கற்பூரத்தில் நிறைய மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:17 | Best Blogger Tips




கற்பூரத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் இருந்து வெளிவரும் நறுமணத்திற்கு காரணம், இதில் உள்ள கெமிக்கல் தான். கற்பூரம் சாமி கும்பிடும் போது மட்டும் பயன்படாமல், சில அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதுவும் முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதனால் தான் அது ஆயுர்வேத அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும் அதிக முகப்பருக்கள் மற்றும் பிம்பிளால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரத்தை கொண்டு சரிசெய்யலாம். இதுப் போன்று கற்பூரம் அழகிற்கு கேடு விளைவிக்கும் பல பிரச்சனைகளைப் போக்குவதற்கு, பெரிதும் உதவியாக உள்ளது. இப்போது கற்பூரத்தை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

சரும அரிப்பு



சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளான அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்குவதற்கு, கற்பூரத்தை பொடி செய்து, பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால் குணமாகும்.

தழும்பு தீயினால் ஏற்பட்ட தழும்பைப் போக்குவதற்கு, கற்பூரத்தில் சிறிது நீரை ஊற்றி கலந்து, தழும்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால், அதன் வெளிப்பாடு குறையும். குறிப்பாக, தழும்பானது புதியதாக இருந்தால், அதற்கு இதனை செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், அது காயத்தை இன்னும் தீவிரமாக்கி, எரிப்பை ஏற்படுத்தும்.

முகப்பரு



முகப்பருவை போக்குவதற்கு கற்பூரம் சிறந்த பொருள். அதற்கு கற்பூர எண்ணெயை முகப்பரு மற்றும் பிம்பிள் உள்ள இடத்தில் தடவி வந்தால், பருக்கள் மற்றும் பிம்பிளை போக்கலாம்.



முடி உதிர்தல்

முடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, கற்பூரம் முடி உதிர்தலையும் தடுக்கும். இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதனால் பலருக்கு வழுக்கை கூட ஏற்பட்டுள்ளது. எனவே அதனை போக்குவதற்கு, கற்பூர எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் முடியின் தடவி மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்தலை தடுப்பதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.


முக்கிய குறிப்பு
                                    
கற்பூரத்தில் மிகவும் அதிகமான அளவில் நறுமண கொண்ட கெமிக்கல் 
உள்ளதால், இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல 
முடியாது. எனவே இதனை பயன்படுத்துவதற்கு முன் நன்கு யோசிக்க 
வேண்டும். ஏனெனில் கெமிக்கல் பொருட்களால் அழற்சி உள்ளவர்கள்
இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

நன்றி தட்ஸ்தமிழ்