கொஞ்சம் நேரத்த ஒதுக்கி இத படிச்சி தான் பாருங்களேன்...
ராஜ ராஜனின் தாத்தா பராந்தக சோழன் (920 CE) காலத்தில் கட்டியது. முதன் முதலாக மக்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாக்களித்த இடம். மக்கள் வெளிப்படையாக ஓட்டு எண்ணிக்கையை காண வேண்டும் என்பதற்காகவும் கீழிருந்து யார் பார்த்தாலும் மேலே நடப்பது தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் மேடையை மிக உயரமாக அமைத்திருக்கிறார்கள். முதன் முதலில் தேர்தலில் நின்ற பெண் வேட்பாளரின் பெயர் "பெருங்கால நாயகி"!. ஆயிரத்து முந்நூறு வருடைய பழமையான ஊர் உத்திரமேரூர்.
உத்திரமேரூர் என்கிற கிராமம் 30 வார்டுகளாக பிரிக்கப்பட்டது, ஒவ்வொரு வார்டு சார்பிலும் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு.அவை வயது,குறைந்தபட்ச அசையா சொத்து மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
1) தேர்ந்துக்கப்படும் நபர் 35 லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவராக மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது என நிர்ணயிக்கப்பட்டதன் காரணம் பொது சேவை என்று வருபவர் தான் வாழ்கையில் கடந்து வந்ததை வைத்து இந்த வயதில் ஒரு பக்குவ நிலை அடைந்திருப்பார் என்பதற்காகவும். அதிகபட்சம் 70 என்பது ஒருவரே தன்னுடைய கடைசி காலம் வரை ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்கு அரசியல் மேல் ஒரு வெறுப்பு வரும் என்பதற்காகவும் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்தவண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே!.
2) இதில் சுவாரசியமான ஒன்று அரசாங்கத்திற்கு "வரி" கட்டுகின்ற அரை வேலி நிலமாவது அவரிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் அதுவும் அவருடைய சொந்த நிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும், பொறம்போக்கு நிலத்தில் இருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டாது!.இந்த
3) அவர் குறைந்த பட்ச கல்வித்தகுதியை அடைந்தவராய் இருக்க வேண்டும் என்பதன் நோக்கும் அவர் ஒழுக்கமானவராக இருப்பார் என்பதற்காகவும், நாளை இவர் தர்ந்தேடுக்கும் பட்சத்தில் தீர்மானகள் நிறைவேற்ற தெரிந்தவராய் இருப்பார் என்பதற்காகவும், அந்த படிப்பால் மற்றவர்களுக்கும் உதவுவார் என்பதர்க்குமாகும்.
இதையும் மீறி பதவிக்கு வந்த ஒருவர் தவறு இழைத்தால்?
1) ஏதாவது ஒரு பொது கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் வருட இறுதியில் தன்னுடைய கணக்கை முறையாக காண்பிக்கப்படாதவராக இருந்தால் , அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு தன்னுடைய வாழ்நாளில் எந்த தேர்தலிலும் நிக்க முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
2) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் லஞ்சம் வாங்கினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
3) பொது சொத்தை தவறாக பயன்படுத்துபவர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
4) பொது மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்கும் வகையில் நடந்துகொள்பவர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
5) மேற்கூறிய தவறுகளை தேர்ந்தேக்கப்பட்ட நபரின் ரத்த சொந்தங்களான அப்பா, அம்மா, மனைவி , மகன் அவர்களின் சொந்தபந்தகள் என யார் செய்தாலும் அவர் எந்த தேர்தலிலும் நிற்காதவாறு வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இப்படி வடிகட்டப்பட்டு ஒவ்வொரு வார்டிலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் பெயர்கள் தனித்தனி ஓலைகளில் எழுதி அதை ஒரு கட்டாக கட்டி, குறிப்பிட்ட ஒரு நாளில் இந்த மண்டபத்தின் மீது ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு குடங்கள் வைத்து அந்த குடத்தில் இந்த ஓலைகளை போட்டு அங்கு எழுத படிக்கத் தெரியாத ஒரு சிறுவனை அழைத்து ஒவ்வொரு குடங்களுக்குள் இருக்கும் ஓலைகளை ஒரு ஓலையை எடுக்கச் சொல்லி, அந்த சிறுவன் எடுத்ததும் ஊர் பெரியவர் ஒருவர் எழுந்து வாங்கி அதில் உள்ள பெயரை சத்தமாக படிக்க வேண்டும், அந்த ஓலையை வாங்கும் முன்னர் அந்த பெரியவர், ஊர் முன்னிலையில் தன்னுடைய வெறும் கைகளை காட்ட வேண்டும், அந்த சிறுவன் ஓலையை கொடுத்ததும் தனக்கு தேவயானவரின் பெயர் கொண்ட ஓலையை அந்த பெரியவர் மாற்றி விடக்கூடாது என்பதற்காக!. அந்த ஓலை பக்கத்தில் இருக்கும் மற்ற பெரியவர்களுக்கு சென்று ஒரு முறை சரி பார்க்கப்பட்டு அந்த நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்!.
இப்படி30 வார்டிலும் தேர்ந்துடுக்கபட்ட வயது பக்குவமடைந்த, படித்த, நபர்களில் யாரேனும் இதற்கு முன்னரே "குளம் குழுவிலும்", "விவசாய குழுவிலும்" பணியாற்றியவராக இருந்தால், அவர் "வருடாந்திர கணக்கு தணிக்கை குழுவில் நியமிக்கபடுவார்", மீதம் உள்ள துடிப்பான இளைஞர்கள் " குளக் குழுவிலும்", "விவசாய குழுவிலும்" பணியாற்றுவார்கள்.நீர் நிலைகளை சரியான முறையில் பாதுகாப்பதே இந்த குளக் குழுவின் வேலை, இது போன்று ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு வேலைகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
தெரிந்த ஆட்களை கையில் போட்டுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒவ்வொரு கமிட்டியிலும் ஒரு நபர் ஒரு வருடம் தான் பணியாற்ற வேண்டும்.ஒரு கமிட்டியில் பணியாற்றிய பிறகு அடுத்த மூன்று வருடம் அவர் தேர்தலில் நிற்கக்கூடாது!
நன்றி : Sasi Dharan