சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:25 | Best Blogger Tips


 ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.


 பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.

-

🌿🌿🌿


சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


ஒருவனின் கல்வியை அவனது செயல்திறமையின் மூலமும், நல்ல குடும்ப கௌரவம் அவர்களின் செயல்கள் மூலமும், மரியாதைக்குரிய ஒருவனின் அடையாளம் அவரது நற்காரியங்கள் மூலமும், கோவத்தை கண்கள்

மூலமும் அறியலாம்.


🌿🌿🌿

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

……….

ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு வேறுபுருஷன் மீது ஆசை என்பது கொஞ்சமும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள்தாண்டமுடியாது.


🌿🌿🌿

திரிகடுகம்


🌿🌿🌿


உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.


🌿🌿🌿

கதை

..

மனதில் நினைக்க வேண்டியது!

-

ஒருமுறை பசுய் என்கிற ஜென் குரு தான் இறக்கும் நேரத்தில் தனது சீடர்களை அழைத்து, "மாணவர்களே! நீங்கள் எப்போதும் எதற்கும் கவலை கொள்ளக்கூடாது. அதிலும் இறப்பை கண்டு எந்த நேரமும் பயப்படக்கூடாது. ஏனெனில் நமது மனம் எந்த ஒரு சாராம்சம் கொண்டு பிறந்தது அல்ல. சொல்லப்போனால் மனதிற்கு எந்த ஒரு நிறம், வடிவம், இது தான் பிடிக்கும், சந்தோஷம் வந்தால் மகிழ்ந்தும், வருத்தத்தின் போது வலிகளும் கொள்வதில்லை. அவை அனைத்தும் நீங்கள் உணர்வதிலேயே இருக்கிறது. மேலும் உன் மனம் சரியில்லை என்றால் அதற்கு உடனே மனதை தளர விடாமல் இருக்க வேண்டும்.


அந்த நேரத்தில் மனம் சரியில்லையெனில், முதலில் உங்கள் மனதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் எதை எதிர் கொள்கிறீர்கள், எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உண்மையில் உங்களால் அறிய முடியும். மேலும் இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை, எதற்கும் பேராசை பட வேண்டாம். முக்கியமாக இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது. இந்த உலகில் பிறந்த அனைத்திற்கும் இறப்பு என்பதும் உண்டு" என்று கூறினார்.



பின் அவர்களிடம் "இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து வாழ்ந்தால், நீங்களும் ஒரு சிறந்தவராக இந்த உலகில் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழலாம்" என்று கூறி, மடத்தின் உள்ளே சென்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.

..

உங்கள் வாட்ஸ்அப் குழுவில் இன்றைய சிந்தனைகள் தினமும் இடம்பெற விரும்பினால் உங்கள் வாட்ஸ்அப் குழுவின் லிங்க்-யை எனக்கு அனுப்பி வையுங்கள்

..

சுவாமி வித்யானந்தர்



நன்றி இணையம்