"தனக்கு
தொண்டு செய்ய விரும்பாத ஒருவரையும், தன்னை பார்க்க விரும்பாத ஒருவரையும் பற்றி பெரியவா சொன்ன
அதிசய
குருபக்தி சம்பவம்."
குருபக்தியில் சிறந்த இருவர்-கைகளாலும்,கண்களாலும் !!
மகா பெரியவாளிடம் கைங்கர்யம்
செய்யும்
பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம்
என்கிற
அன்பர்!.
"பேப்பர்,பேனா
எடுத்துவந்து, நான் சொல்வதை
எழுதிக்கொள்"
என்று மகாகாவ் என்னுமிடத்தில்
(குல்பர்கா
அருகில்) முகாமிட்டிருந்தபோது மகான் ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.
மகா பெரியவா தன் பதின்மூன்றாவது வயதில்
பட்டத்துக்கு
வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த
பரமாச்சார்யாரிடம் கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினார்களாம்.
அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து,
"இவர்தான்
முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம்
தோய்த்துக்
கொடுத்தவர்" என்று பெரியவாளிடம்
சொல்லிவிட்டு,
அவர்
பக்கம் திரும்பி,"இனிமேல் இவர்தான் நமக்குப் பெரியவா...உன்னோட வஸ்திர
கைங்கரியத்தை தொடர்ந்து பண்ணு!" என்று சொன்னார்.
ஆனால் அந்த அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக இருந்தது.
"நான் முந்தைய
பெரியவாளுக்கு கைங்கரியம் செய்த கைகளால் வேறு எவருக்கும் செய்ய இயலாது"
என்றார்.
இது தவிர,இன்னொன்றையும்
மகான் எழுதிக்கொள்ளச் சொன்னார்.
கலவையில் மகானின் முகாம்..பண்ருட்டியில் இருந்து ரெட்டியார்
ஒருவர் மடத்துக்கு நிறையக் காணிக்கை அனுப்பியிருந்தார்.
அத்துடன் தன் வணக்கத்தையும்
பெரியவாளுக்கு
சொல்லச் சொல்லி இருந்தார்.
"அவர் ஏன்
நேரில் வரவில்லை?" மகான் கேட்டார்.
அதற்கு காணிக்கை கொண்டுவந்தவர் சொன்ன பதில்;
"66-வது
பீடாதிபதியான குருவை தரிசனம் செய்த கண்களால், அவருக்குப்
பின்னர் வரும் குருவைத் தரிசிக்க மனம் ஒப்பவில்லை என்று ரெட்டியார் சொல்வார்"
இந்த இருவரின் குருபக்தியையும் மெச்சி,இது
எல்லோருக்கும்
தெரிய வேண்டும் என்றுதான்
ஏகாம்பரத்திடம்
சொல்லி எழுதவைத்தார்.
"இதை இப்படியே
ரேடியோவில் சொல்லும்படி
ஏற்பாடுசெய்!"
என்று பெரியவர் சொன்னார்.
ஆனால், குல்பர்காவில்
இருந்துகொண்டு எதையோ சொல்லி, அது
ரேடியோவில் வரவேண்டுமென்றால்
எப்படி?
எவ்வளவோ தடைகளைத் தாண்டியல்லவா
இவற்றை
ஒலிபரப்ப இயலும்? ஏகாம்பரம்,
"அது
முடியாத காரியம்!" என்று பெரியவாளுக்கு
நிலைமையை
விளக்கினார்!.
"சரி,
அதனால்
என்ன..பத்திரிகைகளிலாவது வரட்டுமே!
அதற்கான ஏற்பாட்டைச் செய்யேன்" என்றார்.
"சரி"
என்ற ஏகாம்பரம் ஓய்வெடுக்கப் போய்விட்டார்.
சற்று நேரத்துக்குள் ஏகாம்பரத்துக்கு
அழைப்பு
வந்தது.
மகாபெரியவாளைப் பார்க்க ஒரு குழு வந்திருந்தது.
அவர்களுக்காகத்தான் ஏகாம்பரத்தை வரவழைத்திருந்தார்
மகாபெரியவா.
"நான் காலையில்
சொன்ன குருபக்தியை ஒலிபரப்ப முடியுமானு இவாளிடம் கேட்டுப் பாரேன்!"-பெரியவா
குழுவில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்த ஏகாம்பரம்
வியப்பினால் ஸ்தம்பித்துப் போய்விட்டார்.
அவர்கள் அனைவரும் அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன்
டைரக்டர்கள்.
ஒரு டிரெயினிங்குக்காக வந்தவர்கள். மகான் இங்கு இருப்பதால்
தரிசிக்க
வந்திருக்கிறார்கள்.
மகானின் எண்ணப்படி,குருபக்தியில்
சிறந்த இருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி,
"இதை
ஒலிபரப்ப முடியுமா!"
என்று
அவர்களிடம் கேட்டார் ஏகாம்பரம்.
"இது
எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு....
உடனே அதற்கான ஏற்பாடு செய்கிறோம்...
இப்படி ஒரு நல்ல காரியத்துக்கு எங்களை உபயோகப்படுத்த மகான்
நினைத்தது
பெரும் பாக்கியம்!"
என்று
சொன்னவர்கள்
அன்றே
அதை ஒலிபரப்பவும் செய்தனர்.
பிரம்ம ஞானிகள் நினைத்தது நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு
உதாரணம் தேவையா?
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர
சங்கர ஜெய ஜெய சங்கர !!
மாலை வணக்கம் நண்பர்களே !!
என்றும் அன்புடன் !!
தெய்வீகம்
ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம்
ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி
ஓம் !! ஹரே கிருஷ்ணா !!
நன்றி இணையம்