மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

மரண சடங்குகளில் பானையில் ஓட்டை போட்டு உடைப்பது எதற்கு?

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

நந்தவனமாகிய இந்த உலகத்தில் ஒருவன் நாலு + ஆறு = பத்து மாதம் இறைவனிடம் வேண்டி பிறக்கிறான். பிறக்கும் போது தோண்டி என்கிற உடலை உயிராகிய ஜீவனுடன் இறைவனிடமிருந்து பெற்று வருகிறான். மனமே தனக்கு குரு என்று நினைக்காமல் ( இங்கு மனம் என்பது நீங்கள் நினைக்கும் மனம் அல்ல) உலகில் கூத்தாடி கூத்தாடி, தன்னுள் உள்ள இறைவனையும் மறந்து, ஜீவனையும் உடலையும் நஷ்டப்படுத்தி மண்ணுக்குள் மக்கி போகிறான்.

இதையே தோண்டியை போட்டுடைத்தாண்டி என்று கடுவெளிச் சித்தர் கூறுகிறார். இதை குறியிட்டு தான் மரண சடங்குகளில் முதலில் பானையில் ஓட்டை போடுகிறார்கள். அது, இவன் ஜீவனாகிய அந்த வித்து ஜலமாக வெளி வந்ததை குறிக்கிறது. கடைசியாக அந்த பானையை போட்டு உடைப்பார்கள். இது, இவன் பெற்று வந்த உயிர் மற்றும் உடலை உடைத்து நஷ்டப்படுத்திவிட்டான் என்பதை குறிக்கிறது. இந்த மண்பானையில் ஐம்பூதங்களும் அடங்கும் ... சரியாக யோசித்தால் புரியும்...

சடங்குகளின் மெய்ப்பொருளை அறிந்தால் மட்டுமே மரணம் எனும் தீயில் இருந்து தப்பிக்க முடியும்...

நமசிவாய நமசிவாய.