வாழ்ந்து காட்ட வேண்டும் ❗

மணக்கால் அய்யம்பேட்டை | 2:34 PM | Best Blogger Tips
Image result for வாழ்ந்து காட்ட வேண்டும் ❗
பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது.
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.
மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன.
சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.
இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோhttps://www.facebook.com/images/emoji.php/v5/f4c/1/16/2753.png
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.
அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?
அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?
அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?
அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?
மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!
இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது.
ஆகவே, ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒருசான்றாக.
(படித்ததில் பிடித்தது)
https://www.facebook.com/images/emoji.php/v5/f40/1/16/261d.png https://www.facebook.com/images/emoji.php/v5/f80/1/16/1f64f.png🙏
நன்றி இணையம்