இந்தியர்களின் முதல் பல்கலைக் கழகம் அழிக்கப்பட்ட கதை!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:59 PM | Best Blogger Tips
 
800 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக இருந்தது நலந்தா பல்கலைக்கழகம்.உலகில் இருந்து பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே வந்தார்கள்.இங்கே கலை, மருத்துவம், கணிதம், வானவியல், அரசியல், போர் தந்திரம் என ஏராளமான பாடங்கள் எடுக்கப்பட்டது. நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி வழங்கிய பல்கலைக்கழகம் இன்று அழிந்து விட்டது. 
 
அதற்கான காரணங்கள் தெரியுமா
10000 மாணவர்கள் :
 
இந்த பல்கலைக்கழகத்தில் சேருவது அவ்வளவு சுலபமானது அல்ல, மாணவர்கள் மூன்று நிலை நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். மூன்றிலும் வெற்றி பேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்கும். 
 
கடுமையான விதிகள் பின்பற்றப்படும்.ஆரம்பத்தில் கணிதவியலாளர் ஆரியபட்டா இந்த பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். இங்கே 10000 மாணவர்கள் வரை பயிலலாம். அவர்களுக்கு 2000 ஆசிரியர்கள் வரை இருந்தார்கள்
வீழ்ச்சி துவக்கம் :
 
முகலாயர்களின் வருகைக்குப் பின் நலந்தா பல்கலைக்கழகம் வீழ்ச்சியை எதிர்கொண்டது. பழைய கோப்புகளின் படி நலந்தா பல்கலைக்கழகம் மூன்று முறை அழிக்கப்பட்டிருக்கிறது.
முதல் முறை :
நலந்தா பல்கலைக்கழகத்தை கி.பி. 455 காலகட்டத்தில் மிஹிரகுல்லா என்பவர் அழித்தார். ஏழாம் நூற்றாண்டில் கௌடாக்கள் மீண்டும் அழித்தனர். அதன் பின்னர் வந்த புத்த அரசரான ஹர்சவர்தனா இந்த பல்கலைக்கழகத்திற்கு புத்துயிர் கொடுத்தார்.
மூன்றாம் முறை :
மூன்றாம் முறை நடத்தப்பட்ட தாக்குதல் 1193 துருக்கிய அரசரான பக்தியர் கில்ஜியால் நிகழ்த்தப்பட்டது. இப்படி பல நூற்றாண்டுகளாக சிறிது சிறதாக இந்தியர்களின் அறிவை வளர்த்த பொக்கிஷமான நலந்தா பல்கலைக்கழகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு அரசர் அழித்தால் அடுத்து வருகிறவர்களால் சீரமைக்கப்பட்டது காலப்போக்கில் சீரமைப்பு பணிகளும் நின்று போனது.
கில்ஜியின் காரணங்கள் :
பக்தியர் கில்ஜி உடல்நலமில்லாமல் இருந்தபோது நலந்தா பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றால் தான் குணமாகும் என்று அறிவுறுத்தப்பட்டது.அப்போது நலந்தா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் தலைவராக இருந்தவர் ராகுல் ஸ்ரீ பத்ரா.
கடவுள் மறுப்பாளர் :
கில்ஜி தன் மதத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர். இதனால் கடவுள் மறுப்பாளரான ஸ்ரீ பத்ராவிடம் சிகிச்சை பெற கில்ஜி விரும்பவில்லை.ஆனால் வேறுவழியின்றி, பத்ரா அழைக்கப்பட்டார்.
சவால் : சிகிச்சையளிக்க வந்த பத்ராவிடம் கில்ஜி ஒரு சவாலை முன்வைத்தார். அதில், எந்த மருத்துகளையும் கொடுக்காமல் என்னை குணப்படுத்த வேண்டும் என்பது தான் அது. சவாலை ஏற்றுக் கொண்ட பத்ரா வெற்றியும் கண்டார்!
பொறாமை கொண்ட கில்ஜி :
தன் நாட்டில் இருப்பவர்களைக் காட்டிலும் இங்கேயிருக்கும் மருத்துவர்கள் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பது கில்ஜிக்கு பொறாமையை உண்டாக்கியது. பல்கலைகழகத்தை கைப்பற்ற நினைத்தார். ஆனால் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் அதனை அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். பல்கலைக்கழகத்தின் ஆணி வேராக இருந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார் ஏராளமான மருத்துவக் குறிப்புகள் முற்றிலுமாக அழிந்த நாசமானது. நலந்தா பல்கலைக்கழகத்தில் பரவிய தீயை அணைக்க மூன்று மாதங்களுக்கும் மேலானது.
இன்று... :
நலந்தா பல்கலைக்கழகத்தின் நினைவாக ஒரு பல்கலைக்கழகத்தை கட்டுவதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. இந்தியர்களின் அறிவுக்களஞ்சியமான பல்கலைக்கழகத்தை அழித்துவிட்டோம். தன்னுடைய ராஜ்ஜியம் வளர வேண்டும், தன்னுடைய மதக் கோட்பாடுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் அழிக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகத்தை இனி வரும் காலங்களிலாவது போற்றி பாதுகாக்க வேண்டும்.
 
பபி
மீள்பதிவு
 No photo description available.