எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips
Image may contain: text

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

நன்றி நலமுடன்வாழ

                                                     நன்றி


திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:58 PM | Best Blogger Tips
No automatic alt text available.

இது திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.
கருவறையைவிட இந்த வாசல் அதிகமான உயரத்தில் இருப்பதால்,

கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரே ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டுதான் இருக்கும்.

ராஜ கோபுரத்தின் வாசல் மட்டுமல்ல, கோயிலின் மிக அருகே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் மட்டமும் கருவறையைவிட அதிகமான உயரத்தில்தான் இருக்கிறது.

இருந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது.

அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.

1649ல் திருசெந்தூர் கோயிலை சிலகாலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த டச்சு வீரர்கள், கோயிலைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள்.

இருப்பினும் சிறிதளவுகூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை.

அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.

அதிர்ந்துபோன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்துகொண்டு ஓடிவிட்டார்கள்!

இந்த நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த டச்சு வீரர் ஒருவர் தன்னிடம் இதை கூறியதாக ‘A Description, Historical and Geographical, of India (1785)’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரெனில் (M Rennel) குறிப்பிட்டுள்ளார்.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்கமுடியாமல் விட்டுப்போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்.


நன்றி இணையம்


பணத்தின் பின் ஓடியது போதும்..புற்று நோய் வர வேண்டாம் படியுங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
Image result for modi sikkim cm

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.

முதல்வரின் முழு முயற்சி
இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங்.

தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி.
உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ஆர்கானிக் ஸ்டேட்எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனைஎனவும் தடாலடியாக அறிவித்தார்.
 Image result for modi sikkim cm
வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆர்கானிக் ஸ்டேட் போர்டுஎன்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.

மத்திய மானியம் மறுப்பு
ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார்.

அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.
உயிர் கிராமங்கள் இதன் தொடர்ச்சியாக சிக்கிம் ஆர்கானிக் மிஷன்என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு பயோ வில்லேஜ்என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.

எடுபடாத எதிர்ப்பு
அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை6 சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.

வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத பயோ விஸ்கியையும் அங்கே தயாரிக்கிறார்கள்.

இயற்கை உரத் தொழிற்சாலை
பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது.

இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறதுஎன்கிறார் கார்வேந்தன்.

ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

எப்போது மீள்வோம்?

பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள்.

இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன.

ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையேஎன்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பினர்.

மெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது. தமிழகம்?

வாட்ஸ்அப்க்கு மிகப்பெரிய சக்தியை கொடுத்து இந்த செய்தியை தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கு ம்
தெரியப்படுத்த வேண்டும்.


 நன்றி இணையம்