வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:04 AM | Best Blogger Tips
தொடர்புடைய படம்

- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.
- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- தொழிலில் பல சிக்கல்களும் இடயூறுகளும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

Image may contain: Ramesh Uma, sitting and indoorஇன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

Top of Form

நன்றி  பெ.சுகுமார்*