"செட்டி நாட்டு அரசர்" சர் ராஜா அண்ணாமலை செட்டியார்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:00 PM | Best Blogger Tips

No photo description available.

பீரிட்டிசார் இல்லையென்றால் கிறிஸ்தவர் இல்லை என்றால் கல்வி இல்லை முன்னேற்றமில்லை இன்னும் பல விஷயமில்லை என சொல்லும் கும்பல் இங்கு திராவிட முகமூடிகளிலும், காங்கிரசிலும் இன்னும் கிறிஸ்தவ முகங்களிலும் உண்டு, இங்கு கிறிஸ்தவரின் கல்வி மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கின்றது என்பதை அறிந்த இந்து மடங்களும் ஆதீனங்களும் இந்து தொழிலதிபர்களும் மதமாற்றம் அல்லாத கல்வியினை இந்து பாரம்பரியம் காக்கும் கல்வியினை அன்றே தொடங்கினார்கள்.
 
ஈரோட்டு ராம்சாமி இல்லாவிட்டால் பார்ப்பனன் நம்மை படிக்க விட்டிருக்கமாட்டான் என்பதெல்லாம் மாபெரும் பொய், உண்மையில் ஆதீனங்களும் இந்து தொழிலதிபர்களும் நடத்திய கல்வி நிலையங்களில் எல்லா மக்களும் பயின்றார்கள் எல்லாருக்கும் வாய்ப்பு கிட்டிற்று
தன் இளமை காலத்தில் ராம்சாமி கல்லூரி பள்ளிகள் நடத்தியதாக தகவல் இல்லை, எல்லாம் பின்னாளில் பத்தோடு பதினொன்றாக வந்தது
 
ஆனால் ராம்சாமி ஈரோட்டில் மஞ்சள் வியாபாரம் அரிசி வியாபாரம் பார்த்துகொண்டு தான் உண்டு தன் வியாபாரமும் உல்லாச வாழ்வும் உண்டு என ஊதாரியாக இருந்த காலத்திலே ஒரு தமிழக இந்து பெரும் கல்விபணியினை செய்திருந்தான்
அவன் இந்து, பரிபூரண இந்து, சிதம்பரம் நடராஜரை குலதெய்வமாக கொண்ட இந்து
அண்ணாமலை செட்டியார் என வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் அவர், கானாடு காத்தான் எனும் செட்டிநாட்டு கிராமத்தில் 1881ல் இதே நாளில் பிறந்தவர் அவர், சைவத்தில் தீவிரமான அக்குடும்பம் அண்ணாமலை எனும் பெயரை அவருக்கு இட்டது
 
செட்டிநாட்டிலே இளமை கல்வியினை தன் குலத்துக்கேற்ற வியாபார கல்வியாக முடித்த அவர் செட்டியாரின் வைசிக தர்மபடி கிழக்காசியா தொடங்கி ஐரோப்பா வரை வியாபாரத்தில் நிறைய சம்பாதித்தார், கப்பல் கப்பலாக செல்வங்கள் அவருக்கு குவிந்தன, பெரும் வியாபாரி எனும் பெயரினை 30 வயதிலே பெற்றார், அந்த அளவு அவரின் வியாபாரத்தில் புத்தி கூர்மையும் இருந்தது
 
உலகெங்கும் அவர் சென்று வந்ததால் பெரும் அனுபவம் அவருக்கு இருந்தது, அந்த அனுபவத்தை மக்கள் நலனில் செலுத்த வேண்டி, நவீன உலகோடு மக்களை இணைத்து முன்னேற்ற வேண்டி மக்கல் கேட்டுகொண்டார்கள், அப்போது உள்ளாட்சி முறை அறிமுகமாகியிருந்தது, 
 
கணவான்களும் படித்தவர்களும் குற்ற பின்னணி இல்லாதவர்களுமே மக்கள் பிரதிநிதிகளாய் அமரமுடியும்
 
அப்படி காரைகுடி நகராட்சி மன்ற தலைவராக அவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டார், 
 
அதிலிருந்து துவங்குகின்றது அவரின் பொதுவாழ்வு
அவரின் துல்லிய நிர்வாகமும் ஈடில்லா பக்தியுடன் கூடிய பொதுவாழ்வும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன "செட்டி நாட்டு அரசர்" என்ற பட்டம் அவருக்கு தேடி வந்தது, ராவ் பகதூர், திவான் பகதூர் என பிரிட்டிஷாரும் பட்டம் அளித்தனர்.
1916ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர்ர். 1921 ஆம் ஆண்டு டெல்ல்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் , அங்கே மும்முறை அந்த பதவியில் இருந்தார்
 
அன்றைய காலத்தில் பெரும் அந்தஸ்தில் இருப்பவர்கள் இருந்த கட்சியான "லிபரல் கட்சி" அவரை சேர்த்து கொண்டது
 
தன் குலதெய்வம் உறையும் சிதம்பரத்தில் ஒரு பள்ளி தொடங்கினார், அப்படியே மதுரையில் 1920ல் "ஸ்ரீ மீனாட்சி கல்லூரி"யினை மகளிருக்காக துவக்கினார், இன்று அது அரசு கல்லூரியாக பெண்களுக்கு கல்வி அளித்து கொண்டிருக்கின்றது
 
1912ல் அவர் ஆரம்பித்ததுதான் "இந்தியன் வங்கி". இன்றும் எந்த சர்ச்சையிலும் இல்லாமல் அது மக்களுக்கு நல்ல பயனை கொடுத்து கொண்டிருக்கின்றது, அதனால் பலனடைந்தவர்கள் கோடான கோடி
நகரத்து செட்டியார்கள் கோவில் திருப்பணிகள், சமஸ்கிருத வேதபாடசாலை என இந்து சேவை பணிகளுக்கு பெயர் போனவர்கள், அன்ணாமலை செட்டி இதையும் செய்து அதனோடே கல்வி பணி மருத்துவபணி என அடுத்த நிலைக்கு சென்றிருந்தார்
 
அவர் தமிழின் தொன்மையான சுவடிகளை காக்கவும் இன்னும் ஆய்வுகளை செய்யவும் , தமிழ் சுவடிகளை புதுப்பிக்கவும் தமிழை காக்க தனி கல்லூரிஅவசியம் என்பதை உணர்ந்தார், தமிழ் அறிவுடமை சொத்துக்களை காக்க 1927ல் சிதம்பரத்தில் வடமொழிக் கல்லூரியும், தமிழ்க் கல்வியும் துவக்கினார்
 
அப்படியே இசைகல்லூரியும் துவங்கிற்று, 1928ல் அவர் இதனை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பல்கலைகழகம் துவங்க தீர்மானித்தார், 1929ல் அதற்கான அனுமதி கிடைத்தது
 
அதிலிருந்து அண்ணாமலை பல்கலைகழகம் சிதம்பரத்தில் உருவானது, இன்று எல்லா வகை கல்வியும் மருத்துவ கல்வி வரைக்கும் பெரும் பல்கலைகழகமாக அது நிலைபெற்று நிற்கின்றது
இதன் பின்பே பிரிட்டிஷ் அரசு "ராஜா" பட்டத்தை அளித்தது, அவர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் என்றானார்
 
அவரின் இன்னொரு மகா முக்கிய சாதனை இசை உலகை உயிர்பெற செய்தது, சன்முகம் செட்டியாரோடு அவர் இணைந்து பெரும் மண்டபங்களை இசைகென கட்டிதந்தார், இசை கலைஞர்களை ஊக்குவித்தார்
 
சுமார் ஆயிரம் தமிழிசை பாடல்கள் வெளிவர பெரிதும் பாடுபட்டவர் அண்ணாமலை செட்டியார், திறமையான கலைஞர்களை ஊக்குவித்து பாடவைத்து இசை அமைப்பாளர்களை ஊக்குவித்து அவர் செய்த புரட்சிதான் பின்னாளில் கச்சேரிகள், இசை மேடைகள் என வளர்ந்தன, மார்கழிமாத இசைமேடைகளெல்லாம் அவர் தொடங்கி வைத்த சாதனை
ராஜா அண்ணாமலை மன்றம் அவரால் தொடங்கபட்டு இன்றளவும் இசைக்கோர் மண்டபமாக நிற்பது தொடரும் பெரும் வரலாறு
அவரின் மகனான முத்தையா செட்டியார் 
 
சென்னையிலும் இன்னும் தமிழகமெங்கும் இசைக்கான மண்டபங்களை தன் தாய் ராணி சீதை பெயரிலும் தன் பெயரிலும் துவக்கினார், இசைக்கென உருவான மண்டபங்கள் அவை
கூர்ந்து பார்த்தால் பழைய பாண்டிய மன்னன் ஒருவனின் மறுபிறப்பு அவர், சரியான காலத்தில் வந்து ஒரு அரசன் செய்ய வேண்டிய கல்வி பணி, மருத்துவ பணி, தமிழ் பணி, இசை பணி என எல்லாமும் செய்துவைத்த பெருமகன் அவர்
பணம் எல்லோரிடமும் இருக்கலாம் ஆனால் அதனை பொது நலத்துக்காய் செலவிடுவது
 
 எல்லோருக்கும் வராத் மனம், அது பூர்வ ஜென்ம வாசனையாலே வரும் குணம்
தானும் வளர்ந்து இந்த மண்ணையும் மக்களையும் வளர்த்து எதிர்காலத்தில் பெரும் கல்வியும் வாய்ப்பும் வசதியும் மருத்துவமும் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்தவர் அவர், தமிழ் காக்க அதன் தொன்மை மகத்துவம் காக்க முத்தமிழையும் காக்க பாடுபட்ட மிக சிறந்த தமிழ்குடிதலைவன் அவர்தான்
 
இசைதமிழ், இயல் தமிழ், நாடக தமிழ் என மூன்றையும் மரபு மாராமல் அவர் வளர்த்தார், அழியவிடாமல் காத்தும் கொண்டார் உ.வே.சா போல, ஆறுமுகநாவலர்போல ஏட்டில் இருந்த சுவடிகளை அச்சுக்கு கொண்டுவந்ததிலும் பெரும் பங்கு இவருக்கு உண்டு
 
இன்று அவருக்கு பிறந்த நாள்
 
தமிழகத்தில் சிதம்பரம் பல்கலைகழகம் முதல், மீனாட்சி கல்லூரி முதல் ஏகபட்ட கல்லூரிகள் வடிவிலும் , இசைதமிழ் ஒலிக்கும் அவரின் மண்டபங்களிலும் இன்னும் அவர் செய்த பெரும் திருப்பணிகளிலும் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
 
அவையெல்லாம் அவர் வாழும் ஆலயங்கள், ராஜாவாக உயர்ந்து தெய்வமாக மாறிவிட்ட அந்த மகாத்மா வாழும் தேவாலயங்கள் 
 
நன்றி இணையம்
  

வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி ( " வாராந்திர விரைவு வண்டி ")

மணக்கால் அய்யம்பேட்டை | 3:48 PM | Best Blogger Tips

 💥Velankanni To Vasco-da-gama Weekly Express 📢 Announcement at  Tiruchirappalli Junction ♥️ via : Karur Erode Madgaon || வேளாங்கண்ணி வாஸ்கோ  வாராந்திர விரைவு வண்டி 🤩 கரூர் ஈரோடு வழியாக வாஸ்கோடகாமா வரை ...😍Only Direct Train From Goa To Velankanni ✝️ Passing Hubli Bengaluru Salem  Trichy || Vasco to Velankanni 🚂 •| 17315/17316 = Vasco-Da-Gama To  Velankanni " Weekly Express " Running by South Western

🏖️ கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயங்கும் ஒரே நேரடி ரயில் சேவை இது 💥 பெங்களூர் வழியாக செல்லும் ஒரே ரயில் 😍

➡️ 2011 ரயில்வே பட்ஜெட்டில் வாஸ்கோடகாமா முதல் வேளாங்கண்ணி வரை வாராந்திர ரயில் சேவை அறிவிக்கப்பட்டது !! 2012 முதல் இந்த வாராந்திர ரயில் கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் இருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி வரை வாரத்தில் ஒரு நாள் பெங்களூர் வழியாக இயங்கி வருகிறது ✅

🗺️ கோவா கர்நாடகா ஆகிய இரண்டு மாநில மக்களுக்கும் நேரடியாக வேளாங்கண்ணி செல்வதற்கு இருக்கும் ஒரே ரயில் இந்த ரயில் சேவை மட்டும்தான் // இதை தவிர்த்து மற்ற நாட்களில் பெங்களூரில் இருந்து கூட நேரடி ரயில் என்பது வேளாங்கண்ணிக்கு இல்லை !!

↪️ கோவா மாநிலத்திலிருந்து அதிக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர் // நேரடி ரயில் சேவை என்பது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே உள்ளது அதுவும் அரை நாள் மட்டுமே வேளாங்கண்ணியில் நின்று விட்டு மீண்டும் உடனடியாகவே புறப்பட்டு விடுகிறது !! இதனால் அங்கிருந்து வரும் பக்தர்களுக்கு முழு பயன் கிடைக்கவில்லை என்று குறை இப்போது வரை இருந்து வருகிறது ‼️

📍 செவ்வாய்க்கிழமை மதியம் வந்துவிட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலேயே புறப்பட்டு விடுகிறது // வெறும் அரை நாள் மட்டுமே இருக்க முடிவதாக அங்கிருந்து வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர் || இத்தனை வருடத்தில் கூடுதல் ரயில் சேவைகள் கோவா மாநிலத்திலிருந்து அறிமுகப்படுத்துவதோ அல்லது இப்போது ஓடக்கூடிய இந்த ரயிலின் சேவை நாட்களை அதிகரிப்பு செய்வதை பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை !!
 
🏖️ தமிழ்நாட்டில் இருந்து பல ஊர்கள் இந்த ரயில் மூலம் நேரடியாக கோவா மாநிலத்துடன் இணைகிறது !! இதன் மூலம் சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ரயிலாகவும் இந்த ரயில் இருக்கிறது ......
 
🚂 வண்டி எண் : 17315 // 17316 ||•
• வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி •
" வாராந்திர விரைவு வண்டி "
 
🛑 17315 || வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் திங்கட்கிழமை தோறும் காலை 08:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி வந்து சேர்கிறது ✅

🛑 17316 || வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 3வது நாள் வியாழன் அதிகாலை 02:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையம் சென்று சேருகிறது ✅

⛔ நிறுத்தங்கள் :- மட்கான் சன்வெர்டாம்-சர்ச் குலேம் கோட்டை-ராக் லோண்டா தார்வாட் ஹுப்பாலி ஹாவேரி ராணிபென்னூர் தாவங்கேரே பிரூர் அர்சிகெரே திப்தூர் துமகுரு சிக்கா-பானவரா பானஸ்வாடி கிருஷ்ணராஜபுரம் பங்காருபேட்டை சேலம் ஈரோடு கரூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ......
 
⛪ ஆண்டுதோறும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆண்டு திருவிழா நடைபெறும் பொழுது மட்டும் கூடுதல் ரயில்கள் கோவா மாநிலத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வருகை புரிகிறது || அந்த காலத்தில் மட்டுமே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுகிறது தவிர மற்ற நாட்களில் இந்த ஒரு ரயில் மட்டுமே நேரடியாக கோவாவில் இருந்து உள்ளது .....
 
➡️ பெங்களூரில் இருந்து அதிக மக்கள் ரயில் மூலமாக வேளாங்கண்ணிக்கு வருகை புரிய நினைக்கின்றனர் :- ஆனால் அவர்களுக்கு நேரடி ரயில் என்பதே கிடையாது , ஒரு நாள் வரும் இந்த வாஸ்கோ எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ஒரே ஆப்ஷனாக இருக்கிறது !! மற்ற நாட்களில் மைசூரில் இருந்து கடலூர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி தஞ்சாவூர் வந்து அங்கிருந்து பிற போக்குவரத்து அல்லது இணைப்பு ரயில சேவையான காரைக்கால் டெமு ரயிலை பிடித்து நாகப்பட்டினம் வந்து சென்று வருகின்றனர் !! இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் அருகாமையில் இருக்கும் தஞ்சாவூர் ரயில் நிலையம் மட்டுமே பெங்களூருக்கு ✅

📍 பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி அல்லது நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பதே 2 மாநிலம் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது // ஒட்டுமொத்த டெல்டா பகுதியின் தேவையும் கடலூர் மைசூர் ரயிலிலேயே மட்டுமே பூர்த்தி அடைகிறது !! கூடுதலாக திருநள்ளாறு பெங்களூரு அல்லது வேளாங்கண்ணி பெங்களூர் இடையே தினசரி ரயில் சேவை தினமும் இயக்கப்பட்டால் அது அனைத்து பகுதி மக்களுக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் // குறிப்பாக திருச்சி பகுதி மக்களுக்கும் கூடுதல் ரயில் சேவை பெங்களூரு செல்வதற்கு கிடைக்கப்பெறும் !!
 
நன்றி இணையம்