ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:46 PM | Best Blogger Tips

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:45 PM | Best Blogger Tips

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள்.

*ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு), இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும்.

*துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம்.

*துணைவியின் கூந்தலை அவருக்கு வலிக்காமல், பூ போல மெல்ல வருடங்குள், கூந்தலில் சிக்கல் இருந்தால் அதனை மெல்ல எடுக்க வேண்டும்.

*துணைவியின் அழகைப் பற்றி வர்ணியிக்க வேண்டும், அதை தான் உங்களது துணைவி விரும்புவார்.

முருங்கை ஓர் இயற்கை வயாகரா

மணக்கால் அய்யம்பேட்டை | 4:28 PM | Best Blogger Tips

முருங்கை ஓர் இயற்கை வயாகரா

வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை.மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை.
 சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.ஆண்தன்மை அதிகரிக்க :முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
விந்து விருத்தியாக : முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும்.
விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.
காமம் பெருக :முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும்.
ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.பாலுறவில் பரவசமடைய :முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும்.
 சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய : முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.

நம்மை கொல்லும் 'கோபம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:09 PM | Best Blogger Tips
நம்மை கொல்லும் 'கோபம் !!!

கோபம் மனித இனத்தின் முதல் எதிரி. அச்சம் கலந்த கோபம் பலஇனங்களையே அழித்திருக்கிறது. கோபம் ஏவிவிடப்பட்ட ஏவுகணைபோன்றது. ஒன்று அயலாரை அழிக்கும். அடக்க நினைத்தால் தன்னையே அழிக்கும். இதையே நமது பொய்யாப்புலவன் வள்ளுவர்'தன்னையே கொல்லும் சினம்' என்கிறார்.

"எனக்கு கோபம் வந்ததுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது''என்று சிலர் ஆவேசமாக பேசுவார்கள். அப்படி எக்கச்சக்கமாக உணர்ச்சிவசப்பட்டால் அழிவு நிச்சயம் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

சுவீடன் நாட்டில் உள்ள 'ஸ்ட்ரெஸ்' ஆய்வு மையம் இதைகண்டுபிடித்துள்ளது. 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களை 1992 முதல் 2003வரை ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் எவ்வித இதய பாதிப்பும்இல்லாதவர்கள். ஆய்வு முடிவில் இவர்களில் 47 பேர் மாரடைப்புமற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர்இறந்துவிட்டனர்.

இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம்தான். பொருளாதார காரணங்கள், வேலைப்பளு,பிடிவாதகுணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் உள்பட பல்வேறு காரணங்களால்கோபம் உற்பத்தி ஆகிறது.

அதேபோல் அலுவலக ரீதியாகப் பார்த்தால் சில காரணங்களால் கோபம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது சொல்லிக் கொள்ளாமல் சில காரியங்களில் ஈடுபடுவது, வெளியே சென்றுவிடுவது, மேலதிகாரிமற்றும் உடன் பணி செய்பவர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்காதது/ கொடுக்காதது போன்றவை குறிப்பிடத்தக்ககாரணங்கள்.

இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளைஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுசரி...இந்த ஆபத்தான கோபத்தைக் எப்படிக் குறைப்பது?. அதற்கும் ஆய்வாளர்கள் சில வழிகளை சொல்லிஇருக்கிறார்கள். அவை வருமாறு:-

எந்த எண்ணங்களையும் மனதில் அடக்கி வைக்காமல்நேரடியாகவெளிப்படுத்திவிட வேண்டும்.
யாரையும் சந்திக்க நேர்ந்தால் தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில்சந்தித்துபேசுங்கள்.
கவலைகள் ஏற்படும்போது மனதில் தேக்கி வைக்காமல் வெளிப்படையாக அழுதுதீர்த்துவிடலாம்.
எந்த ஒன்றைப் பற்றியும் நடந்து முடிந்தபிறகு மீண்டும்ஞாபகப்படுத்திபார்க்காமல் அமைதியாக இருக்கப்பழக வேண்டும்.
சந்தோஷ வாழ்வுக்கு வழிதேடுபவர்கள் முக்கியமாக இந்த 4 வழிகளைப் பின்பற்றினாலே உடலில் பலதொல்லைகள் தொற்றிக் கொள்ளாமல் தடுத்துவிடலாம்.

அதிசய தகவல்கள்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips
அதிசய தகவல்கள்...!

1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.)

2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?)

3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா)

4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.)

5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்பு தலைக்கேறியிருக்கும்.)

6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.(கண்ணுக்கு பாதுகாப்பு வாயா?)

7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.(எல்லாத்துலேயும் no.1 நாங்க)

8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.(அப்போ ஏற்கனவே காதில் பாக்டீரியா இருக்கா?)

9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.(இது என்ன புது புரளி?)

10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.அப்படினா (ஓயாம சிரிச்சுகிட்டே இருந்தா?)

11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(மூக்கைப் பற்றி மூக்குமுட்டச் செயதி)

12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.(ஆனா அந்த மூளையே உதவிக்கு கணினியைதானே தேடுது.)

13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.(எல்லாம் முடிந்த பிறகு பார்த்தா என்ன கேட்டா என்ன)

14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.(காம்ப்ளான் தொழிற்சாலை பக்கத்தில் இருக்குதோ என்னவோ?)

15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.(இனிமேல் அந்த நாய்களை ஹிட்லர் ஷெப்பர்ட் என்று அழைக்கலாம்.)

16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.(அப்படியா.ஆச்சர்யக்குறி )

17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.(பாக்க நல்லாவா இருக்கும்?)

18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.(எனக்கு ரொம்ப உபயோகப்படும்)

19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.(கப்பல உடைக்கிறதுக்கு இவ்வளவு செலவாகியிருக்கும்.)

20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.(நல்ல வேளை ஹார்பன் டை ஆக்ஸைடு இல்ல.)

21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.(இது எனக்கு புதுசு.)

இன்னும் கோடி கோடி காணக்கான ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் துயில் கொள்கிறாள்,

இயற்கை அன்னை...!

விக்கிப்பீடியா தினம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips
விக்கிப்பீடியா தினம்!

இன்று - ஜன.15: அறிவை எளிய மக்களுக்கும் இலவசமாக திறந்துவிடுகிற சாதனையைச் செய்த விக்கிப்பீடியா பிறந்த தினம் இன்று. என்சைக்ளோபீடியாதான் அறிவுக்களஞ்சியம் என பலருக்கு தெரியும்; ஆனால், அந்த மொழி புரிந்துக்கொள்ள கடினமாக, எல்லாருக்கும் கிடைப்பதாக இல்லாமல் இருந்த குறையை இது போக்கியது.

கடந்த 2001 இல் ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் தொடங்கிய தளமிது. எந்த விளம்பரங்களும் இல்லாமல் அறிவை எல்லாரும் பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம். ஒரு பக்கத்தை நீங்கள் நான் யார் வேண்டுமானாலும் துவங்கலாம், அதை மேலும்மேலும் தகவல்களை சேர்த்து விரிவுபடுத்தலாம்; சந்தேகம் வருமென்றால் அங்கேயே கேள்விகள் எழுப்பலாம். ஒரு ரூபாய்கூட பெறாமல் இது செயல்படுத்தப்படும் என்கிற கான்செப்டில் தொடங்கியது இது.

இன்றைக்கு 285 மொழிகளில் ஒரு லட்சம் பேரின் உழைப்போடு 24 மில்லியன் கட்டுரைகள் எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இலவசமாக கிடைக்கின்றன. இதன் தாக்கத்தில் பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா தன் அச்சுப் பதிப்பை நிறுத்திக்கொண்டது. விக்கி என்றால் ஹவாய் மொழியில் வேகமான என்று அர்த்தம். ஆமாம் வேகமான தகவல்களை இலவசமாக கொண்டுபோய் சேர்க்கிற வேலையை செய்திருக்கும் இந்தக் கட்டுரைகூட விக்கிபீடியா உதவியுடனே அடிக்கப்பட்டது. என்றாலும், விக்கிப்பீடியா தரும் தகவல்களை சரிபார்த்து கொள்ளுதல் நல்ல அணுகுமுறையாக இருக்கும்.

- பூ.கொ.சரவணன்

காண்டீபம் கிடைத்தது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
காண்டீபம் கிடைத்தது எப்படி?
======================

அர்ஜுனன் என்றதும் அவனது கையிலுள்ள வில் நினைவுக்கு வரும். வில்வித்தையில் மிகவும் உயர்ந்தவன் அர்ஜுனன். இந்த வில்லின் பெயர் "காண்டீபம்'. இதனால் அர்ஜுனனுக்கு "காண்டீபன்' என்ற பெயர் உண்டு. இதைக் கொண்டே அவன் குருசேக்ஷத்ர யுத்தத்தில் கவுரவர்களை வென்றான். இந்த காண்டீபம்
அவனுக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?

சுவேதன் என்ற மகாராஜா சில கோரிக்கைகளுக்காக நூறு ஆண்டுகள் ஒரு யாகம் செய்தான். யாகத்தீயில் நெய் விடப்பட்டது. தீக்கடவுளாகிய அக்னிதேவன் இதைக் குடித்து குடித்து மந்தகதியாகி விட்டான். மந்தநோய் தீர வேண்டு மானால், தனது ஆக்ரோஷத்தை (வெப்பத்தை) யார் மீதாவது காட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.

அவன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு, அர்ஜுனனிடம் வந்தான். ""அர்ஜுனா! எனக்கு பசிக்கிறது. உணவு தாயேன்,'' என்றான். அவன் அக்னி பகவான் என்பதை அறியாத அர்ஜுன னும் உணவளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டான். "எனக்குரிய உணவு காண்டவவனத்தில் இருக்கிறது,'' என அந்தணர் கூறவே, அந்த வனத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அக்னிதேவன் தன்னிடமிருந்த பிரம்ம தனுசுவாகிய காண்டீபத்தையும் ( பிரம்மனால் வழங்கப்பட்ட வில்), வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழியாத தேர் ஒன்றையும் கொடுத்தான்.

கண்ணபிரான் தேர் செலுத்த, அர்ஜுனன் அதில் ஏறிச்சென்றான். இந்திரனுக்குச் சொந்தமானது அந்த வனம். அதைக் காக்க அர்ஜுனனுடன் இந்திரன் போராடினான். ஆனால், அவனை வென்ற அர்ஜுனன் அந்தக் காட்டில் இருந்த அரக்கர்களையும் கொன்றான். பின்னர், அந்தணர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காண்டவ வனத்திற்குள் நுழைந்தான். தீப்பற்றி எரிந்தது. அந்தக் காட்டை தனக்கு உணவாக்கிக் கொண்டான் அக்னி. இப்படியாக, அர்ஜுனனுக்கு பெயர் சொல்லும்படியான ஒரு ஆயுதம் கிடைத்தது.