தெய்வமகன் பாடல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:45 PM | Best Blogger Tips
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு..

பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு..

ஓ தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்,

ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்,

இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே,

கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே,

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.

ஆரிரோ…

முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே

மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே..

வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே,

பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே,

இது போல் ஆனந்தம் வேறில்லையே,

இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே..

ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே..

விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே.

ஆரிரோ…

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்..

கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்..

அடடா தெய்வம் இங்கு வரமானதே,

அழகாய் வீட்டில் விளையாடுதே,

அன்பின் விதை இங்கே மரமானதே,

கடவுளைப் பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே..

பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே..

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
@[341839099237748:274:அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா?]

கோடையிலும் கொண்டாட்டம் - சோர்வு நீங்கி புத்துணர்வு பெற ஐந்து டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:39 PM | Best Blogger Tips

சாப்பிட வேண்டியவை - பழங்கள், காய்கறிகள், நீர் மோர், நுங்கு, இளநீர், தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெரி, திராட்சை,ஆரன்ஞ், லெமன், க்ரீன் டீ மற்றும் நிறைய தண்ணீர். மேற்சொன்ன பழங்களில் ஆன்டி ஆக்சினெட்டுக்குள் இருப்பதால் நம் உடலிலிருந்து வியர்வை மூலம் வெளியேறிய சத்துக்கள் மீண்டும் கிடைக்கும்.

தவிர்க்க வேண்டியவை - காரமான உணவுகள், ஜன்க் ஃபுட்ஸ், தயிர், குளிர்பானங்கள்.

இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்துவிட்டு, சீக்கிரம் உறங்கச் சென்றுவிட வேண்டும்.

நன்றாக உறக்கம் வர, தண்ணீரில் நான்கு சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் விட்டு குளிக்கலாம். அருமையான நறுமணத்தில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

படுக்கையில் மெல்லிய காட்டன் விரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

நல்ல சத்தான உணவை சாப்பிட்டு, இரவு எட்டு மணி நேரம் உறங்கி , மறுதினம் உற்சாகமாக எழுந்தால் அந்த நாள் முழுவதும் துளி சோர்வு கூட‌ நம்மை அண்டாது. அப்பறம் என்ன? கொண்டாடங்களுக்கு குறைச்சல் இருக்காது!

சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:39 PM | Best Blogger Tips
சிவலிங்க வழிபாடும் அறிவியல் சொல்லும் உண்மையும் !!

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் இந்து மதமும் -

அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பிட்யூட்டரி சுரப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும் 

1. கோவிலின் அமைப்பு
2. பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம்
3.பிட்யூட்டரி சுரப்பி
4.மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம் .

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:38 PM | Best Blogger Tips

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

via Mannargudi Banukumar

தமிழ் இலக்கணம்: புணர்ச்சி விதிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips

வாழை மரம்: இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.

நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.

வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி

இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப் புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.

பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
பல + பல = பலபல
சில + சில = சிலசில

இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
பல + பல = பலப்பல
சில + சில = சிலச்சில

இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
பல + பல = பற்பல
சில + சில = சிற்சில

இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன. இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிகுந்தும், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும். மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பிற சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.

இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
பல + கலை = பலகலை ; பல்கலை
பல + சாலை = பலசாலை ; பல்சாலை
பல + தொடை= பலதொடை ; பஃதொடை
பல + மலர் = பலமலர் ; பன்மலர்
பல + நாடு = பலநாடு ; பன்னாடு
பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
சில + மலர் = சிலமலர் ; சின்மலர்
சில + வளை = சிலவளை ; சில்வளை
சில + அணி = சிலவணி ; சில்லணி

இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :

பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்இயல்பும், மிகலும், அகரம் ஏகலகரம் றகரம் ஆகலும் பிறவரின்அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
- (நன்னூல் நூற்பா - 170)

(விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)

திசைப் பெயர்ப் புணர்ச்சி:
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும்.
ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.

திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்குவடக்கு + மேற்கு = வடமேற்குவடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்குடக்கு + திசை = குடதிசை(மேற்கு)குணக்கு + திசை = குணதிசை(கிழக்கு)
இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.

தெற்கு + கிழக்கு = தென்கிழக்குதெற்கு + மேற்கு = தென்மேற்குதெற்கு + குமரி = தென்குமரிதெற்கு + பாண்டி = தென்பாண்டி
இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

மேற்கு + காற்று = மேல்காற்று
மேற்கு + ஊர் = மேலூர்
இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

கிழக்கு + கடல் = கீழ்கடல்
கிழக்கு + நாடு = கீழ்நாடு
இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.

மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா பின்வருமாறு :

திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
- (நன்னூல் நூற்பா - 186)

மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி:
நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.

இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
- (நன்னூல் நூற்பா - 135)

மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க:

1. நல்லன் = நன்மை + அன் வெண்பட்டு = வெண்மை + பட்டு வெண்குடை = வெண்மை + குடை செம்மலர் = செம்மை + மலர்
இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.

2. பெரியன் = பெருமை + அன் சிறியன் = சிறுமை + அன்
பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.

3. மூதூர் = முதுமை + ஊர் பாசி = பசுமை + இ
முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று.பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.

4. பைங்கொடி = பசுமை + கொடி பைந்தார் = பசுமை + தார்
இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.

5. சிற்றூர் = சிறுமை + ஊர் வெற்றிலை = வெறுமை + இலை
இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.

6. வெவ்வேல் = வெம்மை + வேல் வெந்நீர் = வெம்மை + நீர்
இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.

7. செங்கோல் = செம்மை + கோல் செந்தமிழ் = செம்மை + தமிழ்
இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.

மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.

ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
- (நன்னூல் நூற்பா - 136)

மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.

விதி எடுத்துக்காட்டு
1. ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை
2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
3. ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்
4. அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில்= பைம்பொழில்
5. தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்
6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
7. இனம் மிகல் - செம்மை + தமிழ் = செந்தமிழ்

உடலும் உயிரும்:

தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர்
கடவுள் + அருள் = கடவுளருள்
பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்

நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.

இதற்குரிய விதி,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
-(நன்னூல் நூற்பா - 204)
பூப்பெயர்ப் புணர்ச்சி
பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை = பூம்பாவை

பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.

இதற்குரிய விதி,
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
- (நன்னூல் நூற்பா - 200)
மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
(பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
பூ + கூடை = பூக்கூடை)

தேங்காய் - புணர்ச்சி:
தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’ (தென்னை) என்பதாகும்.
தெங்கு + காய் = தேங்காய்
‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.

இதற்குரிய விதி,
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்
என்பதாகும்.
தனிக்குறில் முன் ஒற்று
கண் + ஒளி = கண்ணொளி
பண் + ஓசை = பண்ணோசை
மண் + ஓசை = மண்ணோசை

இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும்.
(கண்ண்+ ஒளி = கண்ணொளி)
இதற்குரிய விதி,

தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

என்பதாகும்.

உடம்படுமெய்

மணி + அடித்தது = மணியடித்தது. (இ)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (ஈ)
வாழை + இலை = வாழையிலை (ஐ)
நிலா + அழகு = நிலாவழகு (வ)
சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)

நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பிய் யகரம் வகரம் ஆகிய இரண்டுஉடம்படுமெய்களும் தோன்றும்.

உடம்படுமெய் விதியாவது,

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.

உடம்படுமெய் ஒரு விளக்கம் :
இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்” என்பதறிக.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும்:
தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகாஇடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.
எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்தபொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.

வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை

3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
அவ்வகை + காடு = அவ்வகைக்காடு
இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்

4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
மற்ற + கலைகள் = மற்றக்கலைகள்
மற்று + சிலை = மற்றுச்சிலை
மற்றை + பயன் = மற்றைப்பயன்

5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மோர் + குடம் = மோர்க்குடம்
மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல்
தயிர் + பானை = தயிர்ப்பானை
தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி

6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மரம் + பெட்டி = மரப்பெட்டி
இரும்பு + தூண் = இரும்புத் தூண்
தங்கம் + தாலி = தங்கத்தாலி

7. “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
குடை + கம்பி = குடைக்கம்பி
சட்டை + துணி = சட்டைத்துணி

8. “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
அடுப்பு + புகை = அடுப்புப்புகை
விழி + புனல் = விழிப்புனல்

9. “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
புது + குடம் = புதுக்குடம்
வட்டம் + பலகை = வட்டப்பலகை
பொய் + செய்தி = பொய்ச்செய்தி

10. ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.
வேழம் + கரும்பு = வேழக்கரும்பு
தாமரை + பூ = தாமரைப்பூ
மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்

11. ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்
பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
மலை + தோள் = மலைத்தோள்

12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.
அரை + காணி = அரைக்காணி
அரை + படி = அரைப்படி
பாதி + பங்கு = பாதிப்பங்கு
அரை + தொட்டி = அரைத்தொட்டி
பாதி + செலவு = பாதிச்செலவு

13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
திரு + கோவில் = திருக்கோவில்
புது + பை = புதுப்பை
பொது + சாலை = பொதுச்சாலை

14. “தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
வினா + குறி = வினாக்குறி
பலா + பழம் = பலாப்பழம்

15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்’ பின்வரும் வல்லினம் மிகும்.
கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்
அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்
போய் + பார் = போய்ப்பார்

16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்
பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்
முன்னர் + செல்க = முன்னர்ச்செல்க
பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்

17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
பட்டு + சேலை = பட்டுச்சேலை
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது
இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?
எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?

2. ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?

3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?
அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?
யாரே + கண்டார் = யாரே கண்டார்?

4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
பெரிய + பெண் = பெரிய பெண்
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
நில்லாத + செல்வம் = நில்லாத செல்வம்
அழியாத + கல்வி = அழியாத கல்வி

5. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
ஒன்று + கேள் = ஒன்று கேள்
ஒரு + பொருள் = ஒரு பொருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவை = இரு பறவை
மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்
நான்கு + பேர் = நான்கு பேர்
ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்
ஆறு + கோவில் = ஆறு கோவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்
ஏழு + பிறப்பு = எழு பிறப்பு
ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்

6. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.கல + கல = கலகல சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்
பள + பள = பளபள
தீ + தீ = தீதீ பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்தொடர்கள்

7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
கற்க + கசடற = கற்க கசடற
வெல்க + தமிழ் = வெல்க தமிழ்
வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்

8. ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
பல + பசு = பல பசு
சில + கலை = சில கலை
அவை + தவித்தன = அவை தவித்தன

9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
வா + கலையரசி = வா கலையரசி
எழு + தம்பி = எழு தம்பி
போ + செல்வி = போ செல்வி
பார் + பொண்ணே = பார் பெண்ணே !

10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவனொடு கண்ணகி வந்தாள்.
துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.
அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்.

11. ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.
காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
உண்ணிய + சென்றாள் = உண்ணிய சென்றாள்
12. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.
13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
மலையினின்று + சரிந்தது = மலையினின்று சரிந்தது.

14. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
விரி + சுடர் = விரிசுடர்
பாய் + புலி = பாய்புலி

15. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
காய் + கனி = காய்கனி
தாய் + தந்தை = தாய்தந்தை

16. ‘அது, இது’ என்னும் சட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.

17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?

18. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
கண்ணா + பாடு = கண்ணா பாடு.
அண்ணா + கேள் = அண்ணா கேள் !

19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.
எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
போற்று + தல் = போற்றுதல்
நொறுக்கு + தல் = நொறுக்குதல்

20. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்
சங்கீத + சபா = சங்கீத சபா

மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:10 PM | Best Blogger Tips

மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்கள்:-

அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருக்கின்றது.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும்.
அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.
கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும்.
சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.
புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.
கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும்.
கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும்.
எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும்.
ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும்.
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
வெண்ணை ஆண்மையை பெருக்கும்.
நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.
கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும்.
தேன் கண்களுக்கு நல்லது.
நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது.
கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.
குழந்தைகள், வாத நோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.
அவல் பலத்தை அதிகரிக்கும்.
கோதுமை ஆண்மையைப் பெருக்கும்.
வெந்தயம் கசப்புச் சுவை உடையது. சீதக்காய்ச்சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவைத் தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.
அதேபோல் ஜவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது.
பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது.
வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.
பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியைத் தந்து, ஆண்மையைப் பெருக்கும்.
பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.
பெருங்காயம் தேக வாயுவைக் குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும்.
மிளகு இருமல், சளியைக் குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும்.
இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும்.
கத்தரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது.
கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும்.
மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.
தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது.
வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருக்கின்றது.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும்.
அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.
கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும்.
சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.
புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.
கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும்.
கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும்.
எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும்.
ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும்.
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
வெண்ணை ஆண்மையை பெருக்கும்.
நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.
கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும்.
தேன் கண்களுக்கு நல்லது.
நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது.
கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.
குழந்தைகள், வாத நோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.
அவல் பலத்தை அதிகரிக்கும்.
கோதுமை ஆண்மையைப் பெருக்கும்.
வெந்தயம் கசப்புச் சுவை உடையது. சீதக்காய்ச்சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவைத் தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.
அதேபோல் ஜவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது.
பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது.
வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.
பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியைத் தந்து, ஆண்மையைப் பெருக்கும்.
பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.
பெருங்காயம் தேக வாயுவைக் குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும்.
மிளகு இருமல், சளியைக் குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும்.
இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும்.
கத்தரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது.
கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும்.
மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.
தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது.
வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:08 PM | Best Blogger Tips

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

தர்மத்தின் பாதையில் வந்த வீரத் தமிழர்கள், உண்மை தமிழர்கள் நாங்கள். இன்றோ ?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips

இவன் என் பாட்டன் இவன் வழி தவறாமல் வந்தவன் நான்.

உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி,
போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!

பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு
வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின்
அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!

ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை
கூறியிருந்த எம் தமிழினம் !!

உலோகம் பற்றி ஏனைய நாடுகள் அறியாத காலத்தில்
அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!

பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!

அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே பாடிய எம் தமிழினம் !!

பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்
சித்தவைத்தியத்தையும் தந்த எம் தமிழினம் !!

ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும்
(கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து
விவசாயம் செய்த எம் தமிழினம் !!

இன்னும் எண்னில் அடங்கா மேன்மை
வாய்ந்த எம் தமிழினம் இன்று,

தன் முன்னே சொந்த சகோதரர்(ரி)கள் சாகக்கண்டும்,
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?

'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும்,அரவணைத்து கொண்டது ஏனோ?

தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய
வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?

அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும்
அடிமைகளானது ஏனோ?

தமிழன் என்ற கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து
தமிழன் என்று சொல்லக்கூட தயங்குவது ஏனோ?
10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம் மேன்மையை, அறிவை.

800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும்,
ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா?
இந்நிலை மாற வேண்டாமா?

நம் அடிமை மோகம் தனிய வேண்டாமா?

இழந்த மேன்மையை மீட்க வேண்டாமா?

ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..
விழித்து எழுவோம் !! வீறு கொண்டு எழுவோம் !!

தமிழினத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்து
உலகினுக்கு உரக்கச் சொல்வோம் !!.

இழந்த மேன்மையை அடைவதற்கான
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!

தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய
இன்னும் பல சாதனை செய்வோம் !!

நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!

பின் விடியல் பிறக்கும் நம் தமிழுக்கும், நம் தமிழினத்திற்கும் !!

வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips
நண்பர்களே இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் ...

வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்

குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.

ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.

மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கும் உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க விண்ணப்பிக்கும் தமிழ் உள்ளங்கள்...................

பிரதோஷ காலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை
பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம் வர வேண்டும்.

அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.

இணைய தளங்களை முடக்கும் நவீன வலைத் திருடர்கள் – ‘ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை’ விழிப்புணர்வு தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips

இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கை வரிசையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதோடு மட்டுமல்லாமல், முழுமையாக அழித்து முடக்கும் முயற்சிகளில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்காக இந்த வலைத் தள திருடர்கள் பயன்படுத்தும் வழிகளாக மின்னஞ்சல், போலியாக உருவாக்கப்பட்ட பதிவிகள் உரலிகள் மற்றும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் போன்றவைகள் இருக்கிறது. இவற்றில் மிகப் பிரதானமாக அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை பாதுகாக்க ஒரு சில வழிகள் உண்டு.

இணையத் திருடர்களின் இழிவான செய்கைகள் :

சமீபத்தில் ‘பங்களாதேஷ் சைபர் ஆர்மி’ என்னும் இணைய முடக்கர்கள் (ஹேக்கர்ஸ்) இந்தியாவின் அரசு சார்ந்த சுமார் 20,000 இணைய தளங்களை முடக்கிச் சீர்குலைத்த விபரம் தெரிய வந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணைய தளமான www.bsf.nic.in உள்பட, பங்குசந்தையின் www.paisacontrol.com போன்ற பல பிரதான இணையதளங்களும் இவற்றில் அடங்கும். ‘பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ்’ எனும் இக்குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, செயலிழக்கச் செய்து இணையப் போர் ஒன்றைத் தொடுத்தது, இணைய வரலாற்றில் கரும் புள்ளியாக காட்சி தருகிறது.

இந்த நவீன திருடர்கள், தங்களது இணைய பக்கத்தில், முன் கூட்டியே தைரியமாக, ‘நாங்கள் திருடப் போகிறோம்’ என்று செய்தி வெளியிட்டு திருடுவது வழக்கமாகி விட்டது. வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே தான், இந்த 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தகவல் வேறு தெரிவித்திருந்தனர். இவ்வாறு பலி தீர்ப்பதற்காகவும், தனி நபர்களின் அசுர வளர்ச்சிகளை பொறுக்க மாட்டாமலும் கூட, கூலிப் படைகளாக இந்த ஹேக்கர்ஸ்கள் ஏவி விடப்படுகின்றனர்.

வலை தள திருடர்களின் கைவரிசையில் சிக்கிய ‘இன்று ஒரு தகவல்’ :

சமூக வலை தளமான பேஸ் புக் எனப்படும் முகப் புத்தகத்தில் மிகச் சிறப்பாக, நல்ல பல செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் ‘இன்று ஒரு தகவல்’ குழுமம் கடந்த ஆண்டு ‘PASSWORD HACKING’ என்றழைக்கப்படும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் மூலம், ஹேக்கிங் செய்யப்பட்டு, தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது. இது முகப் புத்தக பயனீட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ‘கற்றது கை மண் அளவு’ என்பதை அறிவுறுத்திக் கொண்டிருக்கும் இந்த இன்று ஒரு தகவல் முகப் பக்கத்தின் மறைவு, புதிய அத்தியாயத்தின் துவக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் பதிவுகள் தொடர்ச்சியாக நண்பர்களிடம் இருந்து வெளியாயின .

அதன் பின்னர் இணைய தொழில் நுட்ப நண்பர்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக பின்னர் செய்தி வெளியாகியது, அனைவருக்கும் மன நிம்மதியை தந்தது. பல தவறான முன்னுதாரனங்களையும் தாண்டி, ‘இன்று ஒரு தகவல்’, ‘இனியொரு விதி செய்வோம்’ போன்ற சமூக வலை தள பக்கங்கள், இது போன்ற வலை தள திருடர்களின் குறும்புகளையும் தாங்கி கொண்டு, மேலும் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

அதே போல் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளம் (LINKED IN) லின்க்டுஇன். இந்த லின்க்டுஇன் வலைத்தளத்தினை பயன்படுத்தும் பலரது பாஸ்வேர்டுகள் சமீபத்தில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த சமூக வலைத்தளம் மிகுத்த பாதுகாப்பு வளையத்தை, தன் பயனீட்டாளர்களுக்கு வழங்கியது.

‘ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை’ – என்ன செய்யலாம் ?

மிக நுட்பமாக கை தேர்ந்த இந்த வலை தள திருடர்களிடமிருந்து, சமூக வலை தள பக்கங்களையும், பிளாக்குகளையும், மின்னஞ்சல் பதிவுகளையும். மதி நுட்பத்துடன் பாக்துகாக்க, நாம் பின் வரும் வழி முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது.

1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வேறு தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ (images) வேறு விதமாகவோ கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு username[at]gmail.com ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மின்னஞ்சல் முகவரிகளை சேகரிப்பதற்காகவே நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை மின்னஞ்சல் முகவரி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் News letterல் சேருமாரும் அல்லது சில கோப்புக்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானது தானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை கைத் தொலை பேசிகளில் பயன் படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற கைத் தொலை பேசிகளுக்கான மென் பொருள்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Passwordஐ கொடுக்க வேண்டும்.

இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான மின்னஞ்சல்கள் வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மின்னஞ்சல் முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மின்னஞ்சல்கள் வரும்.

5. சில சமயம் ஆபாசகவும் மின்னஞ்சல்கள் வரும். அது போன்ற மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மின்னஞ்சல்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். பிறகு நமது பணம் களவாடப்படும்.

6. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று மின்னஞ்சல்களை பார்ப்பதாக இருந்தால் “Keep Me signed in”, “Keep me logged in” என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

7. உங்களுடைய இரகசிய குறியீடுகளை, மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி கொள்வது அவசியம்.

முடிவுரை :

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வுக் கூடம் தீயினால் பெரும் சேதம் அடைந்தது. தன்னுடைய நூறுக்கணக்கான ஆய்வு குறிப்புகள், சோதனைப் பொருள்கள் எல்லாம் தீயில் பொசுங்குவதை பார்த்த எடிசன் அவர்கள் “என்னுடைய 24 ஆண்டு தவறுகள் எல்லாம் அழிந்து விட்டது. நான் இன்று முதல், புதியதாய் முயற்சிகளை விதைகளாக்கி வெற்றிகளை குவிப்பேன்” என உறுதி மொழி பூண்டு, அதன் பிறகே, எடிசன் அவர்களால் மனித குலத்திற்கு அத்தியாவதியமாக இன்று கருதப்படும் கண்டுபிடிப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

ஆகவே இணையத்தில் சிறப்பாக ஆக்கப் பூர்வ சிந்தனைகளை, அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வண்ணம், வழங்கி கொண்டிருக்கும் முகம் தெரியா நண்பர்கள், தொய்வில்லாமல் தங்கள் பணியை தொடர வேண்டும். ‘திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த திருடர்கள் தங்கள் விசமப் பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே நேரம் வலை தள உபயோகிப்பாளர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும் .

மனித வாழ்வின் தொடக்கமே தோல்வியில் இருந்து தான் தொடங்கியது. ‘சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரை தான் மனித வாழ்வு’ என்பதை மறக்கக் கூடாது.

நன்றி
கீழை இளையவன்

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..