தோற்ற கனவான்கள்......!!!! நாங்கள் எங்கே?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:07 PM | Best Blogger Tips

May be an image of 1 person, studying and text

குடும்பத்துடன் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது

 

(நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார்

 

 அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம் வாசி, குடிகாரர் என்ற ரீதியில் இருந்தது.

 

டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார்

 

எல்லோர் பார்வையும் அவரிடம் டிக்கெட் இருக்காது என்ற ரீதியில் தோன்றியது. அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்தார் டிக்கெட்டை ..  

 மனிதனும் மனமும் – Suvarnabumi.com

அப்போதும் நம்பிக்கை அற்ற நிலையில் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார் என்ற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ்யா என்றார்.  

 

அவர் இந்த வண்டிக்குத் தான்யா டிக்கெட் எடுத்திருக்கேன் எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார்.  

 

அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது.

 

க்ளைமாக்ஸே இனிமேல் தான் ..

 

அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து பையை பிரித்தார். அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையில் இருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார் என்ற எதிர்பார்ப்பு.

 80+ Railway Man Stock Illustrations, Royalty-Free Vector Graphics & Clip Art  - iStock | Railwayman

அவர் பையில் கையை விட்டு எடுத்தது ஒரு புத்தகத்தை. எடுத்தவர் புத்தகத்தினை பிரித்து அவர் முன்பு படித்து விட்டு நிறுத்தியிருந்த பகுதியினை உறுதி செய்து கொண்டு யாரையும் சட்டை செய்யாமல் படிக்கத் தொடங்கினார்.

 

அவர் படித்த புத்தகம் என்ன தெரியுமா?

 மனமும் மனிதனும் - தமிழருவி மணியன் - கற்பகம் புத்தகாலயம் | panuval.com

" மனமும் மனிதனும் "

அனைவர் முகமும் " ஙே " !!!

 

பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே?  

 

தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எங்கே?

 

நம்மை வென்றவரின் புகைப்படம்

 May be an image of 1 person, studying and text

நாம் தோற்றவரின் புகைபடம் பாருங்க...

80+ Railway Man Stock Illustrations, Royalty-Free Vector Graphics & Clip Art  - iStock | Railwayman 

✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*

 ✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*

நன்றி இணையம்