ஊரெல்லாம் ஊர்கள்...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips
ஊரெல்லாம் ஊர்கள்...!!!
இப்ப எல்லோரும் தெரிஞ்சுங்க!

‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருப்பது போல் ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருக்கு. (இதைப் பற்றி எழுதினால்
‘சிக்கல்’ வந்துடுமோன்னு தான் எழுதல ( ஹி..ஹி..!! )

இந்த ஊர்களை சுற்றி இருக்கும் ஊர் பெயர்களை கவனியுங்கள்.
"மஞ்சக்கொல்லை", "கூத்தூர்", "வேட்டைக்காரன் இருப்பு"
"தலைஞாயிறு" பெயர்கள் எப்படி?? (அவைகள் எல்லாமே நாகை மாவட்டத்தில் வருகிறது) "வாழ்க்கை", "வாழ வந்தான்" இப்படி
பெயர் கொண்ட ஊர்களும் ..!! (இவைகள் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்றன)

அது போலவே -

'ஏர்வாடி' என்ற ஊர் பெயர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒன்னு இருக்கு, ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு. (அந்த 'ஏர்வாடி’யில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இந்த ‘ஏர்வாடி’யில் என்ன விசேஷம் என்று எனக்கு தெரியலைங்க!)

‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒரு 'குற்றாலம்' போல், ‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'குத்தாலம்' இருக்கு. இந்த ‘குத்தாலத்தில்’ “அந்த” குற்றாலம் மாதிரி எந்த விசேஷமும் கிடையாது.

"பாளையம்கோட்டை" என்ற ஊர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் மட்டுமில்லை, ‘கடலூர்’ மாவட்டத்திலும் ஒன்னு இருக்கு.
(அதில் ஃபேமஸ் ஜெயில், இதில் என்னவென்று தெரியல!)

"தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)

"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவள்ளூர்' மாவட்டத்திலும் ஒன்றும் இருக்கு .

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும், ‘திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா)
“பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

"சாத்தனூர்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) ‘கொல்லம்’ (Quilon) மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"திருபுவனம்" என்ற ஊர் பெயர் (பட்டுப் புடவைக்கு ஃபேமஸ்)
‘தஞ்சை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும் இருக்கு.

"திருமுல்லை வாசல்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் இருப்பது போல் ‘சென்னையில்’ "திருமுல்லை வாயில்" என்று ஒரு ஊர் இருக்கு !!

“திருப்பத்தூர்” என்ற ஊர் ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘வேலூர்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"முதுகுளத்தூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு.

"வளையப்பட்டி" என்ற ஊர் ‘நாமக்கல்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"ஆலங்குடி" என்ற ஊர் 'திருவாரூர்' மாவட்டத்தில்
ஒன்றும், ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

‘அரியலூர்’ முன்பு ‘பெரம்பலூர்’ மாவட்டத்தில் இணைந்திருந்தது. தற்பொழுது ‘அரியலூர்’ தனி மாவட்டமானாலும், ‘அரியலூர்’ என்ற ஊர் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு!

"அத்தானி" என்ற ஊர் 'ஈரோடு' மாவட்டத்தில் ஒன்றும்,
'புதுக்கோட்டை' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'திருச்சூர்'
மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'எர்ணாகுளம் ' மாவட்டத்தில்
ஒன்றும், (கர்நாடகா) 'பெல்காம்' மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

'கொத்தமங்கலம்' என்ற ஊர் 'புதுக்கோட்டை' மாவட்டத்தில் இருப்பது போல், (கேரளா) 'எர்ணாகுளம்' மாவட்டத்தில் "கோதமங்கலம்" என்ற ஊர் இருக்கு! ஆங்கிலத்தில் இரண்டு ஊருக்குமே (KOTHAMANGALAM) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

'புதுக்கோட்டை' மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள
ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு
ஊரின் பெயர் "ஆளப்பிறந்தான்".

(கேரளா) 'எர்ணாகுளத்தில்' 'மட்டன்சேரி' என்ற ஒரு ஊர் இருக்கு. அது எந்த வகை 'மட்டன்' என்று நமக்கு தெரியாதுங்க!

‘கேரளாவில்’ "இடுக்கி" என்று ஒரு மாவட்டமிருக்கு. (இதில் யார் யாரை தூக்கி இடுப்பில் “இடுக்கி”க் கொள்வார்கள் என்று நமக்கு தெரியாதுங்க!!)

(கேரளா) ‘கொல்லத்தில்’ "புனலூர்" என்ற ஊர் இருக்கு. (இது நாம யூஸ் பண்ணும் 'புனல்' அல்ல!!)

(கேரளா) கோட்டயத்தில் "நாலு கோடி" என்று ஒரு ஊர் இருக்கு!!

'திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் 'படுக்க பத்து!'

(கேரளா) "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "தடியூர்" (இங்கே யாரும் மெல்லிசாக இருக்க மாட்டாங்களோ?)

"கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்", "எப்போதும் வென்றான்" இவைகள் எல்லாமே ஊர்கள் பேர் தாங்க!!

'சென்னையில்' "சாலி கிராமம்" இருப்பது போல், 'சிவகங்கை' மாவட்டத்தில் "சாலை கிராமம்" என்ற ஊர் இருக்கு!

இப்படி இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களில் ஒரே ஊர்களின்
பெயர்கள் இருப்பது போல்......

இன்னுமிருக்கு .....!!நன்றி : "ஆஹா பக்கங்கள்"


புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips

புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்...புதன் பெருமாளை குறிக்கும் கிரகம் ஆகும்...சுக்கிரனுக்கு மகாலட்சுமி என்பதை போல...கன்னி ராசி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி என்பதால் ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம்...

...
மேலும் உடல் வெப்ப நிலையும் அதிகரிக்கும்..பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்...இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும்...

பரவாயில்லைங்க.. நான் ஜீரணத்துக்கு ரசம் சாப்பிட்டுகிறேன்னாலும் ஒண்ணும் வேலைக்காகாது..அந்தளவு தொந்தரவு செய்யும் காலம் இது...அஜீரணம் இருப்பின் கோபம் அதிகரிக்கும்,காமம் அதிகரிக்கும்,சோம்பல்,மறதி,சலிப்பு அதிகரிக்கும் எந்த வேலையும் உருப்படியா முடியாது...பித்தம் அதிகரித்து வாதம் உண்டாக்கலாம்..மயக்கம் உண்டாக்கலாம் இதனால் துளசி தீர்த்தம் பெருமாள் கோயிலில் அடிக்கடி பருகுவதால் பித்தம் தீரும்..

சும்மாவே மட்டன் பிரையாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டா 2 நாளைக்கு மதமதன்னு இருக்கும்..வயித்துக்குள்ள கல்லை கட்டி போட்டாப்புல இருக்கும்..அதுவும் இய்றகையாகவே வயிறு பாதிப்புகளை தரும் மாதம்னா எச்சரிக்கையாத்தானே இருக்கணும்..அதுக்குத்தான் நம் முன்னோர்கள்..மலை ஏறு....பெருமாளை கும்பிடு...துளசி தீர்த்தம் குடி ந்னு சொல்லி வைச்சாங்க..கூட பெருமாள் அருளும் மிக பிரமதமா நமக்கு கிடைக்கும்...
See More

ஆயக்கலைகள் 64 பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips
ஆயக்கலைகள் 64 பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!!


நம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64 என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64

1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு (காவியம்);
18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39. காமம் (காம சாஸ்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51. உடற் (தேகப்) பயிற்சி;
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலு
இதில் உங்களுக்கு எத்தனை தெரியும்