நிழல்கிரகங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:11 PM | Best Blogger Tips
நிழல்கிரகங்கள் க்கான பட முடிவு

கிரகங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் .இந்த ஐம்பதாம் பதிவில்#நிழல்கிரகங்களான ராகு பகவான் மற்றும் கேது பகவானால் உண்டாகும் யோகங்களை பார்ப்போம்.
வான்புகழ் கொண்ட வள்ளுவர் தமது திருக்குறளில்
"
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" -என தமது குறட்பாவில் அழகுபட எடுத்துரைப்பார்.
எனவே லொளகீக உலகிற்கு (இவ்வுலகம்) தேவையான பொருளை தருவதில் முன்னிலை வகிப்பது #ராகுபகவான் .இதேபோல அருள் உலகைத் தருவதில் (அவ்வுலகம் ) முக்கிய வகிப்பது #கேதுபகவான்ஆவார்.
தொடர்புடைய படம்
சாய கிரகங்கள் என்றும் நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படும் ராகு கேதுக்கள் ஒருவரது ஊழ்வினை பயனை எடுத்து விளக்கும் கர்மாவின் நாயகர்கள் ஆவார்.
மனித வாழ்வில் யோகங்களை பெறுவதில் முற்பிறவியில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்றார்போலதான் நவக்கிரகங்கள் யோகங்களை நமக்கு வாரிவழங்குகிறது.எனவேதான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அவர்கள் "ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்"என அழகுபட கூறியிருப்பார்.
ஒவ்வொறு மானிட உயிரிலும் தெய்வீக தன்மையும்,சாத்தானின் ஆட்டமும் அடங்கியிருக்கிறது.
இதில் ஒருவருக்கு தெய்வீக தன்மையை முழுமையாகவும்,முறையாகவும் வெளிப்படுத்தவும்,தூய்மையான முறையில் அதன் நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,பலருக்கு நன்முறையில் வழிகாட்டி ஆன்மீக பாதையில் அழைத்து செல்லும் ஞானகுருவாக விளங்கவும் #கேதுபகவானின் பங்கு அளப்பரியது ஆகும்.
ஒருவருக்கு லக்கனத்தில் கேது பகவான் அமரும்போது எதையும் என்ன நடக்கப் போகிறது முன்பே யூகிக்கும் தன்மையை ஒருவருக்கு வழங்குகிறது.
வாக்குஸ்தானங்களில் கேது பகவான் அமரும்போது வாக்கு பலிக்கிறது.சிலரை அருள் வாக்கு வழங்க செய்கிறது.ஒரு சிலரை புதன் பகவானும் பலப்பட்டிருக்கும் பட்சத்தில் புகழ்பெற்ற சோதிடராக ஒருவரை மாற்றிவிடுகிறது.
மூன்றாம் இடத்தில் அமரும் கேதுபகவான் சகோதர தோஷத்தை தருகிறது.மூன்றாம் இடத்தில் உள்ள கேதுபகவான் ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும்,எழுதுவதிலும் ஆர்வம் உருவாகிறது.
நான்காம் இடத்தில் உள்ள கேதுபகவான் கல்வி ஞானத்தை வழங்குகிறது.நான்காம் இடத்தில் கேதுபகவான் உடன் மாந்தி சேர்ந்து நான்கம் இடத்ததிபதியும் கெட்டுவிட்டில் குடியிருக்க சொந்த வீடு இல்லை.
ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமரும்போது வேத நூல்களை ஆகம விதிப்படி கற்கும் உயர்கல்வி ஞானத்தை அளிக்கிறது.
ஆறாமிடத்தில் உள்ள கேதுபகவான் எதிரிக்கும் பிடிக்ககூடிய நபராக திகழ்வர்.
ஏழாம் இடத்தில் உள்ள கேதுபகவான் களத்திரதோஷத்தினை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.
எட்டாம் இடத்தில் உள்ள கேதுபகவான் வம்பு,வழக்கு பிரச்சினைகள்,விஷபயம் போன்றவை தருவார்.
ஒன்பதாம் இடத்தில் உள்ள கேது பகவான் தந்தை வழி உறவுகளுக்கும்,சொத்தஇ ஆதரவும் கிடைப்பதில் சிக்கலை உண்டாக்குகிறார்.
பத்தாம் இடத்தில் உள்ள கேதுபகவான் ஆனமீக வாழ்வினை தருவார்.எலக்ட்ரிக்கல் ,மெடிக்கல்,மருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட வைக்கும்.
பதினோறம் இடம் உபஜெயஸ்தானம் என்பதால் சிறப்பினை தருவார்.
பணிரெண்டாமிடத்தில் அமையும் கேதுபகவான் ஒருவரை இளவயதில் பலவிதமான இன்னல்களை தந்து ,அந்த கஷ்டமான நேரங்களில் உறவுகளை பற்றியும்,வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன் மறுபிறப்பற்ற முக்திநிலையை ஒருவருக்கு வழங்குகிறது.
ஒருவன் உலகியல் வாழ்வில் உடலியல் இன்பங்களை அனுபவிப்பதற்கும்,அரசியலில் அதிகாரம் பெறுவதற்கும்,அரசாங்கத்தில் உயரிய பதவி வகிப்பதற்கும்,அயல்நாட்டு ஆதாயம் பெறுவதற்கும்,பங்குசந்தையில் ஈடுபட்டு பலன்பெறவும்,மாந்தீரிக செயலில் ஈடுபடவும்,அரசுக்கு விரோத நடவடிக்கைகளால் லாபம் பெறவுய்,அன்னியமொழி கற்பதற்கும்,அன்னியநாட்டு பெண்ணை திருமணம் செயதலும்,தன்னைவிட தரம்தாழ்ந்த மகளிரிடம் உறவு வைத்துக்கொள்ளுதலுக்கும் மற்றும் ஆடம்பர வாழ்வு மேற்கொள்ளவும் ராகுபகவானின் பங்கு குறிப்பிடத்தக்கது.
#ராகுபகவானால் ஏற்படும் யோகங்கள்;-
ராகுபகவான் ஒருவரது சாதகத்தில் எங்கு அமர்ந்தால் யோகபலனை செய்வார் என பார்க்கின்றபோது லக்கனத்திற்கு மூன்று,ஆறு மற்றும் பதினொன்றாம் இடம் மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்து சுபகிரகங்களால் பார்வைபெறும்போது மேலான பலனை தரும் என பராசர் கூறுகிறார்.
இதேபோல "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்துநின்றால் பூமேடைதனில் படுத்துறங்கும் ராஜயோகமாகும்"-
எனவே ராகுபகவானாது மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி மற்றும் மகரம் என ஐந்து ராசிகளில் ராகுபகவான் நின்று லக்ன சுபர்களால் ராகுதிசையில் மிகுந்த யோகத்தை வாரிவழங்கும்.
ராகு பகவான் கேந்திரகோணங்களில் நின்று வீடு கொடுத்தவன் பலம்பெற்றாலும் ராகு திசை யோகத்தை தரும்.
ராகு பகவான் மறைவு ஸ்தானங்களில் நின்று (3,6,8,12) அவருக்கு சாரம் தந்தவர் லக்கன யோகராகி உச்சம்,ஆட்சி மற்றும் கோணங்களில் நின்றால் ராகுதிசை யோகத்தை வழங்கும்.
ஒருவரது சாதகத்தில் இருள் கிரகமான ராகுபகவான் லக்கனத்தில் அமரமல் இருப்பது நலம் பயக்கும்.லக்கனத்தில் அமர்ந்த ராகு பகவான் களத்திர தடையையும் உருவாக்குவார்.லக்கனாதிபதி பலம்பெற்று இருப்பின் அதிக பாதிப்பு இல்லை.
ராகு பகவான் வாக்குஸ்தானத்தில் அமரும்போது நல்ல பேச்சுவன்மையும்,மற்றவரை மறைமுகமாக இருபொருள்பட சாதுர்யமாக பேசக்கூடியவராக்குகிறது.
மூன்றாம் இட ராகுபகவான் சாதகருக்கு நற்பலனை தருவார்.அதேநேரத்தில் சகோதரதோஷத்தினையும் தருவார்.மூன்றாம் இடத்தில் ராகுபகவான் அமர்ந்து தனது திசை நடைபெறும் காலங்களில் நல்ல முன்னேற்றங்களை வாழ்வில் தந்து புகழடைய செய்வார்.
நான்காம் இடத்தில் அமர்ந்த ராகுபகவான் தன் சுகம்,தாய் சுகம் மற்றும் கல்வியால் அடையும் சுகம் குறையும்.சொந்த வீடு அமைவதில் காலதாமதம் ஆகலாம்.
ஐந்தில் அமர்ந்த ராகுபகவான் புத்திரதோஷத்தினை தருவார்.ஐந்தாம் அதிபதியும்,புத்திரகாரகன் குரு பகவானும் பலப்படின் புத்திரதோஷத்திற்கு விதிவிலக்கு உண்டு.ஒரு சிலருக்கு பூர்வீக சொத்தால் பலம்பெறக்கூடிய யோகம் தடைபடும்.
ஆறில் ராகு அமரும்போது எதிரியை வெல்லும் வல்லமை உடையவராக்குகிறது.
ஏழில் அமரும் ராகுபகவான் அந்நிய உறவில் திருமணம்
நடை பெறும்.திருமணதடை ,மனதிற்கு பிடித்த மனைவி அமைவதில் சிக்கலை தரும்.கால தாமத மணம்,
கலப்பு மணம்,காதல் மணம் நடைபெறும் வாய்ப்பு உண்டு.
எட்டில் அமரும் ராகுபகவான் மறைமுக உண்மைகள்,மாந்ரீக உண்மைகளை ஒருவருக்கு புலப்பட வைப்பர்.இதன் திசை காலங்களில் வம்பு,சண்டை,வழக்குகளை தருவார்.
ஒன்பதாம் இட ராகு தந்தை வழி ஆதரவு தடைபடும்.தந்தை வழி சொத்துகளால் பலன் இல்லை.தான,தர்ம குணம் அற்றவராக காணப்படுவார்.
"பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும்" என்ற வகையில் பத்தாமிட ராகு ஒருவனை தலைசிறந்த அரசியல்வாதியாகவும்,கணிப்பொறி நிபுணராகவும்,ஷேர் மார்கெட்டில் கொடிகட்டி பறப்பவராகவும் திகழ்வார்.
தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாற்றுவார்.
உபஜெய ஸ்தானமான பதினொறாம் இட ராகு சாதகருக்கு நன்மைகள் பலவற்றை தனது திசையில் தருவார்.
பணிரெண்டில் ராகு அமரும்போது கடல்கடந்து செல்லும் யோகத்தை தருகிறது.
#ஸ்ரீராகுபகவானால் உண்டாகும் யோகங்கள்
ராகுவால் உண்டாகும் யோகங்கள் பல உண்டு..அவையாவன;-
1,)
பர்வதாயோகம்
2)
மகாசக்தி யோகம்
3)
சாம்ராஸ்யயோகம்
4)
அஷ்ட லெட்சுமியோகம்
5)
காலசர்ப்ப யோகம்
6)
பீஜயோகம்
7)
மகா கீர்த்தி யோகம்
8)
கிளர்யோகம்
9)
சண்டாள யோகம்
Image may contain: Ramesh Uma, sitting and indoor

நன்றி
(தங்களது சாதகப் பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647.
அன்புடன்,
Astro RsvichandranM.SC,MA,BEd,
PG Assistant(chemistry)
Astro Researcher.
Omsakthi jothida nillayam,
Pudukkottai-District.
Email : masterastroravi@gmail.com
Astro Ravichandran.blogspot. com