மண்ணுலகம்
உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது.
எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும்
தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு
அறிமுகமாகியிருக்கவில்லை.
ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.
ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.
ஒளி தோன்றுக
!
இதுதான்
படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே
அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று
வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த
இருளை வெளியேற்றியது.
கடவுள்
வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை
வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக
அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும்
இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள்
நினைத்தார்.
அதன்படியே
கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார்.
இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும்
இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில்
நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.
மறு நாள்
கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும்
பின்னிப் பிணைந்து ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப்
பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால்
நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.
பூமியிலிருந்த
தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான
பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை
மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன்
முடிவடைந்தது.
தண்ணீரும்
தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை
ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே
ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று
கட்டளையிட்டார்.
பூமியில்
கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப்
பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக்
கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை
மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை
அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது
என்று கடவுள் யோசித்தார்.
நிலத்தில்
ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த
தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக
இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச்
சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.
உலகத்துக்குப்
பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால்
நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக்
காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.
எனவே பகலை
ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில்
படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு
கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.
இப்போது
பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில்
ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம்
வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள்
மிகவும் திருப்தியடைந்தார்.
தன்னுடைய
நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச
வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள்
தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ்
உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.
கடல்
முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை
தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள்
ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே
ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள்
எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை
வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.
ஆறாவது
நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என
ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள்
பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு
வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார்.
நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.
தன்னுடைய்
ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர்
கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில்
நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து
ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள்
யோசித்தார்.
விலங்குகளில்
ஒன்றையோ,
பறவைகளில்
ஒன்றையோ,
நீர்வாழ்
உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக
இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு
உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம்
இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இதுவரை
படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச்
சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும்
ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே
வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை
தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
தரையில்
அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற
ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான்.
உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து
முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.
மனிதன்
உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை
நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள்
புன்னகைத்தார். தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன்
அணைத்துக் கொண்டார்.
மனிதனைப்
படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத்
தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான்
கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.
அழகிய
மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க
சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில்
அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின.
மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு
என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.
அந்தத்
தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை
அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து
வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான்
மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச்
செய்தார்.
ஆறு
நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும்
திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும்.
இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த
கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.
பின் கடவுள்
ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில்
கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின்
நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ..
இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான்.
ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை
அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக்
கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன்
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை
விட்டு வெளியே வந்தார்.
‘இதோ இந்த
பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச்
செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான்
உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை
அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ
பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.
கடவுள்
ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில்
தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ்
உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன்
முடிவடைந்தது.
மனிதன்
அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள்
பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக
இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும்
கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே
மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு
நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும்
என்று கடவுள் தீர்மானித்தார்.
அன்று
இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார்.
மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே
மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின்
பாகமாகவும்,
உடலின்
பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.
அவனுடைய
உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே
ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக்
கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா
எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.
அப்போது
தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள்
இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர்
என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக்
கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க
நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து
அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.
மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை
நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான்
உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே
உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.
Good night my dear GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well!
Have a lovely happy tomorrow too..!
இனிய இரவு வணக்கம்
இறைவன் நினைவே இனிய இரவு!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!
-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.
Good night my dear GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well!
Have a lovely happy tomorrow too..!
இனிய இரவு வணக்கம்
இறைவன் நினைவே இனிய இரவு!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!
-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI