காதல் சாஸ்திரம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:36 PM | Best Blogger Tipsகாதலர் தினம். உலகமே கொண்டாடுகிறது. பரிசு பொருட்களையும் வாழ்த்துகளையும் பரிமாறிய வண்ணம் இருக்கிறார்கள் காதல் ஜோடிகள். கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா? முதலில் வந்தது முட்டையா.. கோழியா? என்பது போல காதலிலும் ஒரு சந்தேகம் தீரா கேள்வி. காதல் வந்ததால் மனித குலம் தோன்றியதா.. மனித குலம் தோன்றிய பிறகு காதல் வந்ததா? ஆகமொத்தம்.. எதிர்ப்புகள் இருந்தாலும் மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. ஜோதிட கலையை, ஜோதிட சாஸ்திரத்தை மிகப்பெரிய கடலுக்கு ஒப்பாக சொல்வார்கள். எந்த விஷயத்துக்கும் அசைக்க முடியாத தீர்வுகள் இந்த கலையில் இருக்கின்றன.

ஏதோ ராசிபலன், நாள், நட்சத்திரம், பொருத்தம், தோஷம் என்ற அளவில்தான் சாதாரண மக்களுக்கு இந்த கலை பரிச்சயம். ஆனால் மகரிஷிகள், யோகீஸ்வரர்கள் எழுதி வைத்து நமக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளின்படி தனி மனிதனின் யோக அவயோகங்களை பற்றி மட்டுமின்றி, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் தன்மைகள், செயல்பாடுகளையும் நாம் ஜோதிடம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்க்கை என்பதே சுகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு வகையில் சுகம் கிடைக்கிறது. தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், ரசித்தல் என எல்லாமே ஒருவகை சுகம்தான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணர்ச்சியும், சுகமும் உள்ளது. அந்த வகையில் மனிதனுக்கு இந்த உணர்ச்சி, சுகம், காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அமைப்புகள் ஆகியவை பொதுப் பலன்களாகும். பண்டைய நூல்கள் பலவற்றில் கூறப்பட்ட கருத்துகளின் சாராம்சமே இங்கு கூறப்பட்டுள்ளது. சிலருக்கு ஒத்துப்போகும். சிலருக்கு ஒத்துப்போகாமலும் இருக்கலாம்.

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

 சுக்கிரன்:


இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்:


இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனிசந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகுசனி, சுக்கிரன்கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள்.

ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள். ராகுகேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகுகேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.


சுக்கிரன்  செவ்வாய் ஆகாத கூட்டணி

ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?


பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது.  இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது.

இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ‘ஜோதிட முரசு’
மிதுனம் செல்வம்

தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:21 PM | Best Blogger Tips


கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?

குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.

மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு என்றுச் சொல்லும் மகப்பேறு மருத்துவர்கள் மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினர்.

இந்த விடயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.

முதலில் தற்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்றால் தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருவுற்ற பின்பு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என்று ஒருபோதும் நினைக்காமல் ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.

டொக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.

திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும்.


அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.

விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.

கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

எந்த விடயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.

வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும் ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும் அனைத்து டாக்குமென்ட்களையும் திகதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.

மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது.

இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை மறவாதீர்கள்.

பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.

 குழந்தை பிறந்த பின்னர் சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.

ஒரு குழந்தைக்கும், மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.

உளவியல்ரீதியில் பல பயனுள்ள விடயங்களை பார்ப்போம்

திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள்.

இல்லையெனில் குழந்தை பிறந்த பின்னர் 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?’ என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.

கர்ப்பமான பின்னர், நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை நமக்கு இதில் என்ன இருக்கிறது? என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.

மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.

சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை.

சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.

'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும். 


Via அறிவியல்

ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:16 PM | Best Blogger Tips

பெரும்பாலான மக்கள் தமது சருமம், தலைமுடி மற்றும் நகங்களைப் பராமரிப்பது குறித்து அறிந்திருப்பார்கள். ஆனால், அழகுக் கலையுலகத்தைப் பொறுத்தவரையில், அறிந்திருப்பது என்பது, பொதுவான அறிவுரையாகவோ அல்லது, தவறானதொரு அறிவுரையைப் பின்பற்றுதலாகவோ தான் இருக்கும். அதாவது, நமக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் எப்படி செய்வது என்று தான் தெரிந்திருக்காது அல்லது எப்படி முறையாக செய்வது என்று தெரிந்திருக்காது.

நீங்கள் இப்போது என்ன செய்வது என்றும், அதனை எப்படி முறையாகச் செய்வது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். மேலும், அழகு பற்றிய ரகசியங்களையும், அழகுக்கலை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு ரகசியங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சரும க்ளின்சர்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம் 

சருமத்தை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் க்ளின்சர்கள் ஆரோக்கியமான சருமத்தில் கூட எரிச்சலை ஏற்படுத்தலாம். சருமம் மென்மையானதா அல்லது பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதா என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். பயன்படுத்தும் க்ளின்சர்கள், சருமத்திற்கு எவ்வித எரிச்சலையோ, இறுக்கத்தையோ தராமல், அழுக்கையும், மிகையான எண்ணெய் பசையையும் கரைத்து, சுத்தம் செய்யுமா என்று மட்டும் பாருங்கள்.


எக்ஸ்ஃபோலியஷனை தவிர்க்க கூடாது 

சருமத்தின் மேற்புறத்தில் உள்ள படலத்தை உரித்து சுத்தம் செய்யும் எக்ஸ்ஃபோலியஷன் (Exfoliation) என்னும் முறையினால், சருமப் பராமரிப்புக் க்ரீம்கள் சருமத்தினுள் ஊடுருவி, தனது வேலையை நன்கு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும் சருமம் பளிச்சென்று பொலிவுடன் திகழும். சருமம் பளபளப்புடன் திகழ எக்ஸ்ஃபோலியஷன் மிக அவசியம். முகத்தில் பருக்களோ, சிவந்த தடிப்புகளோ உள்ளவர்கள், தோல் மருத்துவரின் அனுமதியுடன் சாலிசிலிக் அமிலம் கொண்டு எக்ஸ்ஃபோலியஷன் செய்யவும்.


ரெடினாய்டுகளைப் பயன்படுத்தவும் 

ரெடினாய்டுகள் அல்லது ரெடினால்கள், வைட்டமின் ஏ சார்ந்த வேதிப்பொருள்கள் ஆகியவை பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுபவை. ஃபேஷியல் செய்வதற்கு மிகவும் உகந்தவை. இவை, சருமத்தின் மேல்பகுதி, உட்பகுதியை தடிமனாக்கி, இறந்து போன சரும செல்களை நீக்கி, கெராட்டினோசைட்டுகளின் அளவைப் பெருக்கி, மூட்டுக்கள், தசைகள், மற்றும் சருமம் ஆகியவற்றுக்கிடையே உயவுப்பொருளாக பயன்படும், உடலில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கார்போஹைட்ரேட்டான, கொலாஜென் மற்றும் ஹயலுரானிக் அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. ஆனால் ரெடினாய்டுகள் நமது சருமத்தினை மிகவும் மென்மையாக்கி, சூரியவெளிச்சம் பட்டாலே மிகவும் கூச்சப்படச் செய்யும். ஆகவே இதனை இரவில் மட்டும் பயன்படுத்தி அதிக பலனைப் பெறுங்கள்.


சர்க்கரையைப் பயன்படுத்தவும் 

ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)


உடலை ஸ்கரப் செய்யவும் 

முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை. வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும். ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும்.


நகத்தை அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ளவும் 

கால் நகங்களையும், கை நகங்களையும் அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷொவர் ஜெல்லை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, அதில் கைகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை நகங்கள் புதிது போலாகும். (மெனிக்யூர் என்றால் கை விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்) மேலும் பெட்ரோலியம் ஜெல்லை பாதங்களில் தடவி அதன்மேல் பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், பாதங்கள் குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் போல் ஆகியிருக்கும். (பெடிக்யூர் என்றால் கால் விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்)


தலைமுடியின் ஈரப்பதத்தைப் பேணுங்கள் 

சிக்குப் படிந்த அல்லது வறண்ட கூந்தலை ஈரப்பதத்துடன் பேணுவதற்கு, கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. என்னதான் நிலைநிறுத்தும் கண்டிஷனரைப் பயன்படுத்தினாலும், ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். கண்டிஷனரையோ, ஆலிவ் எண்ணெயையோ தலைமுடியின் நுனியிலிருந்து தடவத் தொடங்க வேண்டும். அதுவும் தலைமுடியின் நடுப்பகுதி வரை தடவ வேண்டும். மயிர்க் கால்களில் தடவக் கூடாது. ஏனெனில் ஸ்கால்ப் ஆனது மயிர்க்கால்களுக்குப் போதுமான எண்ணெயை இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்டிஷனர் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால், அது ஸ்கால்பின் பணியைச் செய்யவிடாமல் தடுக்கலாம்.


உண்மையிலேயே பொடுகினைத் தடுக்க முயற்சிக்கவும் 

பொடுகினைத் தடுக்கும், பொடுகிலிருந்து முற்றிலும் விடுதலை அளிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஷாம்புக்கள் அனைத்தும் உண்மையிலேயே பொடுகிலிருந்து விடுதலை அளிப்பவை அல்ல. பெரும்பாலான மக்கள் பொடுகு என்பது வறண்ட ஸ்கால்ப்பினால் வருவது என்று நினைக்கிறார்கள். தலைமுடியை நீரில் சரியாக அலசாமல் இருப்பதினாலோ, தவறான ஷாம்புக்களைப் பயன்படுத்தியதன் காரணமாக தலையில் படிவுகள் படிந்ததினாலோ, ஸ்கால்ப் வறண்டு போகலாம். இம்மாதிரியான நிலைமைக்கு பொடுகை போக்கும் ஷாம்புக்கள் பலன் தராது. பொடுகுத் தொல்லை நீங்கவில்லை என்றால், தலைமுடியை இன்னும் அதிக நேரம் நீரில் நன்றாக அலசவும். மேலும், பயன்படுத்தும் ஷாம்புவை நிறுத்திவிட்டு, தரம் உயர்ந்த ஷாம்புவைப் பயன்படுத்திப் பார்க்கவும்குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும் 

குட்டைக் கூந்தல் வைத்துக் கொள்வது ஃபேஷனாக இருந்தாலும், குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும். ஆகவே இளமையுடன் தோற்றமளிக்க விரும்பினால் குட்டையான கூந்தல் தான் முதல் எதிரி ஆகும். குட்டைக் கூந்தல் இளமையான தோற்றத்தைத் தராது. எனவே கூந்தலை நீளமாகப் பேணுங்கள். காதுக்கு அருகில் சற்று அதிகமாக முடி இருந்தால், அது கழுத்தின் மென்மைத் தன்மையைக் கூட்டி, இளமை எழிலையும் கூட்டிக் காட்டும். .

மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் — உபயோகமான தகவல்கள் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:37 PM | Best Blogger Tips


மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!


தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.
* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?
## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.
* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?
## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?
## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
Via இன்று ஒரு தகவல்

இளமையை காக்கும் கொட்டைக்கரந்தை!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:09 PM | Best Blogger Tips
இளமையை காக்கும் கொட்டைக்கரந்தை!

புரதம் நம் உடலுக்கு மிகவும் அவசியமானதாகும். இரத்தத்தில் இந்த புரதமானது அல்புமின் மற்றும் குளோபிளின் என்ற வடிவத்தில்

பிளாஸ்மா திரவத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த புரதங்கள் உடல் வலிமையை கூட்டவும், செல் வளர்ச்சியை சீர்படுத்தவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இம்மியுனோ குளோபுளின்களின் பலவகையான பரிணாம மற்றும் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

புரதங்களின் பல அவதாரங்களில் ஒன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தியாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ஆன்டிஜன் ஆன்டிபாடி செயல்பாட்டை கட்டுப்படுத்தும் புரத அமைப்பானது சீராக இல்லையயனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் ஆட்டோ இம்மியுன் என்று சொல்லப்படும் சுய குறை நோய் எதிர்ப்புத் தன்மையால் பலவகையான தொற்று நோய்களும் தன்னிச்சையான குறை எதிர்ப்பு சார்ந்த நோய்களும் உண்டாகின்றன.

நோய் எதிர்ப்பு குறைவால் கழுத்து, அக்குள், அடிவயிறு, தொடையிடுக்கு பகுதிகளில் உள்ள லிம் திரவ முடிச்சுகளில் நெறி கட்டுகின்றன. அடிக்கடி சளி பிடித்தல், சுரம் உண்டாதல் போன்ற சுவாச நோய்கள் தோன்றுகின்றன. தோல் வறட்சி, சோரியாசிஸ், கரப்பான், அத்திக்காய் குட்டம் போன்ற தோல் நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தான் உண்டாகின்றன. இவை தவிர மாறி, மாறி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் சர்வாங்கி வாதம் போன்ற மூட்டு அழற்சி நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அதிகப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய் நோயாளிகள் மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் பலவித தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். நாட்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடல் உருக்குலைதல், எடை மாற்றம், பொதுவான உடல் பலஹீனம், எளிதில் பல நோய்களுக்கு ஆட்படுதல் போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இளம் வயதிலேயே முதுமையைப் போன்ற உருவ மாற்றம் ஏற்படுகிறது. இளநரை, பார்வை குறைபாடு, தோல் வறட்சி, தோல் சுருக்கம், மடிப்புள்ள பகுதிகளில் சதை தொங்குதல் போன்ற பல குறைபாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளினால் பக்கவிளைவுகளினாலும் தோன்றுகின்றன. இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் தற்சமயம் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு ஆளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொட்டைக்கரந்தை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன.

பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.

புரதம் நம் உடலுக்கு மிகவும் அவசியமானதாகும். இரத்தத்தில் இந்த புரதமானது அல்புமின் மற்றும் குளோபிளின் என்ற வடிவத்தில்

பிளாஸ்மா திரவத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த புரதங்கள் உடல் வலிமையை கூட்டவும், செல் வளர்ச்சியை சீர்படுத்தவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இம்மியுனோ குளோபுளின்களின் பலவகையான பரிணாம மற்றும் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

புரதங்களின் பல அவதாரங்களில் ஒன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தியாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ஆன்டிஜன் ஆன்டிபாடி செயல்பாட்டை கட்டுப்படுத்தும் புரத அமைப்பானது சீராக இல்லையயனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் ஆட்டோ இம்மியுன் என்று சொல்லப்படும் சுய குறை நோய் எதிர்ப்புத் தன்மையால் பலவகையான தொற்று நோய்களும் தன்னிச்சையான குறை எதிர்ப்பு சார்ந்த நோய்களும் உண்டாகின்றன.

நோய் எதிர்ப்பு குறைவால் கழுத்து, அக்குள், அடிவயிறு, தொடையிடுக்கு பகுதிகளில் உள்ள லிம் திரவ முடிச்சுகளில் நெறி கட்டுகின்றன. அடிக்கடி சளி பிடித்தல், சுரம் உண்டாதல் போன்ற சுவாச நோய்கள் தோன்றுகின்றன. தோல் வறட்சி, சோரியாசிஸ், கரப்பான், அத்திக்காய் குட்டம் போன்ற தோல் நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தான் உண்டாகின்றன. இவை தவிர மாறி, மாறி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் சர்வாங்கி வாதம் போன்ற மூட்டு அழற்சி நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அதிகப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய் நோயாளிகள் மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் பலவித தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். நாட்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடல் உருக்குலைதல், எடை மாற்றம், பொதுவான உடல் பலஹீனம், எளிதில் பல நோய்களுக்கு ஆட்படுதல் போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இளம் வயதிலேயே முதுமையைப் போன்ற உருவ மாற்றம் ஏற்படுகிறது. இளநரை, பார்வை குறைபாடு, தோல் வறட்சி, தோல் சுருக்கம், மடிப்புள்ள பகுதிகளில் சதை தொங்குதல் போன்ற பல குறைபாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளினால் பக்கவிளைவுகளினாலும் தோன்றுகின்றன. இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் தற்சமயம் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு ஆளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொட்டைக்கரந்தை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன.

பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.
 
நன்றி ஆரோக்கியமான வாழ்வு

 

பசும்பொன் தேவர் அய்யா !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:06 PM | Best Blogger Tips
"எனக்காக எதையும் எதிர்ப்பார்த்து , எதையும் சொல்லுவதோ, எழுதுவதோ, பேசுவதோ இல்லை.
நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.

பலர் வாழ சிலர் தியாகம் செய்து-கஷ்டப்படுவது புனிதமான அரசியல்.இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் புனித அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக் கதிக்கு கொண்டு போய் விட்டார்கள்! 

தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!
இதில் என்னை எதிரியாக கருதுகிறவர்கள் கூட மாறுபட முடியாது!
எழுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்கேயன்றி எனக்காக இல்லை! "......................பசும்பொன் தேவர்
"எனக்காக எதையும் எதிர்ப்பார்த்து , எதையும் சொல்லுவதோ, எழுதுவதோ, பேசுவதோ இல்லை.
நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.

பலர் வாழ சிலர் தியாகம் செய்து-கஷ்டப்படுவது புனிதமான அரசியல்.இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் புனித அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக் கதிக்கு கொண்டு போய் விட்டார்கள்!

தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!
இதில் என்னை எதிரியாக கருதுகிறவர்கள் கூட மாறுபட முடியாது!
எழுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்கேயன்றி எனக்காக இல்லை! "......................பசும்பொன் தேவர்
நன்றி மதுரை இந்து

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:04 PM | Best Blogger Tips
தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

 காரணம் தெரியாமல் தேநீர் குடிக்கலாமா? 

 தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 பல் சொத்தை
 தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில் இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும். எப்படியெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளை உண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் ஃபுளோரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையில் அதை சரி செய்ய உதவும்.

 எடை குறைவு
 க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது. இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமாக வயிற்று பகுதியில்), உடல் எடை குறையும்.

 புற்றுநோய்
 தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற்காக செய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இதனை இன்னும் உறுதியாக சொல்லாவிட்டாலும், தேநீரில் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில் உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

 உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்
 தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும் சரியில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். பதிலாக தண்ணீருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களும் உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்கின்றனர். எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் பருகலாம்.

 தமனித் தடிப்பை குறைக்கும்
 தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்பு குறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 வாதத்திற்கும் நிவாரணி
 பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர் பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

 நரம்பியல் நோய்களைத் தடுக்கும்
 பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீனால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்ற நரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும். மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

 புரோஸ்டேட் புற்றுநோய்
 இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன் டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

 எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்
 க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும் அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.காரணம் தெரியாமல் தேநீர் குடிக்கலாமா?

தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பல் சொத்தை
தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில் இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும். எப்படியெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளை உண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் ஃபுளோரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையில் அதை சரி செய்ய உதவும்.

எடை குறைவு
க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது. இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமாக வயிற்று பகுதியில்), உடல் எடை குறையும்.

புற்றுநோய்
தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற்காக செய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இதனை இன்னும் உறுதியாக சொல்லாவிட்டாலும், தேநீரில் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில் உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்
தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும் சரியில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். பதிலாக தண்ணீருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களும் உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்கின்றனர். எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் பருகலாம்.

தமனித் தடிப்பை குறைக்கும்
தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்பு குறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாதத்திற்கும் நிவாரணி
பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர் பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும்
பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீனால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்ற நரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும். மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்
இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன் டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்
க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும் அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 
Via சுபா ஆனந்தி

கறை நீக்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips
பொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத்தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒருசில கறைகள் துணிகளில் படிந்தால், அவற்றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செயல். கறைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை. மென்மையான கறைகளை எளிதில் போக்கிவிடலாம். ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே கஷ்டமானது.

குறிப்பாக கடினமான கறைகளில் மை, இரத்தம், காபி, கிரீஸ் மற்றும் துரு முதலானவை அடங்கும். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கறையை நீக்குவதற்கான வழிமுறையை கையாளும் போது ஒரு கறையை நீக்குவதற்கான வழிமுறை மற்ற கறையை நீக்காது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். சரி, இப்போது எந்த கறைகளை எப்படி நீக்கினால் எளிதில் போய்விடும் என்பதைப் பார்ப்போமா!!!மை கறை

படி 1: ஹேர் ஸ்ப்ரே கொண்டு கறை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும்.
படி 2: பின் 5 நிமிடம் கழித்து, அதனை நன்கு துவைத்து உலர்த்த வேண்டும்.
படி 3: துணியை உலர்த்தியில் போடும் முன்பதாக கறை நன்றாக நீக்கப்பட்டுவிட்டதா என்று பார்க்க வேண்டும். கறை சிறிது நீக்கப்படாமல் இருந்தாலும், உலர்த்தியின் வெப்பத்திற்கு கறையானது துணியில் நிரந்தரமாக படிந்து விடும்.

இரத்த கறை

படி 1: இரத்தக் கறை துணியில் படிந்தவுடன் உடனடியாக துணியை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். பின்பு வினிகரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து, ஒத்தடம் கொடுக்கவும். (தேய்க்கக்கூடாது)
படி 2: இரத்தம் போகும் வரை ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கவும்
படி 3: பின்பு வினிகர் வாசனை போகும் வரை நீரில் அலசி எடுக்கவும்.

காபி கறை

படி 1: போராக்ஸ் (Borax) மற்றும் நீர் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும்.
படி 2: இந்த கலவையை காபி கறை படிந்த இடத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருக்கவும்.
படி 3: நீரில் நன்கு அலசிய பிறகு வழக்கம் போல் சலவை செய்யவும்.

எண்ணெய் பசை/க்ரீஸ் கறை

படி 1: அழுக்கு நீக்கும் எரி சாராய கரைசலை (Rubbing Alcohol) கறை படிந்த இடத்தில் ஒரு சுத்தமான துணியில் நனைத்து வைக்கவும். (தேய்க்க வேண்டாம்)
படி 2: கறை நீங்கும் வரை தொடர்ச்சியாக, அதன் மேல் வைத்திருக்க வேண்டும்.
படி 3: பின்னர் பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்டை இதன் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் துவைத்து வழக்கம் போல சலவை செய்யவும்.

துரு கறை

படி 1: டார்டார் க்ரீமை (cream of tartar) கறையின் மீது வைத்து கசக்கவும். பிறகு டார்டார் க்ரீம் கறையின் மீது இருக்குமாறு வைத்து துணியை மடிக்க வேண்டும்..
படி 2: ஒரு பாத்திரத்திலோ அல்லது தொட்டியிலோ சுடு நீர் நிரப்பி துணியை அதில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
படி 3: பின்னர் நன்றாக அலசி, வழக்கம் போல் துணியை சலவை செய்யவும்.
பொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத்தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒருசில கறைகள் துணிகளில் படிந்தால், அவற்றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செயல். கறைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை. மென்மையான கறைகளை எளிதில் போக்கிவிடலாம். ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே கஷ்டமானது.
குறிப்பாக கடினமான கறைகளில் மை, இரத்தம், காபி, கிரீஸ் மற்றும் துரு முதலானவை அடங்கும். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கறையை நீக்குவதற்கான வழிமுறையை கையாளும் போது ஒரு கறையை நீக்குவதற்கான வழிமுறை மற்ற கறையை நீக்காது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். சரி, இப்போது எந்த கறைகளை எப்படி நீக்கினால் எளிதில் போய்விடும் என்பதைப் பார்ப்போமா!!!மை கறை

படி 1: ஹேர் ஸ்ப்ரே கொண்டு கறை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும்.
படி 2: பின் 5 நிமிடம் கழித்து, அதனை நன்கு துவைத்து உலர்த்த வேண்டும்.
படி 3: துணியை உலர்த்தியில் போடும் முன்பதாக கறை நன்றாக நீக்கப்பட்டுவிட்டதா என்று பார்க்க வேண்டும். கறை சிறிது நீக்கப்படாமல் இருந்தாலும், உலர்த்தியின் வெப்பத்திற்கு கறையானது துணியில் நிரந்தரமாக படிந்து விடும்.

இரத்த கறை

படி 1: இரத்தக் கறை துணியில் படிந்தவுடன் உடனடியாக துணியை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். பின்பு வினிகரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து, ஒத்தடம் கொடுக்கவும். (தேய்க்கக்கூடாது)
படி 2: இரத்தம் போகும் வரை ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கவும்
படி 3: பின்பு வினிகர் வாசனை போகும் வரை நீரில் அலசி எடுக்கவும்.

காபி கறை

படி 1: போராக்ஸ் (Borax) மற்றும் நீர் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும்.
படி 2: இந்த கலவையை காபி கறை படிந்த இடத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருக்கவும்.
படி 3: நீரில் நன்கு அலசிய பிறகு வழக்கம் போல் சலவை செய்யவும்.

எண்ணெய் பசை/க்ரீஸ் கறை

படி 1: அழுக்கு நீக்கும் எரி சாராய கரைசலை (Rubbing Alcohol) கறை படிந்த இடத்தில் ஒரு சுத்தமான துணியில் நனைத்து வைக்கவும். (தேய்க்க வேண்டாம்)
படி 2: கறை நீங்கும் வரை தொடர்ச்சியாக, அதன் மேல் வைத்திருக்க வேண்டும்.
படி 3: பின்னர் பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்டை இதன் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் துவைத்து வழக்கம் போல சலவை செய்யவும்.

துரு கறை

படி 1: டார்டார் க்ரீமை (cream of tartar) கறையின் மீது வைத்து கசக்கவும். பிறகு டார்டார் க்ரீம் கறையின் மீது இருக்குமாறு வைத்து துணியை மடிக்க வேண்டும்..
படி 2: ஒரு பாத்திரத்திலோ அல்லது தொட்டியிலோ சுடு நீர் நிரப்பி துணியை அதில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
படி 3: பின்னர் நன்றாக அலசி, வழக்கம் போல் துணியை சலவை செய்யவும்.
 
Via பறையோசை

உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:01 PM | Best Blogger Tips
மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது
கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க தர்பூசணியை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது கோடைக்கு மட்டுமல்ல எப்போது சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு ஏற்றது என்பதை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த தர்பூசணி பழச்சாற்றில் `சிட்ருல்லின்' என்ற மகத்துவம் மிக்க ரசாயன பொருள் அடங்கி இருக்கிறது என்றும், அது இருதய கோளாறு, எடை அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே இந்த தர்பூசணியை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வரலாம் என யோசனை தெரிவிக்கின்றார்கள்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.
தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.
வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூஸ்.
ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படிச் செய்து வர.. சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது!
வறண்ட சருமத்தினருக்கு வேறு சிகிச்சை சொல்கிறேன்.. வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.
எண்ணெய்ப் பசை சருமத்தினர் 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.
தர்பூசணி மட்டுமல்ல.. அதன் விதையும்கூட அருமையான மருந்து! கூந்தலை பராமரிப்பதில் அதற்குப் பெரும்பங்கு இருக்கிறது. அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.
தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.
கூந்தலின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது தர்பூசணி விதை.
சீயக்காய் - 100 கிராம், தர்பூசணி விதை - 100 கிராம். வெட்டிவேர் - 20 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம்.. இவற்றை உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரால் தலையை அலசி வர, பட்டுப் போல மின்னும் கூந்தல்.
சிலருக்கு முகத்தில் பழுப்பு நிற மங்குகள் தோன்றி அழகை கெடுக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வைத் தருகிறது தர்பூஸ்.
ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது தர்பூசணி.
2 டீஸ்பூன் கடலை மாவு () பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.
பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.
இதில் இருக்கிற 'வைட்டமின் டி' சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.
ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
இதில் 'ஃபோலிக் ஆசிட்' நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.
மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.
இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி.
பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது. நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மையும் கூட. இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.
தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!
* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். * தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.
* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.
* இதில் உள்ள வைட்டமின் , சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.
* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.
இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும். இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல்,விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை. பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம்.பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.
பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 3 எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சர்க்கரை - தேவையான அளவு ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு செய்முறை: முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும். பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!! குறிப்பு: இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். - கார்பனேடட் வாட்டர் என்று சொல்லப்படும் சோடா(club soda/ sparkling water) கலந்தும் சாப்பிட நன்றாக இருக்கும்.
தர்பூசணி மாதுளை ஜூஸ்
சிவப்பு நிறமுடைய விதையில்லாத மாதுளை முத்துக்கள் - அரை கப், தோல் விதை நீக்கிய தர்பூசணி துண்டுகஷீமீ - 1 கப் ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன்.
பழங்கள் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ரோஸ் சிரப்,சர்க்கரை சேர்த்து கலக்கி குளிர வைத்து பரிமாறவும்.
மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

வாட்டர் மெலன் ஃபிஷ் தேவை
வாட்டர் மெலன் நறுக்கியது -4கப் எலுமிச்சம்பழம்-1 சீனி-தேவையான அளவு க்ளப் சோடா-1/2லிட்டர் ஐஸ் க்யூப்ஸ் -சிறிது
செய்முறை
வாட்டர் மெலனின் விதைகளை எடுத்து விட்டு, சீனியோடு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்க்கவும். ஒரு கண்ணாடி ஜக்கில் இந்த ஜுஸை ஊற்றி க்ளப் சோடாவையும் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி ஸ்குவாஷ்
தேவை
தர்பூசணியின் சிவப்பு பகுதி-500கிராம் சர்க்கரை-500கிராம் எலுமிச்சம் சாறு-2டீஸ்பூன் சிவப்புக் கலர்-1சிட்டிகை தண்ணீர்-1/2லிட்டர்
செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிவப்புக் கலரை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். அரை லிட்டர் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க வைத்து, எலுமிச்சம் ஜுஸையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை வைக்கவும். பின்னர் இறக்கி ஆறியதும் வடிகட்டி தர்பூசணி ஜுஸ§டன் கலந்து ஸ்டெரிலைஸ் செய்த பாட்டிலில் ஊற்றி மூடவும். இந்த ஸ்குவாஷை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.
வாட்டர் மெலன் சர்பத் தேவை வாட்டர் மெலன்- 1/2 சீனி-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்-தேவையான அளவு செய்முறை தர்பூசின் தோலை சீவி சிவப்பு கலர் பகுதியை மட்டும் விதைகளை எடுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் வாட்டர் மெலன் துண்டுகள், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து பருகவும்.

தர்பூசணி சர்பத் தேவை
ஸ்ட்ரா பெர்ரி -1கப் தர்பூசணி-3கப் இஞ்சி விழுது-1/2டீஸ்பூன் சீனி-3டே.ஸ்பூன் செய்முறை தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஸ்ட்ராபெரியின் காம்புகளை எடுத்து விட்டு, தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் ஸ்ட்ரா பெர்ரி, தர்பூசணி, இஞ்சி, சீனி சேர்த்து அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி தக்காளி சாலட்
தேவை
தர்பூசணி சிறியது-1 தக்காளி-4 புதினா காம்புடன்-2
ட்ரஸ்ஸிங்
ஆலிவ் ஆயில்-2டே.ஸ்பூன் வினிகர்-2டீஸ்பூன் புதினா இலை-1டே.ஸ்பூன் மிளகுத்தூள்-தேவையான அளவு உப்பு-தேவையான அளவு சீனி-1டீஸ்பூன்
செய்முறை
ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி வைக்கவும். தர்பூசணியின் தோலை நீக்கி, விதைகளை எடுத்து விட்டு அதன் சிவப்பு பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு சாலட் பவுலில் தர்பூசணி, தக்காளி, கலந்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறும் சமயம் காம்புடன் உள்ள புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

மெலன் சாலட்
தேவை
தர்பூசணி-1கப் கிர்ணிப்பழம் -1கப் தேன்-2டீஸ்பூன் வெல்லம்-தேவையான அளவு எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்
செய்முறை
தர்பூசணியின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிர்ணிப் பழத்தின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேன், வெல்லம், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறவும்.
தேவையென்றால் பரிமாறும் போது மிளகுத்தூளை தூவிக் கொள்ளவும்.

Via ஆரோக்கியமான வாழ்வு