உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ: வஜ்ராசனம்:

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
<<<<நலமுடன் வாழ>>>>

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:

வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:

வஜ்ராசனம்:

கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும்.

வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும்.

இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும்.

தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via Geetha Anbalagan .

To know about all flowers of the world step in and like this page

https://www.facebook.com/Flowersonearth

via @[100003335397719:2048:Geetha Anbalagan] .

To know about all flowers of the world step in and like this page 

https://www.facebook.com/Flowersonearth

கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்க்கான சில விளக்கமும் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்க்கான சில விளக்கமும் !!!

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்,தெளிவில்லாத பார்வை திறன்,காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்,கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம், பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?

சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?

வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?

இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?

இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?

மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?

காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?

பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?

தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

நன்றி
பரமக்குடி சுமதி

நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips
நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!

முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக தெரியும் !!

நண்பர்கள் கவனத்திற்கு...!

உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள்.
வெறும் இரண்டே நிமிடங்கள்... படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... நேரத்தை வெகுவாக குறைக்கும் பயிற்சி... இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

நன்றி
கமல் கண்ணன்

கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை சரி செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை சரி செய்வது எப்படி?

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். அது உண்மை தான். ஆனால் அவ்வாறு வரும் சண்டைகள் நீண்ட நாட்கள் நிலைக்கக் கூடாது. அவ்வாறு நிலைத்தால், அவை அந்த உறவுக்கே முறிவை ஏற்படுத்தும். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.

அது அந்த உறவை வாழ்நாள் முழுவதும் ஒன்றுசேர விடாமல் செய்து விடும். எனவே எந்த ஒரு சண்டைகள் வந்தாலும், அவற்றை விரைவில் முடிப்பதற்கு முயல வேண்டும். தாமதம் ஆகிவிட்டால், பின்னர் சேர்வது என்பது கடினமாகவிடும். இப்போது அவ்வாறு சண்டைகள் வந்தால், என்னவெல்லாம் செய்தால், சண்டையானது சரியாகும் என்பதை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே!!!

* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும். அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.

* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.

* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.

உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 PM | Best Blogger Tips
அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது.

நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும்.
பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும்.

பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும்.

இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது.

எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா

கீரைகள் :
கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.

மீன்:
கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.

பால் :
பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

ஆளி விதை:
இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

காபி:
உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.

ரெட் ஒயின் :
தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.

தினை (millet):
முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி :
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.