இந்து - கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து - கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருச்செங்கோட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:39 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "12 12-Jul20267:12:36a. Jul 2026 7 7:1 7:12 12:3 2:36 am"

 திருச்செங்கோட்டு
May be an image of temple and text that says "ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு ஆதிகேசவப்பெருமால" 

 திருச்செங்கோடு மலை மேல இருக்கிற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில்
May be an image of temple and text that says "ဘလ அருள்மிகு செங்கோட்டு வேலவர் உற்சவர்" 
மலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்தில் காருக்கு 20 ரூபாயும், பைக்குக்கு 10 ரூபாயும், டோக்கன் வாங்கிக் கொண்டனர்.
 May be an image of temple and text that says "ஸ்ரீ அர்த்தநார்ஸ்வரர் ஸ்வரர்"
2.5 கி.மீ தூரமுள்ள மலைச்சாலையில் காரில் ஏறிக்கொண்டே ஒரு புறம் திருச்செங்கோடு நகரத்தின் அழகை ரசித்தபடியே, மறுபுறம் குரங்குகள் கூட்டத்தோடு அமர்ந்து செய்யும் சேட்டைகளை ரசித்தபடியேயும், எங்கள் பயணம் தொடர்ந்தது.
 
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து மலை மீதுள்ள கோவிலுக்கு செல்ல தேவஸ்தான பேருந்துகளும் நிறைய உள்ளது.
மலைக்கு மேலே செல்ல படிப்பாதை வசதியும் உள்ளது.
 
படிப்பாதை வழியாக 1200 படிகளை கடந்து கோயிலுக்கு மேலே செல்லலாம்.
படிப்பாதை வழியாக செல்லும் வழியில் 60 அடி நீளம் கொண்ட ஆதிசேஷனின் திரு உருவத்தை காணலாம்.
 May be an image of text
நாகதோஷம் உள்பட பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நாகர் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
 May be an image of ‎temple and ‎text that says "‎消ル造 செங்கோட்டு வேலவர் சக்கோடுவேவ்சன்ணதி சன்ணத் யாமிருக்க பயமேன் חרדישים הותי 時コ 15 15Jul2026 Jul 15Jul2 2026, pm 00417‎"‎‎
காலை நேரமாதலால், கோவில் இயற்கை அழகோடு, நல்ல அருமையான தென்றல் காற்றோடு, பனி படர்ந்து, சூப்பராக இருந்தது.
குரங்குகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தன. 
 May be an image of Victoria Peak and fog
முகூர்த்த நாள் என்பதால் எங்கே பார்த்தாலும் புதியதாய் திருமணமான மணமக்கள், தங்கள் சொந்தங்களோடு, போட்டோ எடுத்தபடி, இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருந்தனர்.
திருச்செங்கோட்டின் தொன்மையான பெயர் திருக்கொடிமாடச்செங்குன்றூர்.
 May be an image of temple
திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்றால் கொடிகள் அசைந்தாடுகின்ற மாடமாளிகைகள் நிறைந்த செந்நிற மலையை உடைய ஊர் என்பது பொருள்.
 May be an image of street and monument
திருச்செங்கோடு ஈரோட்டில் இருந்து கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து தென்மேற்கு 45 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
 
இத்திருத்தலத்தில் அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆகிய மூன்று தெய்வங்களும் கருநிலை கொண்ட மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.
 May be an image of flower
இங்கு எவ்வாறு சிவபெருமான் தன்னுடைய பாதியையும், பார்வதி தேவி தன்னுடைய பாதியையும் இணைத்து அர்த்தநாரீஸ்வரராக இங்கே காட்சி தருகிறார்களோ அதே போல தம்பதியர் இங்கு சென்று வழிபட்டால், 
 
தம்பதிகளுக்குள் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, இருவரும் ஒன்றிணைந்து சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை வாழ்வர்.
 
அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும் கணவன் மனைவி இங்கே சென்று வழிபட்டு வர, குடும்பத்தில் அமைதியும், தம்பதிக்குள் ஒற்றுமையும் நிலவும்.
 May be an image of temple
சாமி தரிசனம் முடிந்து கோவிலை வலம் வரும்போது சிற்ப மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் நம் கண்களை கவருகின்றன.
 
அதிலும் ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தால் மேலே உள்ள சிற்பங்களில் கல்லினால் செதுக்கப்பட்ட கற்சங்கிலிகள் நம்மை ஆச்சரியப்படுத்தும். 
 
சிற்பங்களைக் கண்டு ரசித்து மெய்மறந்து போவீர்கள்.
 
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தினசரி திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை.
தினசரி காலை 6:15 மணிக்கு கோ பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சி கால அபிஷேக பூஜையும், மாலை 5 மணிக்கு சாய ரட்சை பூஜையும், மாலை 6 மணிக்கு தங்க ரத புறப்பாடும் நடைபெறுகிறது.
 May be an image of temple and text
மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.
 May be an image of motorcycle, temple and monument
பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் திருச்செங்கோடு மலையை கிரிவலம் வருவது விசேஷமாகும். 
 May be an image of grass, road, street and fog
இந்த திருச்செங்கோடு நாகமலையை ( சேஷகிரியை ) ஒருமுறை வலம் வந்தால் 3 உலகங்களுக்கும் சென்று வந்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்.
பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
நோய் மற்றும் பிணிகளின்றும் மீட்கப்பட்டு உடல் நலமுடன் வாழ்வர்.
 May be an image of temple and monument
நேரம் கிடைக்கும் போது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு சென்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
 
May be an image of temple and text that says "செங்கோட் 会 யாமிரு 時 Lnce ctions ្អ្នក1គន 15 15Jul2026, 15Jul Jul 2026,"
May be an image of temple and monumentMay be an image of jeep, car, road and text that says "OИ J Rmh န- 12-Jul-20267:30:21am 12-Ju Jul 2026 7:30:21 am"

May be an image of monument and temple 

 

May be an image of temple and text 

May be an image of christmas tree, monument, temple and text 

May be an image of cable car, temple and Victoria Peak 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

யானையை அடக்கிய கோழி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips

 May be an image of monument and text that says "VLOGMACH LOG MACRL யானையை அடக்கிய கோழி கோழியூர்"

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள ** அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்**, வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்புகள் இதோ:
தல வரலாறு
​கோழியூர்: ஒருமுறை சோழ மன்னன் யானை மீது உலா வந்தபோது, அந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கோழி, மதயானையின் தலையில் ஏறி அதன் மத்தகத்தைக் கொத்த, யானையின் மதம் அடங்கியது. அந்த கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அங்கே சுயம்புவாக சிவலிங்கம் இருப்பதைக் கண்ட மன்னன், அந்த இடத்தில் கோவிலை எழுப்பினான். கோழி யானையை அடக்கியதால், இத்தலம் "கோழியூர்" என்றும் அழைக்கப்படுகிறது.
 
​பஞ்சவர்ணேஸ்வரர்: உதங்க முனிவருக்கு இறைவன் ஒரு நாளில் ஐந்து காலங்களில், ஐந்து விதமான நிறங்களில் (இரத்தினம், ஸ்படிகம், சுவர்ணம், வைரம், சித்திரம்) காட்சி அளித்ததால், இறைவனுக்கு "பஞ்சவர்ணேஸ்வரர்" (ஐவண்ணப் பெருமான்) என்று பெயர் ஏற்பட்டது.
 
​பஞ்சபூதங்களின் சங்கமம்: சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய பஞ்சபூத தலங்களை தரிசித்த புண்ணியத்தை, இத்தல இறைவனை வழிபட்டாலே பெறலாம் என்பது ஐதீகம்.
 
​கோவிலின் சிறப்புகள்
 
​நாயன்மார்கள் தொடர்பு: 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் பிறந்த தலம் இது. இவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
 
​கட்டிடக்கலை: இது சோழர்களால் கட்டப்பட்ட மிகத் தொன்மையான மாடக்கோவில் ஆகும். சோழர் காலத்துக் கல்வெட்டுகள் பல இக்கோவிலில் காணப்படுகின்றன.
 
​அம்பாள்: இறைவியின் திருநாமம் காந்திமதி அம்பாள். இவர் வடக்கு நோக்கிய தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
 
​நாக தோஷ நிவர்த்தி: கருடனும், கார்க்கோடகன் (பாம்பு) ஆகியோரும் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால், இது நாக தோஷ நிவர்த்திக்குச் சிறந்த தலமாகத் திகழ்கிறது.
 
​தரிசன பலன்கள்
 
​வெற்றி நிச்சயம்: படைப்புக் கடவுளான பிரம்மாவே வழிபட்டுள்ளதால், எவ்வகைத் தொழிலிலும், முயற்சியிலும் ஈடுபடுபவர்கள் வெற்றி பெற இவரை வழிபட்டுப் பயன்பெறலாம்.
​பகைவர்களின் தொல்லை நீங்க: யானையை அடக்கிய கோழியின் வரலாறு போல, நம்மைப் பீடித்திருக்கும் எதிர்ப்புகள், துன்பங்கள் மற்றும் தடைகள் நீங்கி மன தைரியம் கிடைக்கும்.
 
​பாவ விமோசனம்: முந்தைய பிறவி பாவங்கள், சாபங்கள் மற்றும் தோஷங்களில் இருந்து விடுபட இங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு.
 
​சகல சௌபாக்கியங்கள்: இத்தல இறைவனை தரிசிப்பது, பஞ்சபூத தலங்களையும் ஒருசேர தரிசித்த புண்ணியத்தைத் தரும்.
 
திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள ** அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்**, 
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்புகள் இதோ:
 
  • ஐவண்ணப் பெருமான்: உதங்க முனிவருக்கு இறைவன் ஒரு நாளில் ஐந்து காலங்களில், ஐந்து விதமான நிறங்களில் (இரத்தினம், ஸ்படிகம், சுவர்ணம், வைரம், சித்திரம்) காட்சி அளித்ததால் இப்பெயர் ஏற்பட்டது. [1, 2]
  • தல வரலாறு (கோழியூர்): மதயானை ஒன்றை ஒரு கோழி அடக்கிய வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலம் 'கோழியூர்' என்றும் அழைக்கப்படுகிறது. [1]
  • பஞ்சபூத ஸ்தலம்: சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி ஆகிய பஞ்சபூத தலங்களை தரிசித்த புண்ணியத்தை, பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவிலை வழிபட்டாலே பெறலாம் என்பது ஐதீகம். [1]
  • புகழ்பெற்ற நாயன்மார்: சிவநெறி காத்த நாயன்மார்களில் ஒருவரான புகழ்சோழ நாயனார் பிறந்த தலம். இவருக்கு இவ்வாலயத்தில் தனி சன்னதி உள்ளது. 
  •  
     🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

    🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

    திருவைகல் என்ற #வைகல்மாடக்கோயில் (செண்பகாரண்யம்

    மணக்கால் அய்யம்பேட்டை | 3:56 PM | Best Blogger Tips

     கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்ற  சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமகள் செண்பக வனத்தில் ...Tamil - வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில் மூலவர்:வைகல்நாதர்  (செண்பகாரண்யேஸ்வரர்) இறைவி: கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி) தல விருட்சம் ...

     

    #கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும்,
    தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
     
    திருமகள் செண்பக வனத்தில் கடுந்தவம் புரிந்து ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் ஒன்றான 
     
    #மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
    செண்பக மரங்கள் நிறைந்த காணப்பட்ட
    (செண்பகாரண்யம்,
     
    நித்யவாசபுரம்)
     கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்ற  சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமகள் செண்பக வனத்தில் ...
    திருக்கோயில் வரலாற்றையும் 
     
    புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள்
    🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻🙇🙇🙇 
     
    உண்மையான அடியவர்களைச் சார்ந்தே இருக்கும் அருட்பெரும் தெய்வமான சிவபெருமான், அந்த பக்தர்களைச் சோதித்த பின்பே புடம் போட்டத் தங்கமாய்ப் புத்தொளி வீசச் செய்வார். பக்தியின் உத்தம நிலையை ஒருவன் அடைந்த பின்பே அவன் மீது கருணைப் பொழியும் பண்பினைப் பெற்ற எம்பெருமான், இம்மண்ணின் துயரங்கள் களைந்திடவே தலங்கள்தோறும் எழுந்தருளி தயை புரிகின்றார். அப்படிப்பட்ட அதி உன்னதத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது திருவைகல் மாடக்கோயில்.
     
    திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி அடுத்து பழியஞ்சியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் 2 கி.மீ. தெற்கில் உள்ளது. ( 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில் இது) வைகல் அல்லது வைகல்நாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33-ஆவது சிவத்தலமாகும்.
     திருவைகல் வைகல்நாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
    இக்கோயில் பற்றிய குறிப்புகள் தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவற்றில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். இறைவன் சிவபெருமான் செண்பகா ஆரண்யேசுவரரின் வடிவத்தில் காட்சியளிக்கிறார்.
     
    கோட்செங்கட்சோழன் கட்டிய எழுபது மாடக்கோயில்களுள் ஒன்றாகத் திகழும் இந்த வைகல் மாடக்கோயில் ஈசன் மீது பதிகம் பாடிப் பரவியுள்ளார் ஆளுடையப்பிள்ளை திருஞானசம்பந்தர். அதோடு, அப்பர் பெருமானும் பாடிப் பரவிய தலமிது. இந்தக் கோயிலை, ‘வடமலை அணைய நன்மாடக் கோயிலே’ என கயிலை மலைக்கு இணையாகப் பாடிய சம்பந்தப்பெருமான் மேலும், ‘வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசை செய்ய கண்வளவன் முன் செய்த கோயிலே’ என உலகத்தில் உள்ள உயிரினங்கள் மகிழ்வுற இத்தலத்தில் ஈசன் எழுந்தருளியதாகவும் எடுத்துரைக்கின்றார்.
     
    திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு. க்ஷேத்திரக்கோவையிலும் இத்தலத்தினை நினைத்துப் போற்றுகின்றார். சைவ சமய சந்தானக் குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவக்ஷேத்திர கோவையிலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. சோழ வளநாட்டின் காவிரி தென்கரை தேவாரத் திருத்தலங்களில் 33வது தலமாகத் திகழ்கின்றது இந்த வைகல்மாடக்கோயில்.
     
    ஈசனுக்கு திரிநேத்திரங்கள் [மூன்று கண்கள்] இருப்பதுபோல இந்த வைகலில் மூன்று சிவாலயங்கள் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் வைகல் மாடக்கோயிலோடு, பெரியநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும், விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் ஆலயமும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது விசேஷம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியவர்களோடு, இந்திராதி தேவர்களும், அகத்திய மாமுனிவரும் போற்றி வழிபட்ட திருக்கோயில் இது. தேவர்கள் ஈசல் வடிவில் வழிபாடு செய்த புகழ்மிகு கோயிலாகும்.
     
    *மூலவர் : வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
    *அம்மன் : சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.
    *தல விருட்சம் : செண்பகம்
    *தீர்த்தம் : செண்பக தீர்த்தம்
    *புராண பெயர் : வைகல்மாடக்கோயில்
    *ஊர் : திருவைகல்
    *மாவட்டம் : மயிலாடுதுறை
    *பாடியவர்கள்:
    திருஞானசம்பந்தர், அப்பர், வள்ளலார் மற்றும் சேக்கிழார் 
     
    "தோன்று கையினர்
    இளமதி யணிசடை
    எந்தை யாரிடம்
    உளமதி யுடையவர்
    வைக லோங்கிய
    வளமதி தடவிய
    மாடக் கோயிலே.
    மெய்யகம் மிளிரும்வெண்
    ணூலர் வேதியர்
    மையகண் மலைமக
    ளோடும் வைகிடம்
    வையகம் மகிழ்தர
    வைகல் மேற்றிசைச்
    செய்யகண் வளவன்முன்
    செய்த கோயிலே.
    #அப்பர் வாக்கில் வைகல் தேவாரம்:
    "துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
    சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
    ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
    உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
    வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
    மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
    அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
    ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
     
    புராண வரலாறு:
     
    ஆதியில் செண்பக வனமாகத் திகழ்ந்த இத்தலத்தில் நம்மையெல்லாம் தாங்கும், ஆதார சக்தியான அன்னை பூமா தேவி ஒரு சமயம் திருமாலை மணம் புரிந்திட வேண்டி, ஈசனை நோக்கித் தவமிருந்து திருமாலை மணந்து கொண்டாள். இதனால் கோவிந்தன் மீது கோபமுற்றாள் திருமகள். உடனே இந்த செண்பகாரண்யம் அடைந்து, சிவனாரை நினைத்து கடுந்தவம் இயற்றினாள். திருமகளைத் தேடி வந்த திருமால், இத்தல ஈசனை வணங்கினார். உடன் வந்த பிரம்மனும் இங்கே இறைவனை வழிபட்டு நின்றார். அப்போது மகாதேவர் அவர்கள் முன் தோன்றி, திருமகளை சாந்தப்படுத்தி, திருமாலோடு இணைத்து வைத்தார்.
     
    திருமகளையும், நிலமகளையும் இரு மனைவியராய் திருமால் கொண்ட தலமிது.
    ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல் மாடக்கோயில் தோரண வாயிலுடன் அழகுறத் திகழ்கிறது. கோயிலின் உள்ளே மையத்தில் அமைந்துள்ளது உயரிய மேடை. வலப்பக்கம் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் நந்தி மண்டபம். அதற்கு நேராக அமைந்துள்ளது ஐயன் வைகல்நாதர் சன்னிதி. உள்ளே செல்ல மூடுதளத்துடன்கூடிய அழகிய முன் மண்டபம். கருவறையில் இறைவன் வைகல்நாதர் கிழக்கே திருமுகம் காட்டி, வழுவழு லிங்கத் திருமேனியராக் காட்சி தருகின்றார். மூலவர் செண்பகாரண்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
    கோயிலை வலம் வருகையில் வலப்புறம் அம்பிகைக்கு கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதி அமைந்துள்ளது. அதில் அழகிய வடிவில் எழிலோடு தரிசனமளிக்கின்றாள் அன்னை ஸ்ரீ கொம்பியல் கோதை. அப்பன் ஈசனை அன்னை மணக்கும் திருக்கோலம் இது.
    முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் செண்பகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவில்களையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.
    *கோயில் சிறப்புகள்:
    வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் – இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும்.
    வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.
    தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.
    கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
    தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.
    இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது.
    மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது.
    வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன.
    சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தின் 4-வது பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், இறைவி கொம்பியல் கோதை பெயரையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
    திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு.
    இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு
    வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஞாலத்து நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் மாடக் கோயிற்குள் மதுரமே” என்று போற்றி உள்ளார்.
    *புராணங்கள்:
    இத்தலம் செண்பகரணியம், நித்யவாசபுரம் முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் சிவபெருமானை ஸ்ரீ மகாலட்சுமி வழிபட்டாள்.
    மகாலட்சுமி / ஸ்ரீதேவி மகா விஷ்ணுவை விட்டுப் பிரிந்து, இந்த இடத்திற்கு வந்து, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். இதற்கிடையில், மகா விஷ்ணுவும் பூதேவியும் மகாலட்சுமியைத் தேடி இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர். மகா விஷ்ணு இந்தக் கோவிலில்தான் மகாலட்சுமியை மணந்தார்.
    மற்றொரு புராணக்கதையின்படி, காட்டின் நடுவில் பிரிந்துபோன தன் குட்டியைத் தேடி ஒரு யானை வந்தது. அந்த யானை கவனக்குறைவாக ஒரு எறும்புப் புற்றைச் சேதப்படுத்தியது. எறும்புகள் யானையைக் கடித்ததில், அது இறந்துபோனது. யானைக் குட்டியும் எறும்புகளும் தங்கள் பாவத்திலிருந்து விடுபடுமாறு சிவபெருமானிடம் வேண்டின. சிவபெருமான், தன் தாயை இழந்த யானைக் குட்டிக்கு ஆறுதல் கூறி, எறும்புகளையும் மன்னித்தார்.
    அமைப்பு:
    வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது.
    கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.
    பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). லட்சுமி தேவியார் வழிபட்ட தலம். இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன.
    இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு. கன்னிமூல கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனான சுப்ரமணியரும் இங்கு தரிசனம் அளிக்கின்றனர். ஆலய வளாகத்தின் சுற்றிலும் நந்தவனம் அமைக்கப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சுகின்றது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயிலில் நித்திய - நைமித்திய பூஜைகள் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன. தல விருட்சம் செண்பக மரம் முன்பு இந்தக் கோயிலில் இருந்தது. தற்போது இல்லை. தல தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோயிலின் வடபால் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 2006ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
    இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனான வரதராஜப் பெருமாள் மற்றும் கஜலட்சுமிக்கு திருமஞ்சனத்தோடு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட, நீண்ட நாள் திருமணத்தடை நீங்கி, திருமாங்கல்ய பாக்கியம் கைகூடும். அதேபோல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் நடத்தி சுக்ர ஹோமம் செய்ய, பலமான களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும். இத்தல அம்பிகைக்கு பொன் மாங்கல்யம் சாத்தி பிரார்த்திக்க ஜாதக ரீதியாக ஏற்படும் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.
    *கல்வெட்டுகள்:
    திருஞானசம்பந்தர் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடல்களைப் பாடியிருந்ததால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்றும், அது சோழர் காலத்தில் புனரமைக்கப்பட்டு, பின்னர் விஜயநகரப் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்றும் அறியப்படுகிறது.
    *திருவிழா:
    மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.
    *திறக்கும் நேரம்:
    காலை 7 மணி முதல் 12 மணி வரை,
    மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
    *அமைவிடம்:
    கும்பகோணத்திலிருந்து (18 கி.மீ.) காரைக்கால் செல்லும் வழியில் பழிஞ்சநல்லூர் குட்டக்கரையில் இறங்கி அங்கிருந்து தெற்கே ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
    திருச்சிற்றம்பலம் 🙏🏻
    சிவ சிவ 🙏🏻🙏🏻🙇🙇
     

     

    🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

    🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷