"என் கடைசி மூச்சு உள்ள வரை பாரத மாதாவுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 May be an image of text

"என் கடைசி மூச்சு உள்ள வரை பாரத மாதாவுக்கு சேவை செய்வேன்"; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உருக்கம்...!
 
பாகிஸ்தான் நாட்டில் 7 ஆண்டுகள் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்து, அந்நாட்டு ராணுவத்தின் மிக முக்கியமான அணு சக்தி ரகசியங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் அஜித் தோவல்.
 
அங்குள்ளவர்கள் நம்பும் படியாக உருது மொழியைத் தாய்மொழியாகப் பேசி, தினமும் மசூதிக்குச் சென்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய நண்பராகப் பழகிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்தனை ரகசியங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்தார்.
 
எந்தவிதச் சந்தேகமும் இன்றி, அவர் பாகிஸ்தானின் ஒரு நிஜ குடிமகனாகவே அந்நாட்டு அதிகாரிகளால் பார்க்கப்பட்டது தான் அவரது உளவுத் திறமைக்கான சான்று
 
யாரும் எளிதில் நுழைய முடியாதபடி ​மிகவும் பாதுகாக்கப்பட்ட பாகிஸ்தானின் அணுசக்தி மையத்திற்கு வெளியே பிச்சைக்காரனாக வேடமிட்டு அமர்ந்து, அந்த அணுசக்தித் திட்டத்தின் அத்தனை ரகசியங்களையும் அவர் உலகிற்குத் தோலுரித்துக் காட்டினார். 
 
பாகிஸ்தானுக்கே தெரியாமல் மிக அமைதியாக இந்தியா திரும்பிய அவர், இன்று இந்தியாவின் மிக நீண்ட கால தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) தேசத்தைக் காத்து வருகிறார். 
 
81 வயதிலும், ப*யங்கரவா*த எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு, உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு தொடர்பான முக்கிய விஷயங்களில் தோவல் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 
அவர் வயதை கருத்தில் கொண்டு அவர் நலன் விரும்பிகளும் மருத்துவரும் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். 
 
ஆனால் அவரோ என் கடைசி மூச்சு உள்ளவரை பாரத மாதாவுக்கு சேவை செய்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். 
 
இந்த உணர்ச்சிப்பூர்வமான கூற்று, தற்போது சமூக ஊடகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் அவரது அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி வருகின்றனர். 
 
மக்களே! இது பற்றிய உங்க கருத்து என்ன..?