
கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயங்கும் ஒரே நேரடி ரயில் சேவை இது
பெங்களூர் வழியாக செல்லும் ஒரே ரயில் 
2011 ரயில்வே பட்ஜெட்டில் வாஸ்கோடகாமா முதல் வேளாங்கண்ணி வரை வாராந்திர ரயில் சேவை அறிவிக்கப்பட்டது !! 2012 முதல் இந்த வாராந்திர ரயில் கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் இருந்து தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி வரை வாரத்தில் ஒரு நாள் பெங்களூர் வழியாக இயங்கி வருகிறது
கோவா கர்நாடகா ஆகிய இரண்டு மாநில மக்களுக்கும் நேரடியாக வேளாங்கண்ணி செல்வதற்கு இருக்கும் ஒரே ரயில் இந்த ரயில் சேவை மட்டும்தான் // இதை தவிர்த்து மற்ற நாட்களில் பெங்களூரில் இருந்து கூட நேரடி ரயில் என்பது வேளாங்கண்ணிக்கு இல்லை !!
கோவா மாநிலத்திலிருந்து அதிக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர் // நேரடி ரயில் சேவை என்பது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே உள்ளது அதுவும் அரை நாள் மட்டுமே வேளாங்கண்ணியில் நின்று விட்டு மீண்டும் உடனடியாகவே புறப்பட்டு விடுகிறது !! இதனால் அங்கிருந்து வரும் பக்தர்களுக்கு முழு பயன் கிடைக்கவில்லை என்று குறை இப்போது வரை இருந்து வருகிறது 
செவ்வாய்க்கிழமை மதியம் வந்துவிட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலேயே புறப்பட்டு விடுகிறது // வெறும் அரை நாள் மட்டுமே இருக்க முடிவதாக அங்கிருந்து வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர் || இத்தனை வருடத்தில் கூடுதல் ரயில் சேவைகள் கோவா மாநிலத்திலிருந்து அறிமுகப்படுத்துவதோ அல்லது இப்போது ஓடக்கூடிய இந்த ரயிலின் சேவை நாட்களை அதிகரிப்பு செய்வதை பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை !!
தமிழ்நாட்டில் இருந்து பல ஊர்கள் இந்த ரயில் மூலம் நேரடியாக கோவா மாநிலத்துடன் இணைகிறது !! இதன் மூலம் சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ரயிலாகவும் இந்த ரயில் இருக்கிறது ......
வண்டி எண் : 17315 // 17316 ||•• வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி •
" வாராந்திர விரைவு வண்டி "
17315 || வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் திங்கட்கிழமை தோறும் காலை 08:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி வந்து சேர்கிறது
17316 || வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 3வது நாள் வியாழன் அதிகாலை 02:40 மணிக்கு வாஸ்கோடகாமா ரயில் நிலையம் சென்று சேருகிறது
நிறுத்தங்கள் :- மட்கான் சன்வெர்டாம்-சர்ச் குலேம் கோட்டை-ராக் லோண்டா தார்வாட் ஹுப்பாலி ஹாவேரி ராணிபென்னூர் தாவங்கேரே பிரூர் அர்சிகெரே திப்தூர் துமகுரு சிக்கா-பானவரா பானஸ்வாடி கிருஷ்ணராஜபுரம் பங்காருபேட்டை சேலம் ஈரோடு கரூர் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ......
ஆண்டுதோறும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆண்டு திருவிழா நடைபெறும் பொழுது மட்டும் கூடுதல் ரயில்கள் கோவா மாநிலத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வருகை புரிகிறது || அந்த காலத்தில் மட்டுமே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுகிறது தவிர மற்ற நாட்களில் இந்த ஒரு ரயில் மட்டுமே நேரடியாக கோவாவில் இருந்து உள்ளது .....
பெங்களூரில் இருந்து அதிக மக்கள் ரயில் மூலமாக வேளாங்கண்ணிக்கு வருகை புரிய நினைக்கின்றனர் :- ஆனால் அவர்களுக்கு நேரடி ரயில் என்பதே கிடையாது , ஒரு நாள் வரும் இந்த வாஸ்கோ எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ஒரே ஆப்ஷனாக இருக்கிறது !! மற்ற நாட்களில் மைசூரில் இருந்து கடலூர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி தஞ்சாவூர் வந்து அங்கிருந்து பிற போக்குவரத்து அல்லது இணைப்பு ரயில சேவையான காரைக்கால் டெமு ரயிலை பிடித்து நாகப்பட்டினம் வந்து சென்று வருகின்றனர் !! இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் அருகாமையில் இருக்கும் தஞ்சாவூர் ரயில் நிலையம் மட்டுமே பெங்களூருக்கு 
பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி அல்லது நாகப்பட்டினத்தை இணைக்கும் வகையில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பதே 2 மாநிலம் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது // ஒட்டுமொத்த டெல்டா பகுதியின் தேவையும் கடலூர் மைசூர் ரயிலிலேயே மட்டுமே பூர்த்தி அடைகிறது !! கூடுதலாக திருநள்ளாறு பெங்களூரு அல்லது வேளாங்கண்ணி பெங்களூர் இடையே தினசரி ரயில் சேவை தினமும் இயக்கப்பட்டால் அது அனைத்து பகுதி மக்களுக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் // குறிப்பாக திருச்சி பகுதி மக்களுக்கும் கூடுதல் ரயில் சேவை பெங்களூரு செல்வதற்கு கிடைக்கப்பெறும் !!
நன்றி இணையம்