பிரதமர் ஆற்றிய உரை....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips

 


 பிரதமர் ஆற்றிய உரை....

விபரம் கீழே.... முழுவதும் படியுங்கள் :

(பெட்ரோல் விலை)

 

"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

 

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.

 

இரான் 48000 கோடி.

ஐக்கிய அரபு எமிரேட் 40000 கோடி

இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி

இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி

இந்திய ரயில்வே 22000 கோடி

பி.எஸ்.என்.எல் 1500 கோடி.

 


நமது பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.

ஒரு போரை எதிர்த்துப் போராட வேண்டுமானால் 4 நாட்கள் கூட தாங்க முடியாத அளவு ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.

அது மட்டுமல்ல, உளவுத் துறை கூட ஒரு பெரிய தோல்வியாக இருந்தது. வெடிகுண்டுகள் எப்போது, ​​எங்கு வெடிக்கும் என்று யூகிக்க முடியாத நிலை இருந்தது.

 

நான் பொறுப்பேற்றபோது இதுதான் நிலைமை. அந்த நேரத்தில் எனது பிரதான பொறுப்பு அனைத்து அமைப்புகளையும் சரிப்படுத்துவது மற்றும் கடன் தொல்லையில் இருந்து மீழ்வது ஆகும்.

 

அதிர்ஷ்டாவசமாக  சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை விகிதங்கள் குறைந்துவிட்டிருந்தது. குறைக்கப்பட்ட விலைகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படாமல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

 

அதனால், என் மீது இவ்வளவு அன்பு கொண்டு இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் நீங்கள் என் மீது ஒரு சிறிய கோபம் கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உதவ முடியவில்லை. காரணம், நமது எதிர்கால தலைமுறைகளை மனதில் வைக்கவேண்டியிருந்தது.

 

முந்தைய அரசாங்கத்தின் தவறுகள் எங்களுக்கு போராட்டமாக மாற்றப்பட்டுள்ளன.

 

அவர்கள் ஆட்சி காலத்தில், எரிபொருள் விலை 120 டாலர்களாக இருந்தபோது அவற்றை  லிட்டருக்கு ரூ .85 க்கு விற்றனர். அது எப்படி சாத்தியம் ஆனது? கடனில் அந்த எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். பொது மக்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள்  விலையை அதிகரிக்கவில்லை. மானிய விலையில் விற்றதுடன் கடனையும் செலுத்தவில்லை.

 

இந்த வழியில் அவர்கள் 250000 கோடிக்கு வெளிநாட்டு கடன்களை வைத்திருந்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 25000 கோடியை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு 133000 கோடி கடன் வைத்து இருந்தார்கள்.

 

நம் நாடு மிகப்பெரிய கடன்களுக்குச் உள்ளாகி இருந்த நிலயில், தடையில்லாமல் எரிபொருளைப் பெற கடன்களைச் செலுத்த நாங்கள் கூறப்பட்டோம்.

 

பெட்ரோல் /டீசல் மீது மத்திய அரசு வரி வசூலிக்கப்பட்டதற்கான காரணம் இதுதான். அதனால்

இன்று நாங்கள் 250000 கோடி கடனை வட்டியுடன் முடித்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். (இது உங்கள் கடன். நாட்டு மக்கள் அனைவரின் கடன்)

 

ரயில்வே இழப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முந்தைய நிர்வாகங்கள் நிலுவையில் வைத்திருந்த அனைத்து கடன்களும் முடிவடைந்தன. புல்லட் ரயிலை மின்மயமாக்குவது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிலோமீட்டர் புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன.

150000 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன்களாக வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் 50 கோடி மக்களுக்கு 150000 கோடியுடன் தொடங்கப்பட்டது.

அனைத்து நவீன மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் நமது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது உங்கள் தியாகம். எரி பொருள் மீது நீங்கள் செலுத்திய மத்திய அரசு வரி மூலம் இவை சாத்தியம் ஆனது. நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் (you are part of the show).

 

நாம் வரியை அகற்றினால் என்ன? நம்மால் கடன்களை அடைக்கமுடியாதாஅடைக்க முடியும். ஆனால் மறைமுகமாக நாம் எல்லா விஷயங்களிலும் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது 130 கோடி மக்கள் அனைவருக்கும் சுமையாக இருக்கலாம். ஆனால்  எரி பொருள் விலை சுமை பெருமளவில் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும்.

 

கடைசியாக ஒரு விஷயம்.

உங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் பெரும் கடன்களில் இருக்கும்போது நீங்கள் அதிர்ஷ்டத்தால் பெற்ற பணத்தை என்ன செய்வீர்கள்??

நீங்கள் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீர்களா? அல்லது

கடன்களை அடைப்பீர்களா?

பொறுப்பற்ற முறையில் செலவிட்டால் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும்?

உங்களுக்கு கடன் கொடுத்த நபர் தொடர்ந்து மிகவும் பொறுமையாக இருப்பாரா? (நாடும் ஒரு குடும்பம் தான்)

 

இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமகனாக தயவுசெய்து நாட்டின் வளர்ச்சியில் என்றென்றும் கைகோருங்கள்.

 

எதிர்க்கட்சிகளின் வித்தைகளுக்குள் வீழ்ந்து விடாதீர்கள். இந்த எதிர்க்கட்சிகள் எப்போதுமே தேர்தல் எண்ணம் கொண்டவை, இப்போது வெவ்வேறு மாநிலங்களில் ஒரு தேர்தல் வரும்போதெல்லாம் தவறான பிரச்சாரங்களுடன் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன.

 

தயவுசெய்து சிந்தியுங்கள்!

 

தயவுசெய்து இதை அனைத்து இந்தியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

உங்கள்,

 

#நரேந்திர_மோடி...

 

பாரத் மாதா கி ஜெய்!!!



நன்றி இணையம்

சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips


 ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.


 பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.

-

🌿🌿🌿


சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


ஒருவனின் கல்வியை அவனது செயல்திறமையின் மூலமும், நல்ல குடும்ப கௌரவம் அவர்களின் செயல்கள் மூலமும், மரியாதைக்குரிய ஒருவனின் அடையாளம் அவரது நற்காரியங்கள் மூலமும், கோவத்தை கண்கள்

மூலமும் அறியலாம்.


🌿🌿🌿

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

……….

ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு வேறுபுருஷன் மீது ஆசை என்பது கொஞ்சமும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள்தாண்டமுடியாது.


🌿🌿🌿

திரிகடுகம்


🌿🌿🌿


உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.


🌿🌿🌿

கதை

..

மனதில் நினைக்க வேண்டியது!

-

ஒருமுறை பசுய் என்கிற ஜென் குரு தான் இறக்கும் நேரத்தில் தனது சீடர்களை அழைத்து, "மாணவர்களே! நீங்கள் எப்போதும் எதற்கும் கவலை கொள்ளக்கூடாது. அதிலும் இறப்பை கண்டு எந்த நேரமும் பயப்படக்கூடாது. ஏனெனில் நமது மனம் எந்த ஒரு சாராம்சம் கொண்டு பிறந்தது அல்ல. சொல்லப்போனால் மனதிற்கு எந்த ஒரு நிறம், வடிவம், இது தான் பிடிக்கும், சந்தோஷம் வந்தால் மகிழ்ந்தும், வருத்தத்தின் போது வலிகளும் கொள்வதில்லை. அவை அனைத்தும் நீங்கள் உணர்வதிலேயே இருக்கிறது. மேலும் உன் மனம் சரியில்லை என்றால் அதற்கு உடனே மனதை தளர விடாமல் இருக்க வேண்டும்.


அந்த நேரத்தில் மனம் சரியில்லையெனில், முதலில் உங்கள் மனதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் எதை எதிர் கொள்கிறீர்கள், எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உண்மையில் உங்களால் அறிய முடியும். மேலும் இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை, எதற்கும் பேராசை பட வேண்டாம். முக்கியமாக இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது. இந்த உலகில் பிறந்த அனைத்திற்கும் இறப்பு என்பதும் உண்டு" என்று கூறினார்.



பின் அவர்களிடம் "இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து வாழ்ந்தால், நீங்களும் ஒரு சிறந்தவராக இந்த உலகில் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழலாம்" என்று கூறி, மடத்தின் உள்ளே சென்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.

..

உங்கள் வாட்ஸ்அப் குழுவில் இன்றைய சிந்தனைகள் தினமும் இடம்பெற விரும்பினால் உங்கள் வாட்ஸ்அப் குழுவின் லிங்க்-யை எனக்கு அனுப்பி வையுங்கள்

..

சுவாமி வித்யானந்தர்



நன்றி இணையம்

சனாதன தர்மம்...🚩

மணக்கால் அய்யம்பேட்டை | 11:04 AM | Best Blogger Tips

 



படத்தில் உள்ளவர் பெயர் #ராவணாரி_தாஸ் .கிறிஸ்துவர் கூட அல்ல. இவர் பிறவி இஸ்லாமியர். அதுவும் அரேபிய நாட்டில் பிறந்த அரேபியர். அதுவும் மத போருக்கு பெயர் போன பாலஸ்தீனத்தில் பிறந்தவர்.

இவைகளை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், பாலஸ்தீன சுதந்திர இயக்கத்தில் ஒரு போராளி தலைவராக இருந்தவர்.

1973-ல் ஜெர்மனியில் #இஸ்கான் இயக்கத்தில் தொடர்ப்பு உண்டானது. 1975-ல் இந்தியா #பிருந்தாவனத்தில் #பக்திவேதாந்த_சுவாமியை முதன் முதலாக சந்தித்து அவரின் சீடரானார். முழுநேர பக்தரும் ஆனார்.

#பிரபுபாதா அவர்களின் கட்டளைக்கு ஏற்ப பகவத் கீதையை அரேபிய மொழியில் மொழி பெயர்த்தார். போர் மேகம் சூழ்ந்த பெய்ரூட் நாட்டில் #கிருஷ்ண_பக்தி பிரச்ச்சாரம் செய்து., ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் பட்டினியோடு அடித்தும் சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்த பட்டார்.

பிறகு விடுதலையாகி கனடா நாடு சென்று அங்கு முழுநேரமாக பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் அனைத்து புத்தகங்களையும் #அரேபிய மொழியில் மாற்றம் செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவர் மொழிபெயர்ப்பு செய்த கீதையே இப்போது இஸ்லாமிய உலகில் விற்கபட்டு கொண்டு உள்ளது.

எங்கேயோ ஒரு போர்மேகம் சூழ்ந்த இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியராக பிறந்து , போராளி இயக்கத்தில் இணைந்து போர் செய்து, பிறகு அதைவிட்டு விலகி , இறுதியாக கிருஷ்ண பக்தராக ஆகி, பல மொழி பெயர்ப்பு புத்தகங்கள் எழுதி தன் ஆச்சாரியாருக்கு சேவை செய்த இந்த பாகவதர் கடந்த மார்ச் ஒன்றாம் திகதி 2018 -ல் இவ்வுலகை விட்டு பிரிந்து கிருஷ்ணர் மலரடிகளில் இணைந்தார்.

இப்படிப்பட்ட சரித்திரங்கள் நிறையவே உண்டு.

இதுதான் நம் இந்துசமயம் என்கிற சனாதன தர்மம்...🚩

 


நன்றி இணையம்


முதுகு தண்டுவடம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

 








முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

* தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள்.

* அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள்.

* நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள்.

* சுருண்டு படுக்காதீர்கள்.

* கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள்.

* தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

* தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரதீர்கள்.

* டூ வீலர் ஓட்டும் போது, குனிந்து ஓட்டாதீர்கள்.

* பளுவான பொருட்களை தூக்கும் போது, குனிந்து தூக்காதீர்கள்.

* இரண்டு வேளையும், தலா, 20 முறை, கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

இவ்வாறு செய்து வந்தால், முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்.



நன்றி இணையம்

இதுதான் வாழ்க்கை !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

 



இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் !

இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.

முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்

இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு





தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.


இப்போது அவர்கள் பிரச்சினை

எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல

எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.

பரிசுப்பொருள்கள்

தெய்வப்படங்கள்


புகைப்பட ஆல்பங்கள்

ஆடைகள்

உள்ளாடைகள்

புத்தகங்கள்

இசைக்கருவிகள்

இசைப்பேழைகள்

ஸ்பூன்கள்

கண்ணாடிக் கோப்பைகள்

பொம்மைகள்

கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்

உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.

நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும்.

எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.

ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.

அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.

தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.

அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது.

எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.

கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.

சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள்.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.

ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ!

முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.

பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...

வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே, நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்... என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? ..

சிந்திப்போம்...

இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ எதை விட்டுச் செல்ல போகிறோம்...???

நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...???

இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல் நல்லவைகளை பேசி, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!

 


நன்றி இணையம்