கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:22 PM | Best Blogger Tips
கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர்.

இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும்.

எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும். கண்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிவரும் கதிர்கள் தான் காரணம். எப்படியெனில் அந்த கதிர்கள் கண்களில் உள்ள நீரை வறட்சியடையச் செய்வதோடு, எரிச்சல், அரிப்பு, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

ஆகவே அப்போது கண்களை பாதுகாக்க, ஒருசில செயல்களை மேற்கொண்டு வந்தால், கண்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு தடுக்கலாம். அது என்னவென்று பார்ப்போமா...

ஒமேகா-3 :

ஃபேட்டி ஆசிட் நிறைய கண் மருத்துவர்கள் உணவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் பொதுவாக ஃபேட்டி ஆசிட்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. எனவே இந்த சத்துக்கள் அதிகம் உள்ள கடல் உணவுகளான் மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படுவதோடு, வயிற்றில் ஏற்படும் உப்புசமும் சரியாகும்.

கண்களை கழுவுதல்:

கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ரிலாக்ஸ் :

கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி சிறிது நேரம் உட்கார்ந்தால், கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.

இடைவேளை :

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

ரோஸ் வாட்டர் :

கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

தண்ணீர் :

அதிகமான தண்ணீர் குடித்தால், கண்களில் எந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம். ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.

நீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips

நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். பாடங்களை உங்களால் வேகமாக படிக்க முடிந்தால், நேரத்தையும், ஆற்றலையும் அதிக அளவில் சேமிக்க முடியும். உங்களுடைய தற்போதைய படிக்கும் வேகத்தை முதலில் அறிந்துக் கொண்டபின்தான் அதை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

நீங்கள் படிக்கும் வேகத்தை அறிவது எப்படி?

நிமிடத்திற்கு 250 முதல் 300 வார்த்தைகளை படிக்கும் திறமை நல்ல வேகம் எனலாம். ஆனால், அந்த வேகத்தைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்.

ஒரு புத்தகத்தில் உள்ள பக்கம் ஒன்றை எடுத்து அமைதியாகவும், வேகமாகவும் படிக்கவும். அதன் பொருளை புரிந்துகொள்ள அக்கறை காட்ட வேண்டாம். படிக்கத் தொடங்கும் முன் நேரத்தை குறித்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து நீங்கள் படித்திருக்கும் வார்த்தைகளை கூட்டிப் பார்க்கவும். அந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்தால் ஒரு நிமிடத்திற்கு நீங்கள் படிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை கிடைக்கும். அதுவே உங்கள் தற்போதைய வேகம். உதாரணமாக, நீங்கள் 5 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் படித்தீர்களானால் உங்களுடைய படிக்கும் வேகம் நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் ஆகும்.

கீழேகொடுக்கப்பட்டிருக்கும் முறைகளின் மூலம் இந்த படிக்கும் வேகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். இவை நல்ல பலன்களைத் தரும்.

* கண்ணாடி முறை (Mirror Technique)

* தலைகீழாகப் படிக்கும் முறை (Upside-down Technique)

* வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

1. கண்ணாடி முறை (Mirror Technique)

ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வேகமாகப் படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பிக்கவும். கண்ணாடியில் பிரதிபலிப்பதை படிக்கவும். அந்த பிரதிபலிக்கும் பக்கத்தை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் செய்யவும். ஐந்து முதல் ஆறே வாரங்களில் (கிட்டத்தட்ட 40 நாட்களில்) உங்கள் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

2. தலைகீழாகப் படிக்கும் முறை

வேகமாக ஒரு பக்கத்தை படிக்கவும். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அந்த பக்கத்தைத் தலைகீழாக மாற்றி மீண்டும் அந்த வரிகளின் மேல் ஆள்காட்டி விரலை (Index finger) வைத்துப் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலையில் 10 நிமிடமும், மாலையில் 10 நிமிடமும் குறைந்தது 40 நாட்கள் படிக்கவும்.

இந்த இரண்டு முறைகளால் நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

படிக்கும் வேகம் எப்படி அதிகரிக்கிறது?

கண்ணாடியில் பிரதிபலிக்கும் பக்கத்தை படிக்கும் போதும், தலைகீழாகப் படிக்கும் போதும், அது புது அனுபவம். மேலும், படிப்பதற்குக் கடினமாக இருப்பதால் அவற்றைப் படிக்கின்ற போது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

இப்படி 10 நிமிடங்கள் படித்த பின், அதிக கவனம் செலுத்தி படிக்க உங்கள் மனம் பழக்கமாகி விடும். அதன் மூலம் உங்களால் படிப்பில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.

பின்னர் அந்த பாடப்பகுதியை நீங்கள் நேராக படிக்கும் போது நன்றாகப் பழக்கப்பட்ட நிலையில் அமைந்திருப்பதால் படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம், உங்களால் அதிவேகமாகப் படிக்க முடியும்.

இம்முறைகளில் பயிற்சியெடுக்கும் போது, படிக்கும் வேகமே முக்கியம். அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாடத்தைப் புரிந்துகொள்ளாமல், படிக்கும் வேகம் அதிகரிக்கும் போது, நீங்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் வேகமும் தானாகவே அதிகரிக்கும்.

3. வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

எளிமையான இப்பயிற்சியை சுலபமாக பின்பற்றலாம். இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பகுதியின் வார்த்தைகளை மட்டுமே வேகமாகப் படிக்க வேண்டுமெயொழிய அப்பகுதியின் அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதாவது, ஒவ்வொரு வார்த்தையை மட்டுமே பார்த்து அடையாளங்கண்டு பின் அடுத்த வார்த்தையைப் பார்க்க வேண்டும்.

இந்த பயிற்சி முறையில், நீங்கள் படிக்கும் பகுதியை சரியாகப் படிப்பதில்லை. ஆனால் உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள்.

இது எப்படி வேலை செய்கிறது!

நீங்கள் அடையாளம் காணும் வார்த்தைகள் உங்களுடைய மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது, அந்த பாடப்பகுதியை படங்களாக படித்திருக்கிறீர்கள். அப்படி முறையாகப் பயிற்சி செய்யும்போது, ஒரு நிலையில் 'நீடுவாழ்கநிறைமகிழ்வெய்துக' போன்ற மிகப்பெரிய வார்த்தையையும் உங்களால் உடனடியாக அடையாளம் காண முடியும். இந்த திறமை இயல்பாகவே உங்களுடைய படிக்கும் ஆற்றலை மிகவும் அதிகரிக்கும்.

இப்பயிற்சிகள் ஆதாரபூர்வமானதா?

முன்பு விளக்கப்பட்டது போல், முதலில், உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். பின்னர் கண்ணாடி முறை, தலைகீழாகப் படிக்கும் முறை, மற்றும் வார்த்தை ஓட்டமுறை ஆகிய பயிற்சி முறைகள் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவும். இப்போது மீண்டும் உங்கள் படிக்கும் வேகத்தை கண்டுபிடிக்கவும். உங்களால் நம்பமுடியாத அளவு படிக்கும் வேகம் அதிகரித்திருக்கும். இதுவே நீங்கள் பயன் அடைந்ததற்கான ஆதாரம். இந்த பயிற்சி முறைகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் பயிற்சி செய்யவும். அதனால், உங்களுடைய நேரமும், சக்தியும் பெருமளவு மிச்சமாகும். தேர்வு நேரத்தில் ஏற்படும் பரபரப்பும், மன அழுத்தமும் நிச்சயமாகக் குறையும். மேலும், இரவும் பகலும் புத்தகங்களோடு போராட வேண்டிய அவசியமும் இருக்காது.

வேகமாக எழுதும் முறை:

ஒரு மாணவர் அறிவு கூர்மையுடன், தேர்வுக்குத் தன்னை நன்றாகத் தயார்படுத்தி இருக்கலாம். தேர்வில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் நன்றாக தெரிந்தும் இருக்கலாம். ஆனாலும், வினாத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் 2-3 மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்கவில்லை என்றால், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, ஒரு மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக அவசியமாகிறது.

இந்த பயிற்சியின் விளைவு!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி முறை மிகவும் பயனளிப்பதாகும். தேர்வு நாட்களுக்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன் பயிற்சியை செய்யத் தொடங்கினால்கூட நல்ல பலன்களை காண முடியும். இருப்பினும், மிகச்சிறந்த பலன்களைப் பெற 40 நாட்கள் பயிற்சி செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

பயிற்சி முறை:

இப்பயிற்சிக்கு ஏதாவது ஒரு பகுதியை உங்களுடைய இயல்பான வேகத்தில் 5 நிமிட நேரம் எழுதவும். அதே பகுதியை 4 நிமிடங்களுக்குள்ளும், மீண்டும் 3 நிமிடங்களுக்குள்ளும் எழுதவும். மொத்தமாக 12 நிமிடங்கள் எழுதியிருக்கிறீர்கள். இப்படி தினமும் இருமுறை எழுதிப் பயிற்சி செய்யவும். இவ்விதம் தேர்வுக்கு 40 நாட்கள் முன்பே பயிற்சி செய்தால், உறுதியாக பெரும் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.

இது எப்படி செயல்படுகிறது!

5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 4 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது மிகவும் கடினமான ஒரு செயல் அல்ல. அதே பகுதியை 3 நிமிடத்திற்குள் முடிப்பது கொஞ்சம் சவாலானது. ஆனாலும், 3 நிமிடம் மட்டுமே என்பதால் உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.- (குழந்தை வளர்ப்பு:வேகமாகப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகள்!
பேராசிரியர் Dr. J.N. ரெட்டி)நன்றி : தமிழன் வள்ளுவம்

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips
கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல்.நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips

 how protect your marriage from adultery
 
சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளான தூண்டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் அது நம்மை பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம்.ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி
 How Help Your Child Overcome Fears
 
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு 'பூச்சாண்டி' காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips
அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?

அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜி பிரச்சினையே இல்லை. பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட அலர்ஜியாக இருக்கலாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.

அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி…

அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

அலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

உணவே மருந்து

@[282030625230450:274:உணவே மருந்து]