எளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips

தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.

ஆம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.

அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ஓய்வு நேரங்களில் டி.வி பார்ப்பது. அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவது என்பன போன்ற செயல்களால் பெண்மணிகளும் தங்களுடைய உடம்பை பருமனாக்கிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகே,தன்னுடைய உடம்பு பருமனாவதை உணர்வார்கள். அந்த உணர்வைப் பெற்றவுடனே, "அட்டா... இவ்வளவு குண்டாயிட்டமே... உடம்பை குறைக்க வேணுமே..." என்று அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.

ஒரு சிலர், கண்டிப்பாக உடம்பை குறைத்தே ஆக வேண்டும். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அதைச் செயல்படுத்தாமல் வெறும் எண்ணத்துடனே இருந்துவிடுவார்கள். காரணம் அதற்கான நேரம் இல்லை.. என்று சொல்லித் தனக்குத் தானே சமாதானம் செய்துகொள்வார்கள்.

இப்படி சூழ்நிலைகளும், மனதின் என்ன ஓட்டங்களும் இருக்குமானால் எப்படி உடம்பைக் குறைக்க முடியும்?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக,முறையான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் உடம்பு எடை குறைய ஆரம்பித்துவிடும்.

சரி.. எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே!

 Thanks to உலக தமிழ் மக்கள் இயக்கம்

எண்ணெய் தேய்த்து குளித்தல் தேவையா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:38 PM | Best Blogger Tips
சில காலம்வரை மாற்றுமுறை மருதுவதினர் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பலன் ஏதும் இல்லை கூறிவந்தார்கள் தற்போது ஏதும் கூறுவது இல்லை. இருப்பினும் எனிடம் வருகிற பல நோயாளிகள் இன்றும் இந்த வினாவை என்முன் வைக்கின்றனர் . குறிப்பாக இளம் தலைமுறை ஆர்வமுடன் கேட்கும்போது நமக்கு தெரிந்ததை தெரியபடுத்துவது நமது கடமைa ஆகிறது.

சனி நீராடு என நம் முன்னோர்கள் கூறிய கூற்று பொய் ஆகுமா ? ஆகவே ஆகாது வாரத்துக்கு ஒரு தினமகினும் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும் .

காரணம்
நமது உடலில் தண்ணீரில் கரையும் அழுக்குகள் மட்டில் படிவதில்லை மாறாக என்னையில் கரையும் அழுக்குகளும் படியத்தான் செய்கின்றன. அப்படி தண்ணிரில் கரையும் அழுக்குகள் சாதரணமாகவே சோப்பு போட்டு குளிக்க அந்த அழுக்குகள் அகலும் அது இயல்பே.
அதே என்னையில் கரையும்படியான அழுக்குகளை என்னதான் சோப்பு போட்டு குளித்தாலும் அகலவே அகலாது. அத்தருணத்தில் கொஞ்சம் என்னை உற்றி மேலுக்கு தேய்க்க அழுக்குகள் அந்த எண்ணைய் தனில் கரைந்துவிடும் பின்னர் சியக்காய் கொண்டு தேய்த்து குளிக்க அழுக்குகள் எண்ணெயுடன் நம் உடலை விட்டு அகலும் .
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றைந்து
அதனை அவன்கண் விடல்
என்ற வள்ளுவன் குரல் இதற்கும் பொருந்தும் போல .

உங்கள் லெ . பூபதி

இதயத் தூய்மையுடன் உடல் தூய்மையும் மிக முக்கியமாக நமது முதாதையர் கடைபிடித்திருந்தனர். நம்நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பது நம்முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.
ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பேரும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட மேன்மையான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன. ஒன்றாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் எண்ணெய் பூசியதும் வாயு கிடைப்பெறாமல் மாண்டு போகின்றன.

விரத நாட்களில் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?

நல்லெண்ணெய் விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதாக கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை கொண்டாடுவது வெறும் மூட நம்பிக்கை என்று கூறி வந்தனர். ஆனால், இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிப்பட்டுள்ளது.
சனி கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாகக் கருதிவரும் எண்ணெய் தலைக்குச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாக்குகின்றது.
இவ்வளையம் இருப்பதால் கிரகங்களினின்று வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம். இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது
Thanks to sugavan
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxXgkF8vyXpUbhYzZrnDcV_GFVHfY7RJdmID3wUxvGzbR7VQx5HI-TlaMIm1jR90mHd-GXdZcdVDGJCmreLSMDILxrbV1lxFPDppMeUVw4YZNXwUx5bRCLbhnST1niFzfG9EBesTSe0vpb/s1600/aa1.jpeg
 
ஏழையின் நிலம் எனக்கா?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:41 PM | Best Blogger Tips
'ஏழையின் நிலம் எனக்கா?'

லால்பகதூர் சாஸ்திரி அலஹாபாத் நகரசபை உறுப்பினராக இருந்த காலம்... நகரசபையின் சார்பில், ஏழை மக்கள் குடி இருப்பதற்காகக் குறைந்த விலையில் மனைகள் விற்கப்பட்டன.

சாஸ்திரி அப்போது ஊரில் இல்லை. அவரின் நண்பர் ஒருவர், 'சாஸ்திரியும் சொந்த வீடு கட்டிக் கொள்ளட்டுமே!' என்கிற எண்ணத்தில் அவருக்காக ஒரு மனையை வாங்கினார். ஊரிலிருந்து திரும்பிய சாஸ்திரி, நடந்ததை அறிந்து வருந்தினார். ''ஏழைகளுக்கு நிலம் என்று அறிவித்து விட்டு, அதை நாம் வாங்கிக் கொள்வது தவறில்லையா?'' என்று நண்பரிடம் கேட்டார்.

''உண்மைதான். அப்படிப் பார்த்தால் நீங்களும் பணக்காரர் இல்லையே?'' என்றார் நண்பர்.

''இருக்கலாம்! ஆனால், எனக்குச் சொந்தமாக எந்த சொத்தும் வாங்க மாட்டேன் என்று காந்திஜியிடம் ஒருமுறை வாக்குக் கொடுத் திருக்கிறேன். அதை மீறுவது தர்மம் அல்ல. அரசியல்வாதிகள் சொத்து வாங்கத் துவங்கினால், அது லஞ்சத்தில்தான் போய் முடியும். எனவே, நிலத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்'' என்றார் சாஸ்திரி. அதன்படி நிலம், நகரசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

_ அரூர். மு. மதிவாணன்லால்பகதூர் சாஸ்திரி அலஹாபாத் நகரசபை உறுப்பினராக இருந்த காலம்... நகரசபையின் சார்பில், ஏழை மக்கள் குடி இருப்பதற்காகக் குறைந்த விலையில் மனைகள் விற்கப்பட்டன.

சாஸ்திரி அப்போது ஊரில் இல்லை. அவரின் நண்பர் ஒருவர், 'சாஸ்திரியும் சொந்த வீடு கட்டிக் கொள்ளட்டுமே!' என்கிற எண்ணத்தில் அவருக்காக ஒரு மனையை வாங்கினார். ஊரிலிருந்து திரும்பிய சாஸ்திரி, நடந்ததை அறிந்து வருந்தினார். ''ஏழைகளுக்கு நிலம் என்று அறிவித்து விட்டு, அதை நாம் வாங்கிக் கொள்வது தவறில்லையா?'' என்று நண்பரிடம் கேட்டார்.

''உண்மைதான். அப்படிப் பார்த்தால் நீங்களும் பணக்காரர் இல்லையே?'' என்றார் நண்பர்.

''இருக்கலாம்! ஆனால், எனக்குச் சொந்தமாக எந்த சொத்தும் வாங்க மாட்டேன் என்று காந்திஜியிடம் ஒருமுறை வாக்குக் கொடுத் திருக்கிறேன். அதை மீறுவது தர்மம் அல்ல. அரசியல்வாதிகள் சொத்து வாங்கத் துவங்கினால், அது லஞ்சத்தில்தான் போய் முடியும். எனவே, நிலத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்'' என்றார் சாஸ்திரி. அதன்படி நிலம், நகரசபை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

_ அரூர். மு. மதிவாணன்
    Vikatan emagazine 

உலகையே உலுக்கிய சிகாகோ உரை !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips
சுவாமிஜியின் உடை நடை பாவனையை பார்த்த மேற்குலக நாட்டவர் இவன் என்ன பேசப்போகின்றான் என ஏலனக்கருத்துடனும்  நகைப்புடனும் இருந்தார்கள்..புயலென வந்த வீரத்துறவி வணக்கம் கூறிய முறையே எல்லோரையும் ஒரு கணம் உலுக்கி  எறிந்ததாம்..சகோதர சகோதரகளே என ஆரம்பித்த வீரத்துறவியின உரை ஒருவரால் எதிர்பார்க்கபடாத உரையாகிவிட்டது..

1. வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
         இறுதியிலே கடலில் சென்று
    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
         பின்பற்றும் தன்மை யாலே
    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
         வளைவாயும் தோன்றி னாலும்
    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
    அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? - செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.
'நீ எங்கிருந்து வருகிறாய்?'
'கடலிலிருந்து'
'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.
'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.
கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.
'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'
'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

3. இந்து மதம் - செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.

அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.

தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.

இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.

சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.

அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?

ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?

வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.

இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'

தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.

சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?

இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.

ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

நன்றி தர்மத்தின் பாதையில்

வீரத்துறவி சுவாமிஜியின் சிகாகோ உரை !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips

மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே? நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.

சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த ஷிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைச் சைக்கிளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக இருந்தது

கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள்1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.

அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர். கார்ல் வோன் ட்ரைஸின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan)என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake)மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே. அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.

தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் (Crank) மற்றும் பால் பியரிங்க்ஸ் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு சைக்கிள் தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார். மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் சைக்கிள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் சைக்கிள் கம்பெனி ஆகும்.

சைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing)என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து சைக்கிளின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார். முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் ரிம் (Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.

இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சைக்கிளைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்ததொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket)மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த சைக்கிளை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த சைக்கிள்கள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி சைக்கிளை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.

இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது சைக்கிளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த பெடல் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெடலை மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகைச் சைக்கிளைத்தான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

1888-
ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.

1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது. 

Thanks to FB Karthikeyan Mathan