ஊரெல்லாம் ஊர்கள்...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:28 | Best Blogger Tips
ஊரெல்லாம் ஊர்கள்...!!!
இப்ப எல்லோரும் தெரிஞ்சுங்க!

‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருப்பது போல் ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருக்கு. (இதைப் பற்றி எழுதினால்
‘சிக்கல்’ வந்துடுமோன்னு தான் எழுதல ( ஹி..ஹி..!! )

இந்த ஊர்களை சுற்றி இருக்கும் ஊர் பெயர்களை கவனியுங்கள்.
"மஞ்சக்கொல்லை", "கூத்தூர்", "வேட்டைக்காரன் இருப்பு"
"தலைஞாயிறு" பெயர்கள் எப்படி?? (அவைகள் எல்லாமே நாகை மாவட்டத்தில் வருகிறது) "வாழ்க்கை", "வாழ வந்தான்" இப்படி
பெயர் கொண்ட ஊர்களும் ..!! (இவைகள் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்றன)

அது போலவே -

'ஏர்வாடி' என்ற ஊர் பெயர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒன்னு இருக்கு, ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு. (அந்த 'ஏர்வாடி’யில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இந்த ‘ஏர்வாடி’யில் என்ன விசேஷம் என்று எனக்கு தெரியலைங்க!)

‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒரு 'குற்றாலம்' போல், ‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'குத்தாலம்' இருக்கு. இந்த ‘குத்தாலத்தில்’ “அந்த” குற்றாலம் மாதிரி எந்த விசேஷமும் கிடையாது.

"பாளையம்கோட்டை" என்ற ஊர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் மட்டுமில்லை, ‘கடலூர்’ மாவட்டத்திலும் ஒன்னு இருக்கு.
(அதில் ஃபேமஸ் ஜெயில், இதில் என்னவென்று தெரியல!)

"தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)

"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவள்ளூர்' மாவட்டத்திலும் ஒன்றும் இருக்கு .

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும், ‘திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா)
“பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

"சாத்தனூர்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) ‘கொல்லம்’ (Quilon) மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"திருபுவனம்" என்ற ஊர் பெயர் (பட்டுப் புடவைக்கு ஃபேமஸ்)
‘தஞ்சை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும் இருக்கு.

"திருமுல்லை வாசல்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் இருப்பது போல் ‘சென்னையில்’ "திருமுல்லை வாயில்" என்று ஒரு ஊர் இருக்கு !!

“திருப்பத்தூர்” என்ற ஊர் ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘வேலூர்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"முதுகுளத்தூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு.

"வளையப்பட்டி" என்ற ஊர் ‘நாமக்கல்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"ஆலங்குடி" என்ற ஊர் 'திருவாரூர்' மாவட்டத்தில்
ஒன்றும், ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

‘அரியலூர்’ முன்பு ‘பெரம்பலூர்’ மாவட்டத்தில் இணைந்திருந்தது. தற்பொழுது ‘அரியலூர்’ தனி மாவட்டமானாலும், ‘அரியலூர்’ என்ற ஊர் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு!

"அத்தானி" என்ற ஊர் 'ஈரோடு' மாவட்டத்தில் ஒன்றும்,
'புதுக்கோட்டை' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'திருச்சூர்'
மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'எர்ணாகுளம் ' மாவட்டத்தில்
ஒன்றும், (கர்நாடகா) 'பெல்காம்' மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

'கொத்தமங்கலம்' என்ற ஊர் 'புதுக்கோட்டை' மாவட்டத்தில் இருப்பது போல், (கேரளா) 'எர்ணாகுளம்' மாவட்டத்தில் "கோதமங்கலம்" என்ற ஊர் இருக்கு! ஆங்கிலத்தில் இரண்டு ஊருக்குமே (KOTHAMANGALAM) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

'புதுக்கோட்டை' மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள
ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு
ஊரின் பெயர் "ஆளப்பிறந்தான்".

(கேரளா) 'எர்ணாகுளத்தில்' 'மட்டன்சேரி' என்ற ஒரு ஊர் இருக்கு. அது எந்த வகை 'மட்டன்' என்று நமக்கு தெரியாதுங்க!

‘கேரளாவில்’ "இடுக்கி" என்று ஒரு மாவட்டமிருக்கு. (இதில் யார் யாரை தூக்கி இடுப்பில் “இடுக்கி”க் கொள்வார்கள் என்று நமக்கு தெரியாதுங்க!!)

(கேரளா) ‘கொல்லத்தில்’ "புனலூர்" என்ற ஊர் இருக்கு. (இது நாம யூஸ் பண்ணும் 'புனல்' அல்ல!!)

(கேரளா) கோட்டயத்தில் "நாலு கோடி" என்று ஒரு ஊர் இருக்கு!!

'திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் 'படுக்க பத்து!'

(கேரளா) "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "தடியூர்" (இங்கே யாரும் மெல்லிசாக இருக்க மாட்டாங்களோ?)

"கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்", "எப்போதும் வென்றான்" இவைகள் எல்லாமே ஊர்கள் பேர் தாங்க!!

'சென்னையில்' "சாலி கிராமம்" இருப்பது போல், 'சிவகங்கை' மாவட்டத்தில் "சாலை கிராமம்" என்ற ஊர் இருக்கு!

இப்படி இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களில் ஒரே ஊர்களின்
பெயர்கள் இருப்பது போல்......

இன்னுமிருக்கு .....!!



நன்றி : "ஆஹா பக்கங்கள்"