மனைவி ..... ஓரு அற்புதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips

 
பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...

மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..

இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு...

இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..

சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்...

அவள் கர்ப்பம் சுமைக்கையில்

நீ அவளைச் சுமந்திடு...

விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..

உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே...

தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்...

தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்...

வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..

சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்....

எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..

நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு...

நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு....

உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..

வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..

வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..

அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை...அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை...

அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..

தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு...

சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு.....

நன்றி இணையம்

 


பெண் பிறந்துவிட்டாள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 PM | Best Blogger Tipsகல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஓரு ஓப்பந்தம்...

இன்று யார் வந்தாலும் கதவைத் திறக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்...

அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதைப் பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்துக் கொண்டனர்.. கணவனுக்கு கதவைத் திறக்க வேண்டும் என்ற ஆசை... ஆனால் ,அக்ரிமெண்ட் போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவைத் திறக்கவில்லை அவன்.. அவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துப் போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா அப்பா வந்தனர் கதவைத் தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவைத் திறக்காமல் இருக்க முடியாது என்று சொல்லிக் கதவைத் திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை.. வருஷங்கள் உருண்டோடின...

அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைப் பிறந்தது.. மூன்றாவதாகப் பெண் குழந்தைப் பிறந்தது கணவன் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்துக் கொண்டாடினான்.. அதற்கு மனைவி நமக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தப் போது நீங்கள் இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லையே ஏன் பெண் குழந்தைப் பிறந்தவுடன் இவ்வளவு பெரியப் பார்ட்டி கொடுக்கிறீங்க என்றுக் கேட்டாள்...

அதற்குக் கணவன் ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவைத் திறக்க ஓரு பெண் பிறந்துவிட்டாள்...

என்றான் கர்வத்துடன்...

நான் படித்ததில் பிடித்தது

 


மாவீரன் நெப்போலியன்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tipsஆயுதங்களை எல்லாம் அகற்றிவிட்டு,நிராயுதபாணியாக தன் குதிரையிலிருந்து இறங்கி,அமைதியாக அந்தப் படைகளை நோக்கி நடந்து வருகிறார் அவர்.

 

முதல் வரிசை வீரனின் துப்பாக்கி முன் வந்து நின்று,

 

"இதோ உங்கள் முன் உங்கள் அரசனாகிய நான் நிற்கிறேன்...சுடுங்கள்...தாராளமாகச் சுடுங்கள்" என்று அந்த படை வீரனின் கண்ணுக்கு கண் நோக்கி உரத்த குரலில் கூறுகிறார்.

 


அடுத்த நொடி,மொத்தப் படையும் ஆயுதங்களை கீழேப் போட்டுவிட்டு,பேரரசர் வாழ்க என்ற விண்ணைப் பிளக்கும் முழக்கமிட்டபடி,அவருடன் மீண்டும் சேர்ந்து கொள்கிறது.

 

தன்னை உயிருடனோ,பிணமாகவோ கொண்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கி மீண்டும் தன் நாட்டின்  தலைநகருக்குள் நுழைகிறார் அவர்.

 

மன்னர் வாழ்க என்ற கோஷத்தில் தலைநகரம் அதிர்கிறது.

 

"அவர் ஒருவர் போதும்.நாற்பதாயிரம் படைவீரர்களுக்குச் சமம் அவர்."--இது அவருடனான இறுதிப் போரில்-அவரை வென்ற தளபதி வெலிங்கடன் தன் கைப்பட எழுதி வைத்த கூற்று.

 

"அவரைக் கைது செய்து 2000 கி.மீ தொலைவில்,ஒரு தனித்தீவில் அடைத்த பின்பும்,எங்கே தப்பி வந்து,மீண்டும் படை திரட்டி விடுவாரோ" என்ற பதட்டம் அவருடைய எதிரிகளுக்கும்,எப்படியும் நம் மன்னர் தப்பிவிடுவார்,தப்பிவந்து மீண்டும் நம் நாட்டை ஆள்வார் என்ற நம்பிக்கை அவருடைய சொந்த நாட்டு மக்களுக்கும் அவரது மரணம் வரை இருந்தது.

 

"அவருடன் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தாதீர்கள்.ஐந்தே ஐந்து நிமிடம் அவர் பேசினாலே போதும்.ஆயதங்களே தேவையில்லை,எப்பேற்பட்ட நெஞ்சுரம் கொண்ட தலைவரையும் வீழ்த்தி விடுவார்" என்று அவரை எதிர்த்துப் போரிட்ட மற்றொரு நாட்டு தளபதி தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி தன் நட்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி உண்டு.

 

இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து,அன்றைய இந்தியாவின் கிழக்கு வாயிலான பர்மா வரையிலும் வந்து-இனி அடுத்து டெல்லி தான் என்ற நிலையில் மர்மமாக முடிந்து போன நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையைப் போன்றது தான் "அவருடைய" வாழ்க்கையும்.

 

யார் அந்த அவர்?

 

அவர் தான்,ஐரோப்பாவின் எங்கோ ஒரு மூலையில்,ஒரு சிறு தீவில்,சாதாரண குடும்பத்தில் பிறந்து,அடிப்படை சிப்பாயாக பிரான்ஸ் இராணுவத்தில் சேர்ந்து-தன் சுய திறமையால் முன்னேறி,இறுதியில் அந்நாடிற்கே பேரரசனாக மாறி-ஒட்டு மொத்த உலகையே கிடுகிடுக்க வைத்த ஆட்சியாளர்-இராணுவத் தளபதி,

 

"நெப்போலியன் போனப்பார்ட்"

 

பிரான்ஸின் நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்ல,சூரியன் எங்கள் நாட்டில் மறைவதேயில்லை என்று இறுமாப்புடன் திரிந்த இங்கிலாந்துப் பேரரசின் இடுப்பில் ஓங்கிக் குத்திய மாவீரன்.

 

தன் இறுதி யுத்தமான வாட்டர்லூ போரில் மட்டும் நெப்போலியன் வென்றிருந்தால்,இன்று ஐரோப்பாவின் தலைமையகமாக பிரான்ஸ் இருந்திருக்கும்.இந்தியாவில் இருந்து நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னமே இங்கிலாந்து வெளியேற்றப்பட்டு,இந்தியா பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகயிருக்கும்.இங்கிலீஷ் என்ற மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்காது.இங்கிலாந்து என்ற நாடும் இருந்திருக்காது.ஒருவேளை ஐரோப்பா என்ற ஒரு கூட்டமைப்பே கூட உருவாகாது கூட போயிருக்கும்.

 

இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.......

 

அத்தனையையும் நடக்க விடாமல்,உலக வரலாற்றை வேறு பாதைக்குத் திருப்பிய,

 

மாவீரன் நெப்போலியன் போனபார்ட் மறைந்த தினம் நன்றி இணையம்


மத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் “#சமயவகுப்பு"

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips

 


மத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் #சமயவகுப்பு"

சமயவகுப்பு பலபேருக்கு தெரிந்திருக்காது, ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம்.

சுவாமி விவேகாநந்தர் கனவை நனவாக்கும் வகையில் எஃகுப் போன்ற உடலும், உருக்குப் போன்ற நரம்புகளும் உடைய தியாகிகளான தொண்டர்களாலே வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் சமயவகுப்புகள் மக்களுக்கு அவர்களது பண்பாடு, மதம், நாடு இவற்றின் வரலாற்றையும், பெருமையையும் புரியவைக்கிறோம். -ஹிந்து தர்ம வித்யாபீடம்)

1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் 'ஹிந்து தர்ம வித்யாபீடம்' நிறுவப்பட்டது. இப்போது அதனை நிர்வகித்து வருபவர் சுவாமி சைதன்யாநந்தஜி மகராஜ். தொடக்க நிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என்கின்ற 5 நிலைகளில் ஆன்மிகம் கற்பிக்க படுகிறது. அணைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு #வித்யாஜோதி பட்டம் வழங்க படுகிறது .

சுதந்திரத்திற்கு பிறகும், அதற்க்கு முன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற பட்டார்கள். மாற்றத்திற்கான காரணம் வறுமை, இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி பல கிறிஸ்துவ மதம் மாற்று நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பணத்தை வாரி இறைத்தனர். நாம் இன்று காணும் கிறிஸ்துவர்கள் அனைவரும் நேற்று கூழுக்கும் சுண்டலுக்குமாய் மதம் மாறி போன நம் முன்னோரின் பிள்ளைகள். இறந்து போன அம்முன்னோர்கள் தான் தெய்வங்கள் என்கின்ற புனிதத்தை கிறிஸ்துவம் விழுங்கி விட்டது . இதானால் பாதிக்க பட்ட மாவட்டங்களில் முதலிடம் கன்னியாகுமரி மாவட்டம் .

இன்னும் மாவட்டத்தில் 37 % பேருக்கு மேல் கிறிஸ்துவர்கள் தான் . அரசியல் ரீதியாக MLA ,

MP க்களை கூட இன்னும் குமரியில் கிறிஸ்துவர்களே தீர்மானிக்கிறார்கள். பல மதமாற்றங்களை, மத வன்முறைகளை, பல கலாசார, பண்பாட்டு சீரழிவுகளை சந்தித்து வந்த குமரி இன்று சமய வகுப்பின் மூலமாக கம்பீரமாய் எழுந்து நிற்கிறது .

இளம்வயதிலேயே ஆன்மீக நட்டம் கொண்டு ஞாயிற்று கிழமைகளில் கம்பீரமாக சமயவகுப்பிற்கு நடக்கும் மாணவர்களை பார்க்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. கிறிஸ்துவத்தை பார்த்து அவர்களின் ஆடை அலங்காரத்தை பார்த்து வியந்து நின்ற மக்கள், இன்று சமயவகுப்பின் மூலம் நம் இந்து தர்மத்தின் புனிதத்தை உணர்ந்து மத மாற்றத்தினை காறி உமிழ்கிறார்கள் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் 800-க்கும் மேல் சமயவகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 80-க்கும் மேல் வகுப்புகளும், கேரளாவில் 70-க்கும் மேல் வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன. நம்பினால் நம்புங்கள் கடந்த ஆண்டு மட்டும் 17000 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் . ராமாயணமும், மகாபாரதமும், நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும், நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது. இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .

இப்போது விழிப்புணர்வு வந்து மதமாற்றம் தடுக்கபடுகிறது, நம்மை கிண்டல் செய்யும் மாற்று மதத்தவர்களுக்கும், போலி முற்போக்கு, பகுத்தறிவு வாதிகளுக்கும் நம் மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கிறார்கள். ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன. மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிராமணன் என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்னும் அடிப்படை இந்துத்துவம் கற்பிக்கபடுகிறது. எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த சீர்மிகு ஆன்மீக பணியை சிறப்புடன் செய்யும் சமயவகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் .

கன்னியாகுமரி மாவட்டத்தை போல் மற்ற மாவட்டங்களிலும் சமயவகுப்புக்கள் விரிவு படுத்த வேண்டும். சொல்லுங்கள் நண்பர்களே, உரக்க சொல்லுங்கள் நம்மை ஏளனமாய் நினைத்தவர்கள் காதுகளில் சமயவகுப்பு எங்கள் அடிப்படை உரிமை. அனுப்புங்கள் தோழர்களே உங்கள் வீட்டு குழந்தைகளையும் சமய வகுப்பிற்கு. இனிமேல் ஆயிரம் முறை ஆங்கிலேயன் படை எடுத்தாலும், நம் விரல் நுனியை கூட அசைத்து பார்க்க முடியாது. நம் தர்மத்தை கொஞ்சமும் சிதைத்து பார்க்க முடியாது. வாருங்கள் நண்பர்களே முட்டி மோதியே திறவா கதவை மூளை பலத்தால் சிதறடிப்போம். கேள்விகள் கேட்க ஆளில்லை என்ற கிறுக்கர்கள் மதமாற்றத்தை வென்றெடுப்போம். அன்பே ஆழ வந்தால் அழிவுக்கெல்லாம் முடிவு வரும்

என் எழுத்துக்களுக்கு, என் சிந்தனைகளுக்கு,கொஞ்சமாய் என் தேசப்பற்றுக்கும், என் சமூக அக்கறைக்கும் ஓட்டு மொத்த காரணமும் #சமயவகுப்பு தான். இந்து சமய அறநிலையத் துறை பணிகள் தேர்வுக்கு சமய வகுப்பு பயன் தரும் எனவே நமது ஊரிலும் சமய வகுப்பு இல்லாத ஊரிலும் சமய வகுப்பு நடத்த முயற்சி ஏற்படுத்த வேண்டும்.

*இந்து தர்மத்தை நிலை நாட்டுவோம்*

தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 04651-239211

#இந்து_சமயவகுப்பு

நன்றி   தேசிய தமிழன் அண்ணாமலை