகினால் ஏற்படும் கூந்தல் உதிர்தலும் நின்றுவிடும்.
- இல்லையெனில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை, தலைக்கு குளிக்கும் போது, கடையில் ஒரு கப் தண்ணீருடன் கலந்து தலைக்கு ஊற்ற வேண்டும்.

* எலுமிச்சை மற்றும் பூண்டு: இநத கலவை சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஏற்கனவே எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில்செதிலாக வருவதை தடுக்கும். மேலம் பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும். ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

* வெங்காயம்: வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும். மேலும் வெங்காய நாற்றத்தை நீக்குவதற்கு வேண்டுமென்றால் எலுமிச்சையின் சாற்றை இறுதியில் தடவி குளித்தால், அந்த நாற்றத்தை தடுக்கலாம்.

தக்காளியை சாப்பிட்டு தக்காளி மாதிரி வரலாமே…..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
தக்காளியை சாப்பிட்டு தக்காளி மாதிரி வரலாமே…..

காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.

இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறதுவைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும்.

சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

வசம்பின் மருத்துவக் குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:45 PM | Best Blogger Tips
வசம்பின் மருத்துவக் குணங்கள்

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது…!

மருதாணி பூசுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips

கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்கின்றன.

மேலும் விவரங்கள்

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதா‌ணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.

கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.

‌சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

மேகநோய்

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

தோல் நோய்

மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்

ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம்

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.

கரப்பான் புரகண்

பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.

கால் ஆணி

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.

படைகள்

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

Via Relax Please

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips

<<<<நலமுடன் வாழ>>>>

இன்று ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பற்றிய தகவல்.

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது.. 

இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது. 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.

via Page இன்று ஒரு தகவல்.

முதுமை இனிமையான பருவமா..??

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
முதுமை இனிமையான பருவமா..??

முதுமை இனிமையான பருவமா?. பதில் பலவிதமாக வரலாம். அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை உண்மையில் இனிமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கின்றன சில. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த யதார்த்தம் புரிந்தாலே முதுமை இனிமையா

கிவிடும்.

***

முதுமையை தடுக்க முடியாது. தள்ளிப்போடலாம். வாட்டும் முதுமையை வாழ்வின் யதார்த்தமாக உணர்ந்து மனஉறுதியுடன் செயல்பட்டால் முதுமையிலும் இளமையாக இனிமையாக, வாழலாம். ஆம், அதற்கு முதுமை என்பது உடலின் வளர்ச்சியாக மட்டுமல்லாமல், அறிவின் வளர்ச்சி, அனுபவ வளர்ச்சியாக இருக்க வேண்டும். முதுமைக்கு உயிரணுக்கள், உடல்வளர்ச்சி ஹார்மோன்கள் உற்பத்தி குறைதல், பாரம்பரியம் போன்றவை முக்கிய காரணங்களாகும்.

***

முதுமை கொண்டு வரும் பிரச்சினைகள் ஏராளம். பார்வைக்குறைவு, காதுகேளாமை, தோல்வறட்சி, கை நடுக்கம், முடிநரைத்தல், ஞாபகமறதி மற்றும் மலச்சிக்கல் போன்றவை இயல்பாக ஏற்படும் பிரச்சினைகள். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், மூட்டுவலி, புற்றுநோய் என பல தீவிர நோய்களும் வரலாம். வலுவுள்ள உடலும், உறுதிமிக்க இளமையும் கூட இத்தனை வியாதிகளை தாங்கிக் கொள்ளாது. ஆனால் முதுமையில் இவற்றில் பல வியாதிகள் இயல்பாக தொற்றிவிடும்.

***

முதுமையின் கொடுமையை தடுக்க இளமையில் உறுதியான திட்டமிடல் அவசியம். இளமையில் உடலை எப்படி பாதுகாக்கிறோமோ, அதற்கேற்ப முதுமையில் உடல் தொந்தரவின்றி வாழலாம். எனவே தினமும் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். எப்போதும் வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இது பின்னாளில் நீரிழிவு, மாரடைப்பு வராமல் காக்கும். இளமை முதலே கீரை, பால், பழங்கள், ராகி, கோதுமை, கேழ்வரகு அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்.

***

50 வயது முதுமையின் தொடக்கம். அப்போது நோய் இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை அவசியம். முதுமையின் விரோதி தனிமை. தனிமையை தவிர்க்கப் பழகுங்கள். முடங்கினால் முதுமை 6 மடங்கு அதிகமாகிறது என்கிறது ஆய்வு. புத்தகம் படிப்பது, வானொலி கேட்பது என பிடித்தமான பொழுதுபோக்கு ஒன்றை கடைப்பிடியுங்கள். கூட்டங்களுக்கு சென்று வரலாம். நண்பர்களோடு மகிழ்ந்திருங்கள்.

***

முதுமையில் உடல் தளர்வால் கால் இடறி விழ வாய்ப்பு இருப்பதால் கைத்தடி உபயோகிப்பது நல்லது. காது கேட்பது குறைவதால் ஒதுங்கி செல்லாதீர்கள். காதுகேட்கும் கருவியை பயன்படுத்துங்கள். பற்களை இழந்தால் பேச்சும், முகப்பொலிவும் போய்விடும். இதற்கு செயற்கை பல்செட் அணியலாம். கண்பார்வை குறைந்தவர்கள் கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டும். கண்புரை இருப்பவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். வேறு கோளாறுகள் தென்பட்டாலும் உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

***

வயதான பிறகு மனது பந்தபாசங்களை எதிர்பார்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்காமல் இருப்பது முதுமையை இனிமையாக்கும். இளைய தலைமுறையினரின் லட்சியங்கள், கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள். தியானம் செய்து மனதை ஒருநிலையில் வைத்திருங்கள். வாரம் ஒருமுறை உண்ணாவிரதம் இருப்பது உடலை சமநிலை செய்ய உதவும். தனிமையை தவிர்க்க மற்றவர்களுக்குத் தொண்டு செய்யலாம். இதனால் உங்கள் மனபாரமும் குறையும்.

***

சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும் முதுமைக்காலத்தில் அவசியம். உறவுகளிடம் தற்பெருமை பேசுவதும், உறவுகளை துண்டிப்பதும் வேண்டாம். முதுமையில் உங்களுக்கான வசிப்பிடத்தை முடிவு செய்து வைத்திருப்பது நல்லது. அது எதிர்பாராத ஏமாற்றங்களை தவிர்க்க உதவும். கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்பட்டவுடன் உங்கள் சொத்துக்களை உயில் எழுதி வைத்து விடலாம். இது வாரிசுகளுக்குள் வீண் பிரச்சினைகளை தடுக்கும். மரணம் நிச்சயமானது. மரணபயத்தை விட்டுவிட்டு வாழப்பழகினால் முதுமை இன்னும் ஆனந்தமாகும்.

***

முதுமைக் காலத்தில் பணம் மிகவும் அவசியம். அன்பு, பாசம் எல்லாம் இங்கே இரண்டாம்பட்சம் தான். நடுத்தர வயதிலிருந்தே முதுமையை எதிர்கொள்ள பொருளாதார ரீதியில் ஒரு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணங்களும், செயல்பாடுகளும் ஒரே சீராகவும், ஆணித்தரமாகவும் இருந்து செயல்பட்டால், முதுமைக் காலத்தில் ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் இளமையில் நல்ல உடற்பயிற்சி, சீரான உணவு, முதுமையில் இனிய பொழுது போக்கு, போதியஅளவு பணம் இவற்றுடன் மனஉறுதியும் இருந்தால் முதுமை வசந்தமாகும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 PM | Best Blogger Tips

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!

சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு நாம் உண்

ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.

இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது.

தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.

மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.

மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.

உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips
மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
-மன்னை வை.ரகுநாதன் -

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்ஸ்'...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips
வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்ஸ்'...

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்
டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

வாய் துர்நாற்றத்தை போக்கும் பொருட்கள்
ஏலக்காய்

உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

* கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

* கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

* புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

* கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

* மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.