பணம் மட்டுமே மன மகிழ்வன்று. ஏகப்பட்ட பணம்,
செல்வம், வசதி என்று
அனைத்தும் இருந்தும் மன உளைச்சலுடன் வாழ்பவர்கள் பலர்;
அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாய் உள்ள நிலையிலும் மகிழ்வுடன்
வாழ்பவர்களும் பலர்.
ஒரு தொழில் அதிபருக்கு அவரது பிஸினஸில் முக்கியப் பிரச்சனை. அவசரமான
மீட்டிங்கிற்காகத் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்
தங்க ஏற்பாடாகி இருந்தது.
பிரச்சனையின் மன உளைச்சலாலும் மறுநாள் நடக்கவிருந்த
மீட்டிங்கின் சிந்தனையாலும் பலவித குழப்பத்தில் இரவு தூக்கம் வராமல் தம் அறையில் உலாவிக்கொண்டிருந்தவர் சன்னலருகே
வந்து நகரை நோட்டமிட கீழே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணில்பட்டது. அங்கே ஓர் ஆட்டோ
ஓட்டுநர் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் நல்ல கனவு
போலிருக்கிறது. அவரது முகமெல்லாம் புன்னகை. பர்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது
தொழில் அதிபருக்கு.
மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது அந்த
ஸ்டாண்டில் அதே டிரைவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை அணுகித் தமது சந்தேகத்தைக் கேட்டார்.
“அதெப்படி, சாலை இரைச்சல், கொசுத் தொல்லை, பண வசதி குறைவான தொழில் என்றிருக்கும்போது
ஆனந்தமாய் உன்னால் தூங்க முடிகிறது?
கனவில் என்ன நடிகையா?
தூங்கும் முகத்தில் சிரிப்பையும் பார்த்தேன்.”
”ஓ அதுவா ஸார்? இந்த மாதிரிப் பெரிய ஹோட்டலில் என்
வசதிக்குத் தங்க முடியுமா? கனவில் நான் இந்த
ஹோட்டலில் தங்கியிருப்பது போலவும் அதோ போகிறானே அந்தச் சிப்பந்தி எனக்குப் பணிவிடை
செய்வது போலவும் அடிக்கடி கனவு வரும். மத்தபடி தினமும் சம்பாதிக்கிற பணத்துல
சந்தோஷமா இருக்கேன் ஸார்.”
எல்லாம் மனதில் இருக்கிறது.
நன்றி இணையம்