படத்தில் உள்ளவர் பெயர் #ராவணாரி_தாஸ் .கிறிஸ்துவர் கூட அல்ல. இவர் பிறவி இஸ்லாமியர்.
அதுவும் அரேபிய நாட்டில் பிறந்த அரேபியர். அதுவும் மத போருக்கு பெயர் போன
பாலஸ்தீனத்தில் பிறந்தவர்.
இவைகளை விட பெரிய அதிர்ச்சி
என்னவென்றால், பாலஸ்தீன சுதந்திர இயக்கத்தில் ஒரு போராளி தலைவராக
இருந்தவர்.
1973-ல் ஜெர்மனியில் #இஸ்கான் இயக்கத்தில்
தொடர்ப்பு உண்டானது. 1975-ல் இந்தியா #பிருந்தாவனத்தில் #பக்திவேதாந்த_சுவாமியை முதன் முதலாக சந்தித்து அவரின் சீடரானார். முழுநேர
பக்தரும் ஆனார்.
#பிரபுபாதா அவர்களின்
கட்டளைக்கு ஏற்ப பகவத் கீதையை அரேபிய மொழியில் மொழி பெயர்த்தார். போர் மேகம்
சூழ்ந்த பெய்ரூட் நாட்டில் #கிருஷ்ண_பக்தி பிரச்ச்சாரம் செய்து., ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பல நாட்கள்
சிறையில் பட்டினியோடு அடித்தும் சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்த பட்டார்.
பிறகு விடுதலையாகி கனடா நாடு
சென்று அங்கு முழுநேரமாக பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் அனைத்து புத்தகங்களையும் #அரேபிய மொழியில்
மாற்றம் செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவர் மொழிபெயர்ப்பு செய்த கீதையே
இப்போது இஸ்லாமிய உலகில் விற்கபட்டு கொண்டு உள்ளது.
எங்கேயோ ஒரு போர்மேகம் சூழ்ந்த
இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியராக பிறந்து
, போராளி இயக்கத்தில் இணைந்து போர் செய்து, பிறகு அதைவிட்டு விலகி , இறுதியாக கிருஷ்ண பக்தராக ஆகி, பல மொழி பெயர்ப்பு புத்தகங்கள் எழுதி தன்
ஆச்சாரியாருக்கு சேவை செய்த இந்த
பாகவதர் கடந்த மார்ச் ஒன்றாம் திகதி
2018 -ல் இவ்வுலகை விட்டு பிரிந்து
கிருஷ்ணர் மலரடிகளில் இணைந்தார்.
இப்படிப்பட்ட சரித்திரங்கள்
நிறையவே உண்டு.
இதுதான் நம் இந்துசமயம் என்கிற
சனாதன தர்மம்...
நன்றி இணையம்