இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
இந்தியர்களின் முதல் பல்கலைக் கழகம் அழிக்கப்பட்ட கதை!
அன்னதானம் பெற்ற உணவை சாப்பிடும் முறை!
மகாபாரதம் கிளைக்கதைகள்
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார்.
தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.
அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார்.
தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார்.
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள்.
அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.
துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்?
இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?
இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள்.
யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.
பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார்.
திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது.
அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.
துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன்.
எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான்.
ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல.
சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.
அவன் வழங்கிய உணவினை உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள்.
இதற்கு சல்லியனும் கர்ணனும் நானும் உதாரணங்கள்.
ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.
நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது.
அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்.
ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது.
அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன.
இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.
எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன் என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.
குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.
குடும்பவாழ்வில் புரிந்துகொள்ளுதல்...
தன் கணவனும்,கணவரின் நண்பரும் சாப்பிட அமர்கிறார்கள்.
அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.
மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள்.
வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும்.
நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது!
அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...'என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.
கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு'என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!
இந்தக் கதையில் நாம் பார்த்த இரு மனங்களின் புரிந்துகொள்ளுதல் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா! இந்த புரிதல் இல்லாத குடும்பவாழ்வில் எவ்வளவு ஆசீர்வாதங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்கவே இருக்காது...
குவைத்தில் நடந்த ........? இந்திய அரசின் இன்னொரு முகத்தை
குவைத்தில் நடந்த பெரும் கொடும் தீ விபத்து மாபெரும் சோகம் என்றாலும் அது இந்திய அரசின் இன்னொரு முகத்தை காட்டியிருக்கின்றது
குவைத் செலவளமிக்க நாடு என்பதால் எல்லா நாட்டவரும் பணிபுரிவார்கள், அதில்தான் இந்தியர்களும் உன்டு
கடந்த விய்ழகிழமை அந்த பெரும் தீ எற்பட்டது என்றதும் இந்தியா இதுவரை இல்லா அளவு களமிறங்க்கிற்று என்கின்றன குவை செய்திகள்
இம்மாதிரி எதிர்பாரா ஆபத்துக்களில் உடனே அனுப்ப இந்திய ராணுவ விமானமும் மருத்துவர்களும்தான் தயர் நிலையில் இருப்பார்கள் , இதர மருத்துவர்களை திரட்ட நேரமாகும்
இதனால் இந்தியா இந்திய ராணுவ மருத்துவர்கள், மீட்பு குழுக்கள் மருந்துகள் இதர உபகரணங்களை குவைத்தில் குவித்தது
சில மணி நேரத்துக்குள் இந்திய அரசு குவித்த நடவடிக்கைகளை கண்டு குவைத் அரசாங்கம் மட்டுமல்ல அங்கிருக்கும் இதர நாட்டு பணியாளர்களும் மிரண்டே போனார்கள்
கவனித்திருக்கலாம், நடைமுறை சிக்கலை நொடியில் முடித்து இறந்தோர் உடலை இந்திய ராணுவ விமானங்களே இரு நாட்களில் கொண்டுவந்தது
அங்கு மிட்பு பணிகளும் காயமுற்றோர்க்கு சிகிச்சையும் இழந்த ஆவணங்களுக்கு மாற்றும் உடனடியாக செய்யபட்டிருக்கின்றன
இது அரபுலகில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் ஒரு திருப்பம், உலகம் கண்களை உயர்த்தி பார்க்கின்றது
உலக அரங்கில் இதெல்லாம் அமெரிக்கா மட்டும் செய்யும், இஸ்ரேல் பிரிட்டன் போன்ற சில நாடுகளே செய்யும், மற்ற நாடுகளெல்லாம் பெரிதாக செய்யமுடியாது
காரணம் என்னதான் தன் நாட்டு அந்நிய தொழிலாளர்க்கு ஆபத்து என்றாலும் அவர்கள் சம்பத்தபட்ட விமானங்களை, அதுவும் ராணுவ விமானங்களை இன்னொரு நாடு அனுமதிக்காது
இதெல்லாம் இறையாண்மை உள்ளிட்ட பல சிக்கல்களை கொண்டது, அதை மீற சர்வதேச சட்டத்தால் முடியாது
இந்தியா இதை சாதித்திருக்கின்றது, தன் குடிமக்களை காக்க பெரிய சக்தி கொண்ட நாடு என்பதை அது மோடி அரசில் பல இடங்களில் நிரூபித்தது
உக்ரைனில் நிரூபித்தது, ஆப்ரிக்காவில் நிருபித்தது, இப்போது குவைத்திலும் உலகின் சக்திவாய்ந்த நாடு என்பதை காட்டிவிட்டது
சரி, இங்கு ஏன் வழக்கம் போல் திமுக ஸ்டிக்கர் ஒட்டவில்லை?
களமிறங்கியது இந்திய ராணுவம் TV பயன்படுத்தபட்டது இந்திய ராணுவ விமானங்கள்,
அவரவர் வினைப்பயன்...
ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள்.
வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது.
அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயது பாலகனை உணவூட்டி உறங்க வைத்து விட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண், தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள்.
அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்கு மன்றாடுகிறான்.
தரையில் விழுந்து அழுதுப் புலம்புகிறாள் அவள்.
கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான்.
சுபத்ரை, நம் குழந்தையைத் தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன்.
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை.
இப்பாம்பைக் கொல்லாவிட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன்.
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது.
ஆனால், துஷ்டப் பிராணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் அல்லவா?
இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது;
மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள்.
நீ கொல்வேன் என்று அடம்பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார்.
இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள்.
நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம்.
உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையைக் கடிக்க வேண்டியதாயிற்று.
இதில் என் தவறு எதுவுமில்லை என்றது.
யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான்.
குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.
நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான்.
பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை.
காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, எமதர்மன் அவன் முன் தோன்றினான்.
இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? நான் காரணமில்லை, என்னை பகவான் ஏவினார்..
நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான்.
குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன்.
உன்னை ஏவிய அந்த பகவான் யார்?
ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான்.
எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன்.
பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி.
பாம்பு கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி.
அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன்.
எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள்.
நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன்.
வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து.
அது அவனைத் தீண்டிவிட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள்.
வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான்.
இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்.
பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை?
குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை?
ஆனால் உன்னைக் காப்பாற்றிவிட்டாள்.
அதற்கு என்ன? காரணம்?
பாம்பு கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி.
பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி.
அது அவரவர் வினைப்பயன் தான் என்றார்.
பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியம் √