*பித்தப்பை கல்*(இது தான் மருந்து)( Gall Bladder Stone )
இதற்கு மருந்து வெகு சாக்கிரதையாய்க் கொடுக்க வேண்டும். மலம் பிரதி தினமும், நன்றாக வெளிப்படுத்தப்பட வேண்டும். இக்கல் உண்டாவதற்கு மலச்சிக்கல் ஒரு முக்கியமான காரணம். பெண்மணி ஒருவருக்கு இந்தக் கல்லடைப்பு வந்து கடுமையான வயிற்றுவலி, காமாலை, கடுமையான சுரம், அசீரணம் முதலியன வந்தன.
இதற்கு ஆபரேஷன் செய்வதைத் தவிர, வேறு மருந்துகளால் குணப்படுத்த முடியாதென மேனாட்டு மருந்துகள் பயின்ற டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அந்தபெண்மணி ஒத்துக் கொள்ளவில்லை. கீழ்க்கண்ட மருந்துகள் கொடுத்து பூரண குணம் அடைந்து 10 வருடங்களாகியும் இன்றுவரை காமாலை நோய் வரவில்லை. கல்லும் கரைந்து விட்டது.
மருந்து-1
மஞ்சள் கரிசலாங்கண்ணி (பொற்றலைக் கரிப்பான்) சாறு 1/2 அவுன்சுடன் சுத்தமான தேன் 1/2 அவுன்சு கலந்து காலை, மாலை இரு வேளைகள் கொடுத்தேன். இரவில் படுக்கும் சமயம் கீழ்க்கண்ட *திரிகுண எண்ணெயைக்* கொடுத்தேன் நன்கு குணமானது.
*திரிகுண எண்ணெய் செய்முறை*
1)விளக்கெண்ணெய்-1 லிட்டர்
2)வெள்ளைப்பூண்டின் ரசம்-1/2 லிட்டர்
3)இந்துப்பு-30 கிராம்
4)பெருங்காயம்-10 கிராம்
எல்லாவற்றையும் சேர்த்து, தைல பதத்தில் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு பசும்பால் 2 அவுன்சில் 1/2 அவுன்சு எண்ணெயை இரவில் படுக்கும் சமயம் கொடுத்து வந்தேன். காலையில் நன்றாக மலம் கழிந்தது. இப்படி 40 நாட்கள் கொடுத்தேன். பூரண குணமடைந்தது.
*பித்தப்பை கல்லுக்கு மற்றொரு முறை மருந்து* -2
வெடியுப்பைக் கிணற்று நீரில் கலக்கிக் காய்ச்சிக் குழம்புப் பருவம் வருமுன் எடுத்து ஒரு கெட்டியான துணியை 12 மடிப்புகளாகச் செய்து, அதில் ஷெ வெடியுப்பைக் கொட்டி வடித்துக் கொள்ளவும். சுத்தமாகும். பிறகு அதை ஒரு அயச்சட்டியில் கொட்டி, வெடியுப்பின் அளவு 20 பங்குக்கு ஆப்பசோடா ஒரு பங்கு கலந்து அடுப்பேற்றி சூடாக உருக ஆரம்பித்ததும் வெடியுப்பு எடைக்கு 4 ல் ஒரு பங்கு மஞ்சள் பொடி எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் தூவிக் கிளறிக்கொண்டே வரின், வெடியுப்பு சுண்ணமாகும்.
இந்த சுண்ணத்தில் 4 குண்டுமணியளவு சுண்ணாம்பு நீர் அல்லது இளநீரில் காலை, மாலை இரு வேளைகள் கொடுத்து உப்பில்லாப் பத்தியம் வைக்க கல் கரைந்துவிடும்.
*பித்தப்பை கல்லுக்கு அனுபவம் வாய்ந்த மருந்துகள் நம்மிடம் கிடைக்கும்.*
தயவுடன்
பொதிகைபிரியன்
சித்தா&வர்மா வைத்தியர்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷