மணக்கால் அய்யம்பேட்டை | 5:37 PM | Best Blogger Tips
ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.

ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"

- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை

- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it's known as the sound of 'big bang'எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it's known as the sound of 'big bang'

ஓங்காரம்(பிரணவம்)

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips

ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த தேர்தல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:12 PM | Best Blogger Tips

கொஞ்சம் நேரத்த ஒதுக்கி இத படிச்சி தான் பாருங்களேன்...

ராஜ ராஜனின் தாத்தா பராந்தக சோழன் (920 CE) காலத்தில் கட்டியது. முதன் முதலாக மக்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாக்களித்த இடம். மக்கள் வெளிப்படையாக ஓட்டு எண்ணிக்கையை காண வேண்டும் என்பதற்காகவும் கீழிருந்து யார் பார்த்தாலும் மேலே நடப்பது தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் மேடையை மிக உயரமாக அமைத்திருக்கிறார்கள். முதன் முதலில் தேர்தலில் நின்ற பெண் வேட்பாளரின் பெயர் "பெருங்கால நாயகி"!. ஆயிரத்து முந்நூறு வருடைய பழமையான ஊர் உத்திரமேரூர்.

உத்திரமேரூர் என்கிற கிராமம் 30 வார்டுகளாக பிரிக்கப்பட்டது, ஒவ்வொரு வார்டு சார்பிலும் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு.அவை வயது,குறைந்தபட்ச அசையா சொத்து மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

1) தேர்ந்துக்கப்படும் நபர் 35 லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவராக மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது என நிர்ணயிக்கப்பட்டதன் காரணம் பொது சேவை என்று வருபவர் தான் வாழ்கையில் கடந்து வந்ததை வைத்து இந்த வயதில் ஒரு பக்குவ நிலை அடைந்திருப்பார் என்பதற்காகவும். அதிகபட்சம் 70 என்பது ஒருவரே தன்னுடைய கடைசி காலம் வரை ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்கு அரசியல் மேல் ஒரு வெறுப்பு வரும் என்பதற்காகவும் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்தவண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே!.

2) இதில் சுவாரசியமான ஒன்று அரசாங்கத்திற்கு "வரி" கட்டுகின்ற அரை வேலி நிலமாவது அவரிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் அதுவும் அவருடைய சொந்த நிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும், பொறம்போக்கு நிலத்தில் இருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டாது!.இந்த விதிமுறையின் காரணம், தனக்கென்று சொத்து உள்ள ஒருவர் ,அதை நிர்வகிக்கும் திறமை உள்ளவராக இருப்பார் என்பதற்காகவும், சொந்த நிலம் இருப்பதால் பொது சொத்தை அபகரிக்கும் எண்ணம் அந்த நபருக்கு வருவது குறைவு என்பதற்காகவும், அந்த நபரால் பொது சொத்துக்கு ஏதேனும் நட்டம் வந்தால் அதை இந்த நிலத்தை ஜப்தி செய்து அதன் மூலம் அந்த நட்டத்தை அடைப்பதற்காகவும்!.

3) அவர் குறைந்த பட்ச கல்வித்தகுதியை அடைந்தவராய் இருக்க வேண்டும் என்பதன் நோக்கும் அவர் ஒழுக்கமானவராக இருப்பார் என்பதற்காகவும், நாளை இவர் தர்ந்தேடுக்கும் பட்சத்தில் தீர்மானகள் நிறைவேற்ற தெரிந்தவராய் இருப்பார் என்பதற்காகவும், அந்த படிப்பால் மற்றவர்களுக்கும் உதவுவார் என்பதர்க்குமாகும்.

இதையும் மீறி பதவிக்கு வந்த ஒருவர் தவறு இழைத்தால்?

1) ஏதாவது ஒரு பொது கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் வருட இறுதியில் தன்னுடைய கணக்கை முறையாக காண்பிக்கப்படாதவராக இருந்தால் , அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு தன்னுடைய வாழ்நாளில் எந்த தேர்தலிலும் நிக்க முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

2) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் லஞ்சம் வாங்கினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

3) பொது சொத்தை தவறாக பயன்படுத்துபவர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

4) பொது மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்கும் வகையில் நடந்துகொள்பவர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

5) மேற்கூறிய தவறுகளை தேர்ந்தேக்கப்பட்ட நபரின் ரத்த சொந்தங்களான அப்பா, அம்மா, மனைவி , மகன் அவர்களின் சொந்தபந்தகள் என யார் செய்தாலும் அவர் எந்த தேர்தலிலும் நிற்காதவாறு வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இப்படி வடிகட்டப்பட்டு ஒவ்வொரு வார்டிலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் பெயர்கள் தனித்தனி ஓலைகளில் எழுதி அதை ஒரு கட்டாக கட்டி, குறிப்பிட்ட ஒரு நாளில் இந்த மண்டபத்தின் மீது ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு குடங்கள் வைத்து அந்த குடத்தில் இந்த ஓலைகளை போட்டு அங்கு எழுத படிக்கத் தெரியாத ஒரு சிறுவனை அழைத்து ஒவ்வொரு குடங்களுக்குள் இருக்கும் ஓலைகளை ஒரு ஓலையை எடுக்கச் சொல்லி, அந்த சிறுவன் எடுத்ததும் ஊர் பெரியவர் ஒருவர் எழுந்து வாங்கி அதில் உள்ள பெயரை சத்தமாக படிக்க வேண்டும், அந்த ஓலையை வாங்கும் முன்னர் அந்த பெரியவர், ஊர் முன்னிலையில் தன்னுடைய வெறும் கைகளை காட்ட வேண்டும், அந்த சிறுவன் ஓலையை கொடுத்ததும் தனக்கு தேவயானவரின் பெயர் கொண்ட ஓலையை அந்த பெரியவர் மாற்றி விடக்கூடாது என்பதற்காக!. அந்த ஓலை பக்கத்தில் இருக்கும் மற்ற பெரியவர்களுக்கு சென்று ஒரு முறை சரி பார்க்கப்பட்டு அந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்!.

இப்படி30 வார்டிலும் தேர்ந்துடுக்கபட்ட வயது பக்குவமடைந்த, படித்த, நபர்களில் யாரேனும் இதற்கு முன்னரே "குளம் குழுவிலும்", "விவசாய குழுவிலும்" பணியாற்றியவராக இருந்தால், அவர் "வருடாந்திர கணக்கு தணிக்கை குழுவில் நியமிக்கபடுவார்", மீதம் உள்ள துடிப்பான இளைஞர்கள் " குளக் குழுவிலும்", "விவசாய குழுவிலும்" பணியாற்றுவார்கள்.நீர் நிலைகளை சரியான முறையில் பாதுகாப்பதே இந்த குளக் குழுவின் வேலை, இது போன்று ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு வேலைகள் பகிர்ந்து அளிக்கப்படும்.

தெரிந்த ஆட்களை கையில் போட்டுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒவ்வொரு கமிட்டியிலும் ஒரு நபர் ஒரு வருடம் தான் பணியாற்ற வேண்டும்.ஒரு கமிட்டியில் பணியாற்றிய பிறகு அடுத்த மூன்று வருடம் அவர் தேர்தலில் நிற்கக்கூடாது!

நன்றி : Sasi Dharan

பாஸ்வேர்ட் பத்திரம்... Make it Strong...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் ஹேக் பண்ணுவது எளிது என்று புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு? உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக உள்ளதா? கீழே உள்ள பட்டியலை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

6 எழுத்துக்கள்: சிறிய எழுத்துக்கள் (Lower Case) : ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும். சிறிய எழுத்து + பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம் + எண்கள் மற்றும் குறியீடுகள் என்றால் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள் + எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள் + எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள் + எண்கள், குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

உங்கள் பாஸ்வேர்டை பலஹீனமாக இருந்தால் பலப்படுத்துங்கள்....

http://tamil.gizbot.com/how-to-2/how-is-your-password-hacked-by-hackers-005418.html
 
பெ கருணாகரன் & Via FB Aatika Ashreen
 
கழுத்தை பராமரிக்க:

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips
கழுத்தை பராமரிக்க: 

*முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். 

*கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்..  பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இப்படி தொடர்ந்துதினமும்  செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

*சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.

* பப்பாளிபழத்தின் தோல் ,எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல்  இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.

குறிப்பு : முகத்திற்கு பயன்படுத்தும் மேக் -அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

Via FB ஆயுதம் செய்வோம்

தமிழன் இந்தியனுக்கு கூறிய வார்த்தைகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
http://img7.imageshack.us/img7/2250/70852263.jpg
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் .

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது ,

என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

Thanks to Raja Sekar ! Tamilnadu Police &  FB
சர்வம் சிவமயம்

அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips

---------------------------------------------------------------------------
இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்த சீதையை பார்க்க சென்றார் அனுமன்.அஷோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். 

அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது. 
 
இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்த சீதையை பார்க்க சென்றார் 
அனுமன்.அஷோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.

அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது.
 
Via FB  பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

இதய நாள நோய்கள்(கரோனரி ஆர்டரி டீசீஸ்) பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.
பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டீசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு இரத்தம் வழங்குகின்றன.

பொதுவாக இந்த இரத்த நாளங்களின் உள் பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு இரத்தம் ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது.

அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், இரத்த நாளங்கள் மூலம் வழங்கப்படும் இரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சுத் திணறல் உணர்வு அல்லது மூச்சுத் திணறல் வலி, 4 வதாக மாரடைப்பு, 5 வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, பரம்பரையாக இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை சோர்வு, உடற் பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ. சி. ஜி. யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ. சி. ஜி) எக்கோ கார்டியோகிராபி, சி. டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.

அஞ்சினா பெக்டோரிஸ்

பொதுவாக இந்தப் பாதிப்பு மார்பின் நடுப்பகுதி, வயிற்றின் மேல் பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசெளகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய் விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படக் கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசெளகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏறபடக்கூடும்.

இத்தகைய அசெளகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்குப் பிறகு, அல்லது உணவுக்குப் பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.

மையோ கார்டியல் இன்பங்க்ஷன்

(மாரடைப்பு)
இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேருக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும்.

எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைக ளோடு ‘கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்’ என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும்.

இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.

இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும் பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.

இந்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டியூப்பை டாக்டர்கள் பொருத்தி விடுவார்கள்.

இது நல்ல பலனை தருகிறது. இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளாம். இது நீண்ட காலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன் மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.

தடுக்கும் வழிகள் :

இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள ‘ரிqனிu.

இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது இரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி யால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.

உணவு முறை

நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.

உடற் பயிற்சி

நடைப் பயிற்சி தான் உடற் பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும்.

இதய நோயாளிகள் தங்கள் உடற் பயிற்சி முறையை டாக்டரின் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும்.

Via FB Karthikeyan Mathan

எளிய இயற்கை மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.

8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.

9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.

10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.

11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.

12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.

14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.

16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.

17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.

18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.

19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

கண்களை பாதுகாக்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tips

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

5. சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும்.

6. பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்

Via FB  இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

வினாடிக்கு வினாடி 4 அணுகுண்டு வெப்பம் பூமியைத் தாக்குகிறதாம்: திகிலூட்டும் விஞ்ஞானிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips

4 அணுகுண்டுகள் ஒரு சேர வெடித்தால் உண்டாகும் எப்பத்தின் அளவிற்கு பூமி தற்போது சூடாகி வருவதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
பூமி வெப்பமயமாதல் குறித்து , ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமியின் வெப்பம் தற்போது அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

கார்பன் டை ஆக்ஸைடு தான் காரணம்...

இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் அளவுக்கு அதிகமான கார்பன்- டை-ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் படிந்து இருப்பதே எனச் சொல்லப் படுகிறது.

பாதிப்பு...

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமி தாங்குமா?

இவ்வளவு கொடூரமான வெப்பமானது பூமியை ஒவ்வொரு வினாடியும் தாக்குகிறதாம். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில் பூமியின் நிலை என்ன ஆகுமென நினைத்துப் பாருங்கள் என திகில் காட்டுகிறார்கள் அவர்கள்.

உருகும் பனிமலைகள்...

அதிலும் குறிப்பாக, பூமியை தாக்குவதில் 90 சதவீத வெப்பம் கடலுக்குள் சென்று விடுகிறதாம். எனவே, இந்த வெப்பத்தினால் பனிமலைகள் மற்றும் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாய் உருகும் அண்டார்டிகா பனி மலைகள்..

அண்டார்டிகாவில் கடந்த 1,000 ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு இந்தக் கோடை காலத்தில் பனிக் கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றன.

ஆஸ்திரேலிய (Australian National University) மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு (British Antarctic Survey) இதனைக் கண்டுபிடித்துள்ளது.

600 ஆண்டுகளில் 1.6 டிகிரி அதிகரிப்பு...

அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்ப அளவு அதிகரிப்பு வேகம் பிடித்துள்ளது.

பனிக்கட்டியில் டிரில்...

அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து, இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு. கடந்த 1000 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் பனி உறைந்தது, பின்னர் உருகியது என நடந்த காலநிலை மாற்றங்கள், அந்தப் பனிப் பாறைகளில் அடுக்குகளை உருவாக்கியுள்ளது.

அடுக்குகளின் தடிமனை வைத்து...
இந்த பாறை அடுக்குகளின் தடிமனை வைத்து எவ்வளவு பனி உருகியது என்பதை கணக்கிட முடிந்துள்ளது. இதன்படி அண்டார்டிக்கா பகுதியில் பனி மிகக் குறைந்த அளவு உருகியதும், வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததுவும் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்று தெரியவந்துள்ளது
50 ஆண்டுகளில் 10 மடங்கு

உருகல்...

இதில், கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகா பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிய வெப்ப நிலை மாற்றம் கூட...
இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால், அண்டார்டிகா பனிப் பகுதியின் வெப்பம் அதன் தாங்கும் சக்தியை விட அதிகமாகிவிட்டது. அங்கு மிகச் சிறிய அளவிலான வெப்ப நிலை அதிகரிப்பு கூட மிக அதிகமான பனி உருகும் நிலையை உருவாக்கிவிடுகிறது. இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்ப நிலை அதிகரித்துவிட்டதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சிக் குழு.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
தொலைக்காட்சிப்பெட்டி பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips
தொலைக்காட்சிப்பெட்டி  பற்றிய தகவல்கள்:-

இன்று டி.வி. என்று அழைக்கப்படும் படக்காட்சி பெட்டி உலக மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நாம் நம் வீட்லிருந்தே டி.வி. மூலம் கண்டு மகிழலாம்.

                ரேடியோ, டெலிபோன் மூலம் நாம் வெகு தூரத்திலிருந்து வரும் ஒலியைக் கேட்கிறோம். ஒலியை தூரத்திலிருந்து ஒலிபரப்ப முடியுமானால்,ஏன் படத்தையும் ஒளிபரப்ப முடியாது? என்ற சிந்தனை மூலம் டெலிவிஷன் உருவாக்கப்பட்டது. இதில் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

                ஜார்ஜ் காரே என்ற அமெரிக்கர் முதலில் இத்துறையில் சில ஆய்வுகள் செய்தார். 1875 - ஆம் ஆண்டு ஒரு கருவியை உருவாக்கி அதில் லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்களை அனுப்பி மின் அலையாக்கினார்.

                1884 - ல் பால் நிப்கோவ் ஒரு கருவியை உருவாக்கினார். அதில் ஒரு டிஸ்கும், 24 துளைகளும் இருந்தன. இதன் மூலம் படத்தினை கொஞ்ச தூரம் அனுப்பினார்.

                டெலிவிஷனை முதலில் கண்டறிந்த பெருமை (Baird) பெயர்ட் என்பவரைச் சாரும். நிப்கோவ்வின் ஆய்வு பெயர்ட்க்கு டெலிவிஷன் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது. பெயர்ட் கண்டுபிடித்த டெலிவிஷனில் ஒரு டிஸ்கும், அதன்பின் லென்சும் பொருத்தப்பட்டது. 1920 - ல் டெலிவிஷன் வழியாக இவர் அசையும் பிம்பங்களை திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பினார்.

                1928 - ல் அலெக்சாண்டர்சன் டெலிவிஷன் செட்டை உருவாக்கி ஒரு நாடகத்தைப் படம்பிடித்து டெலிவிஷன் வழியாக ஒளிபரப்பினார். பெயர்ட் வியாபார ரீதியில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அடித்தளமிட்டார்.

                1930 - ல் பல தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வந்தன. அதில் முக்கியமானது லண்டனிலுள்ள பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கம்பெனி (BBC). அவர்கள் 1932 - ல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

                பின் பெயர்ட் கலர் டெலிவிஷன்களை அறிமுகப்படுத்தினார். டெலிவிஷனில் இரு குழாய்களைப் பொருத்தி ஒன்றில் மெர்குறியும்,ஹீலியமும் அடைத்து பச்சை, நீல நிறங்களையும், ஒன்றில் நியான் வாயுவை அடைத்து சிவப்பு நிறத்தையும் உருவாக்கினார். இதன் மூலம் கலர் டெலிவிஷன் உருவானதுஇன்று டி.வி. என்று அழைக்கப்படும் படக்காட்சி பெட்டி உலக மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நாம் நம் வீட்லிருந்தே டி.வி. மூலம் கண்டு மகிழலாம்.

ரேடியோ, டெலிபோன் மூலம் நாம் வெகு தூரத்திலிருந்து வரும் ஒலியைக் கேட்கிறோம். ஒலியை தூரத்திலிருந்து ஒலிபரப்ப முடியுமானால்,ஏன் படத்தையும் ஒளிபரப்ப முடியாது? என்ற சிந்தனை மூலம் டெலிவிஷன் உருவாக்கப்பட்டது. இதில் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

ஜார்ஜ் காரே என்ற அமெரிக்கர் முதலில் இத்துறையில் சில ஆய்வுகள் செய்தார். 1875 - ஆம் ஆண்டு ஒரு கருவியை உருவாக்கி அதில் லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்களை அனுப்பி மின் அலையாக்கினார்.

1884 - ல் பால் நிப்கோவ் ஒரு கருவியை உருவாக்கினார். அதில் ஒரு டிஸ்கும், 24 துளைகளும் இருந்தன. இதன் மூலம் படத்தினை கொஞ்ச தூரம் அனுப்பினார்.

டெலிவிஷனை முதலில் கண்டறிந்த பெருமை (Baird) பெயர்ட் என்பவரைச் சாரும். நிப்கோவ்வின் ஆய்வு பெயர்ட்க்கு டெலிவிஷன் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது. பெயர்ட் கண்டுபிடித்த டெலிவிஷனில் ஒரு டிஸ்கும், அதன்பின் லென்சும் பொருத்தப்பட்டது. 1920 - ல் டெலிவிஷன் வழியாக இவர் அசையும் பிம்பங்களை திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பினார்.

1928 - ல் அலெக்சாண்டர்சன் டெலிவிஷன் செட்டை உருவாக்கி ஒரு நாடகத்தைப் படம்பிடித்து டெலிவிஷன் வழியாக ஒளிபரப்பினார். பெயர்ட் வியாபார ரீதியில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அடித்தளமிட்டார்.

1930 - ல் பல தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வந்தன. அதில் முக்கியமானது லண்டனிலுள்ள பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கம்பெனி (BBC). அவர்கள் 1932 - ல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

பின் பெயர்ட் கலர் டெலிவிஷன்களை அறிமுகப்படுத்தினார். டெலிவிஷனில் இரு குழாய்களைப் பொருத்தி ஒன்றில் மெர்குறியும்,ஹீலியமும் அடைத்து பச்சை, நீல நிறங்களையும், ஒன்றில் நியான் வாயுவை அடைத்து சிவப்பு நிறத்தையும் உருவாக்கினார். இதன் மூலம் கலர் டெலிவிஷன் உருவானது.
 
Via Karthikeyan Mathan
 
பப்பாளி - அற்புத மருத்துவ குணங்கள்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips
பப்பாளி - அற்புத மருத்துவ குணங்கள்..!!

மக்கள், தேவையில்லாமல் இப்பழத்தின் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். 

வேறு சிலரோ பப்பாளிப் பழம் உஷ்ணமானது ( Heat ) என்று வதந்தியைப் பரப்பி வருகின்றனர். 

மிக எளிமையாக விளையக் கூடிய இதன் விலையும் மிகமிகக் குறைவாக இருப்பதால் இப்பழத்தை பலர் விரும்புவதில்லை போலும்.

ஆனால், 

இயற்கை மருத்துவர்களும், இயற்கை உணவாளர்களும் இப்பழத்தின் அருமையா எண்ணி வியக்கின்றனர். 

பப்பாளிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 

இப்பழத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ள இதைவிட வேறு செய்தியும் வேண்டுமா?

சாப்பிடும் முறைகள்...
.....................................

பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம்.

அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.

இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.

சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.

இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி..
..............................................................

ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

பலன்கள்..
................

பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.

நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.

கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.

பப்பாளிக்காயை சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.

பப்பாளிப்பழத்தின் நன்மைகளை அளவிடமுடியாது.

இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்களே! 

இன்றே உங்களது வீட்டின் கொல்லைபுறத்தில் சில பப்பாளி மரக்கன்றுகளை நட்டு வையுங்கள். 

அரிய நன்மைகளைத் தந்திடும் சுவையான பப்பாளிகளை உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள். 

ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
உடல் நலம் காப்போம்..!

நோயின்றி வாழ்வோம்..!!மக்கள், தேவையில்லாமல் இப்பழத்தின் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.

நோயின்றி வாழ்வோம்..!!
 
Via FB Aatika Ashreen