திருக்கோளக்குடி என்ற ஊருக்கு ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips
பழமை வாய்ந்த திருக்கோளபுரீசர் கோவில்- புதுக்கோட்டை | Thirukolakudi  Thirukolapuresarar Temple
ஒவ்வொருவரும் கண்டிப்பாக திருக்கோளக்குடி என்ற ஊருக்கு செல்ல வேண்டும்.
 
பௌர்ணமி அல்லது அமாவாசை அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாள் அன்று பகலில் அல்லது இரவில் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
 திருக்கோளக்குடி திருக்கோளபுரீசர் ஆலயம் சிவகங்கை /Thirukolakudi  Thirukolanathar Temple Sivagangai
அங்கே மலை மேலே 3 சிவன் கோயில்கள் உள்ளன.
 
மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோயிலும்
மலையில் இருந்து நடந்து செல்லும் பொழுது பாதி துரத்தில் ஒரு சிவன் கோயிலும்
மலை உச்சியில் இன்னொரு சிவன் கோயிலும் இருக்கின்றது .
 சிவனுக்காகத் தேன் சொட்டும் தேனீக்கள் | சிவனுக்காகத் தேன் சொட்டும்  தேனீக்கள் - hindutamil.in
ராமாயண காலத்தை விட மிகவும் பழமையான சிவாலயம் இந்த திருக்கோயில் திருக்கோளக்குடி சிவாலயம் ஆகும் . 
 
2023 ஆம் ஆண்டு அன்று ராமாயணம் நடைபெற்று 17, 55 , 124 ஆண்டுகள் ஆகின்றன அதைவிட மிகவும் பழமையானது இந்த திருக்கோளக்கூடிய சிவாலயம் ஆகும்.
 
இந்த திருக்கோளக்குடி சிவாலயத்தின் வயது குறைந்தது 27 லட்சம் வருடங்கள் இருக்கும் என்று சித்தர்கள் நமக்கு உரைக்கிறார்கள்.
 
ராமாயணத்தில் ராவணன் தன்னுடைய அரியணை மீது அமரும் முன்பாக 9 படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்று அமர்வது வழக்கம்.
 
தன்னுடைய சிவ பக்தியால் நவகிரகங்கள் ஒன்பது பேரையும் அந்த ஒன்பது படிக்கட்டுகளில் ஒவ்வொருவராக குப்புற படுக்க வைத்து அவர்கள் முதுகை மிதித்தவாறு ஒன்பது படிகளில் ஏறிச் சென்று அரியணையில் அமர்வது வழக்கம். அந்த அளவுக்கு பல கோடி யுகங்களாக சிவ பூஜை செய்து ,தவம் செய்து யாகங்கள் நடத்தி மிகவும் பிரம்மாண்டமான வரங்களை ஈசனிடமிருந்து ராவணன் பெற்று இருந்தான்.
 
திருக்கோளக்குடியில் உள்ள இந்த மூன்று சிவாலயங்களை ஒன்பது கிரகங்கள் வழிபட்டு உள்ளன.
 
சிவாலயத்தை மலை அடிவாரத்தில் உள்ள சிவாலயத்தை மூன்று கிரகங்களும்
மலையில் பாதி தூரம் சென்றதும் உள்ள சிவாலயத்தை அடுத்த மூன்று கிரகங்களும்
மலை உச்சியில் உள்ள சிவாலயத்தை அடுத்த மூன்று கிரகங்களும் முறைப்படி வழிபட்டு வந்தன.
 குற்றம் புரிந்தவரை திருந்தச் செய்யும் திருக்கோளபுரீசர் கோவில் -  lightuptemples
27 நட்சத்திரங்கள் ஒன்பது கிரகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன!!!
 
ஒவ்வொரு கிரகமும் தனக்குரிய மூன்று நட்சத்திர மண்டலங்களை திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு தான் பெற்றுக் கொண்டன.
அசுவினி ,மகம் ,மூலம் நட்சத்திர மண்டலங்களை கேது பகவான் திருக்கோளக்குடியில் சிவ வழிபாடு செய்து பெற்றுக் கொண்டார்!!!
 
பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திர மண்டலங்களை சுக்கிர பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபாடு செய்து பெற்றுக்கொண்டார்!!!
 
கார்த்திகை, உத்திரம் ,உத்திராடம் நட்சத்திரம் மண்டலங்களை சூரிய பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
ரோகிணி, அஸ்தம் , சிராவணம் நட்சத்திர மண்டலங்களை சந்திர பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
மிருகசீரிடம் ,சித்திரை ,அவிட்டம் நட்சத்திரம் மண்டலங்களை செவ்வாய் பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
திருவாதிரை ,சுவாதி, சதயம் நட்சத்திர மண்டலங்களை ராகு பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
புனர்பூசம் ,விசாகம் ,பூரட்டாதி நட்சத்திர மண்டலங்களை குருபகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர மண்டலங்களை சனி பகவான் திருக்கோளக்குடி ஈசனின் வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி நட்சத்திர மண்டலங்களை புதன் பகவான் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு பெற்றுக் கொண்டார்!!!
 
ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களையும் திருக்கோளக்குடி பைரவர் முன்னிலையில் நவகிரக நாயகர்கள் திருக்கோளக்குடி ஈசனிடம் இருந்து பெற்றார்கள்!!!
 
27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 9 கிரகங்கள் அனைத்தும் கால தேவன் என்ற காலபைரவர் பொறுப்பில் ஈசன் சார்பாக காலபைரவர் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்.
நம்முடைய வலது கண் மற்றும் மூளையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் அனைத்தும் சூரிய பகவானின் சக்தியால் இயங்குகிறது;
இடது கண் சந்திர பகவானின் சக்தியால் இயங்குகிறது ;
 
நரம்பு மண்டலம் புதபகவானின் சக்தியால் இயங்குகிறது;
 
எலும்பு மண்டலம் சனி பகவானின் சக்தியால் இயங்குகிறது;
 
சதை மண்டலம் சுக்கிர பகவான் சக்தியால் இயங்குகிறது;
 
இருதயம் குரு பகவான் சக்தியால் இயங்குகிறது;
பிறப்புறுப்பு ராகு பகவானின் சக்தியால் இயங்குகிறது;
 
மல துவாரமும் அதற்கு ஒரு இன்ச் உள்ளே இருக்கும்
 
மூலாதாரமும் கேது பகவானின் சக்தியால் இயங்குகிறது.
 
இதனால்,நாம் வாழ்ந்து வரும் பூமியில் நவக்கிரக சக்திகள் மிகுந்த மலைத்தலமாக திருக்கோளக்குடி இயங்குகிறது.
 
ராவணனின் அக்கிரமத்தால் அவனுடைய அரியணை படிக்கட்டில் குறிப்பிட்ட சில காலங்கள் வரை நவ கிரகங்கள் குப்புறப்படுக்கும் இழிநிலை உண்டானது.
 
அதனால் ஒன்பது கிரகங்களும் தன்னுடைய 99 சத கிரக காரகத்துவத்தை இந்த திருக்கோளக்குடி மலைப்பகுதியில் மறைமுகமாக பதித்துவிட்டு சென்றனர்.
 
அதனால் பூலோக மக்களின் கரும பரிபாலனத்தை குறைவின்றி நவக்கிரகங்கள் செய்து வந்தார்கள்.
 
உங்கள் பிறந்த தமிழ் மாதம் அன்று உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும்.
 
அந்த நாளில் நீங்கள் பிறந்த நேரம் வரக்கூடிய நேரத்தில் திருக்கோளக்குடி ஈசனை வழிபட்டு கிரிவலம் புறப்பட வேண்டும் .
 
24 மணி நேரம் திருக்கோளக்குடியில் இருக்க வேண்டும்.
 
இப்படி ஆண்டுக்கு ஒரு முறை செய்வதன் மூலமாக உங்களுக்கு பாதகாதிபதி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் வரும்போது அதற்குரிய நோய் அல்லது கடன் அல்லது அவமானம் அல்லது விபத்து பெருமளவு வராமல் மிகச்சிறிய அளவில் குறைந்து விடும்.
 
நவக்கிரக நாயகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து அவர்கள் தரவேண்டிய மிகப் பெரிய அளவிலான துன்பத்தை மிகச் சிறிய அளவில் குறைத்து விடுவார்கள்!!! 
 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷